தேசிய அளவிலான மருத்துவக்
கலந்தாய்வில் உள்ள 132 எம்பிபிஎஸ் மற்றும் 19 பல்மருத்துவப் படிப்புக்கான
இடங்கள் தமிழ்நாட்டிற்குத் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
தமிழ்நாட்டில் உள்ள அரசு மருத்துவக் கல்லூரிகளில் தேசிய அளவிலான கலந்தாய்வுக்கு 626 எம்பிபிஎஸ் இடங்களும், பல்மருத்துவப் படிப்பில் 29 இடங்களும் ஒதுக்கப்பட்டன. இதில் தேசிய அளவிலான கலந்தாய்வில் நிரப்பப்படாமல் 132 எம்பிபிஎஸ் இடங்களும் 19 பல்மருத்துவப் படிப்பு இடங்களும் திரும்ப ஒப்படைக்கப்பட்டுள்ளன.
அரசு பள்ளியில் பயின்றோருக்கான ஒதுக்கீட்டில் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் கட்டணம் அதிகம் எனச் சேராமல் போன மாணவர்களுக்குத் தேசிய அளவிலான இடங்கள் திரும்ப ஒப்படைக்கப்பட்டால் வழங்குவதாகத் தமிழக அரசு உயர்நீதிமன்றத்தில் உறுதியளித்தது குறிப்பிடத்தக்கது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...