++ டெட் தேர்வு அறிவிப்பு எப்போது? ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
Screenshot_2020_1205_210512
டெட் தேர்வு அறிவிப்பு எப்போதென போட்டியாளர்கள் மத்தியில் எதிர்பார்ப்பு அதிகரித்துள்ளது . மத்திய அரசு இல வச கட்டாய கல்வி சட் டத்தை கொண்டு வந்த பிறகு இடைநிலை மற்றும் பட்டதாரி ஆசிரியர்கள் பணியிடங்கள் டெட் எனப்படும் ஆசிரியர் தகுதித் தேர்வின் மூலம் நிரப்பப்படுகிறது . தமிழகத்தில் முதன் முதலாக 2012 ல் டெட் தேர்வு நடத் தப்பட்டது . 

பிறகு 4 முறை நடத் தப்பட்டுள்ளது . தற்போது ஆசிரியர் பணிக்கு 40 வயதிற்கு மேல் உள்ளவர்கள் எழுதமுடியாது என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டுள் ளது . அதேநேரத்தில் டெட் சான்று வாழ்நாள் முழுவதும் செல்லும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது . தற்போது பி.எட் படிப்பானது 2 ஆண்டுகளாக உள்ளது. கொரோனா காரணமாக தேர்வு அறிவிப்புகள் காலதாமதமாகி வருகிறது . 

ஆனால் , தமிழ்நாடு சீருடை பணியாளர் குழு மம் 12 ஆயிரம் 2 ம் நிலை காவலர் நியமனத்திற்கு அறிவிப்பு வெளியிட்டு வரும் 13 ம் தேதி நடைபெற உள்ளது. ஆசிரியர் பணிக் கான வயது வரம்பில் கட் டுப்பாடுகளை ஆசிரியர் தேர்வு வாரியம் கொண்டு வந்துள்ள நிலையில் தேர்வுகளுக்கான அறிவிப்பு தாமதமானால் மேலும் மாணவர்களுக்கு வயது கூடும் . வாய்ப்புகளை இழக்க நேரிடும் . இது குறித்து ஆயக்குடி இலவவ பயிற்சி மைய நிர்வாகி ராமமூர்த்தி கூறியதாவது , அதுமட்டுமின்றி இந்தாண்டு அரசு பள்ளியில் ஏராளமான மாணவர்கள் புதிதாக சேர்ந்துள்ள நிலையில் நிறைய ஆசிரியர்களும் தேவைபடும் நிலை ஏற்பட்டுள்ளது. எனவே , ஆசிரியர் தேர்வு வாரியமும் , தமிழக அரசும் காலம் தாழ்த்தாமல் டெட் தேர்விற்கான அறிவிப்பை வெளியிட வேண்டுமென போட்டியாளர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .

1 comment:

  1. ஏற்கனவே தகுதியான ஆசிரியர்கள் பலர் ஆசிரியராக பணியில் அமர்த்தாமல் தகுதியில்லாத பலரை வருடம்தோறும் தனியார் பள்ளிகள் ஊதியம் குறைவாக தரலாம் என்ற காரணத்துக்கு பணியில் அமர்த்துகிறார்கள். அரசும் அவர்களை வஞ்சித்து விட்டது. Tasmac வருமானம் அளவிற்கு Tet தேர்வு விண்ணப்ப கட்டணம் மூலம் வசூல் பண்ண போறாங்க

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...