Commissionerate of Treasuries and Accounts
Pensioners' Portal
Pensioners' Portal
ஓய்வூதியர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியர்கள் தங்களது ஓய்வூதியம் பெற்றவிபரங்கள், காலம் முடிவுற்ற ஓய்வூதியம் தொகுத்துப்பெறல், உயர்த்தி வழங்கப்பட்ட குடும்ப ஓய்வூதியர்கள், ஓய்வூதிய நிலுவைகள், மாதாந்திர ஓய்வூதியம் மற்றும் ஓய்வூதியர் பணப்பயன்கள் வங்கியில் வரவுவைக்கப்பட்டது போன்ற விபரங்களை கருவூலங்களை அணுகாமலே இத்தரவுதளத்தில் பெறலாம். மேலும் அரசால் அவ்வப்போது அறிவிக்கப்படும் அகவிலைப்படி மற்றும் இதரபயன்களை அறிந்து கொள்ளலாம். மேலும் ஓய்வூதியர் வாழ்நாள்சான்று அளித்தவிபரம், 80 வயதிற்கு மேற்பட்ட ஓய்வூதியர்களுக்கு வழங்கப்படும் கூடுதல் ஓய்வூதியம், வருமானவரி தாக்கல் செய்ய தேவைப்படும் வருடாந்திர ஓய்வூதிய விபரங்கள், ஓய்வூதியர் வாரிசுதாரர் நியமனம், பண்டிகை முண்பணம், புதிய மருத்துவகாப்பீடு திட்டம் மற்றும் குடும்பநலநிதி பிடித்தங்கள் போன்ற விபரங்களை தங்களது ஓய்வூதியகொடுவை எண் மூலம் உள்ளீடு செய்து பதிவிறக்கம் செய்ய இயலும்
பென்ஷனர்கள் தங்கள் விவரங்களை பென்சனர் போர்ட்டலில் பதிவு செய்து கொண்டால் மாதாமாதம் கிடைக்கும் பென்ஷன் தொகை எவ்வளவு D.A எவ்வளவு போன்ற விஷயங்களையும், தங்களின் வாரிசுதாரர் பதிவு போன்ற விஷயங்களையும் எளிதாக வலைதளம் மற்றும் ஆண்ட்ராய்டு போன்களில் பார்த்துக்கொள்ளலாம் .அதற்கான விபரம் கொடுக்கப்பட்டுள்ளது.
Pensioners' Portal ONLINE ENTRY DETAILS
ஓய்வூதியதாரர்கள் தங்கள் ஓய்வு ஊதியம் குறித்த சுயவிவரம் மாதா மாதம் வழங்கப்படும் ஓய்வூதியம் , அகவிலைப்படி உயர்வு வாரிசு நியமனம் போன்ற தகவல்களை இணைய தளம் மூலமாக மற்றும் செல்போன் மற்றும் கணிப்பொறி மூலமாக வீட்டில் இருந்தபடியே எப்படி செயல்படுத்தலாம் என்பதற்கான வழிகாட்டு நெறிமுறைகள்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...