++ பாரதியார் - ``பழமை, புதுமையை இணைத்து, இந்தியாவை உருவாக்க எண்ணினார்" - பிரதமர் மோடி ~ Padasalai No.1 Educational Website
:::: MENU ::::

Subam Matrimony

சுபம் - இலவச திருமண தகவல் மையம்

https://www.subammatrimony.com/

பாடசாலை வலைதளத்தின் செய்திகளை உடனுக்குடன் உங்கள் Telegram குழுவில் பெற - Click Here & Join - https://t.me/Padasalai_official
நிகழ்ச்சியில் சிறப்புரை வழங்கிய பிரதமர் மோடி, பாரதியாரை பன்முகத்தன்மை கொண்டவர் என்று குறிப்பிட்டார். “அவர் கவிஞர், எழுத்தாளர், பத்திரிகையாளர், சமூக சேவையாளர், விடுதலை போராட்ட வீரர் என பல்முகத்தன்மை கொண்டவர். 39 ஆண்டுகளில் அவர் பல சாதனைகளை செய்திருக்கிறார்கள்” என்றார். தொடர்ந்து, “தமிழ் மொழியும், தாய்நாடும் தனது இரண்டு கண்கள் என பாரதி நினைத்தார்.

“அச்சமில்லை, அச்சமில்லை அச்சமென்பதில்லையே;

இச்சகத்து ளோரெல்லாம் எதிர்த்து நின்ற போதிலும், அச்சமில்லை அச்சமில்லை அச்சமென்பதில்லையே…”

இன்றைய இளைய தலைமுறை அவரை பின்பற்ற வேண்டும். இளைஞர்கள் எத்தனை தடை வந்தாலும் இலக்கை நோக்கி பயணிக்க வேண்டும். பழமை மற்றும் புதுமையை இணைத்து இந்தியாவை உருவாக்க அவர் எண்ணினார்” என்றார்.

மேலும் , “பெண்களுக்கு முக்கியத்துவம் கொடுத்து, அவர்களின் முன்னேற்றம் குறித்து தொடர்ந்து பேசினார். பெண்கள் வலிமை பெற வேண்டும், ஆண்களுக்கு நிகராக உயர வேண்டும் என எண்ணினார் பாரதி” என புகழாரம் சூட்டினார்.

இறுதியாக,

“இனியொரு விதி செய்வோம்;

அதை எந்த நாளும் காப்போம்;

தனியொருவனுக்கு உணவில்லையெனில் ஜகத்தினை அழித்திடுவோம்!” என்று பாடினார், என்றவர்,

`அவருடைய பாடல்களை அனைவரும் படித்து பயன்பெற வேண்டும்’ என்றார்.0 Comments:

Post a comment

Dear Reader,

Enter Your Comments Here...