Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பள்ளி காலை வழிபாட்டு செயல்பாடுகள் - 07.01.2026

  திருக்குறள்: 

குறள் 294: 

உள்ளத்தாற் பொய்யா தொழுகின் உலகத்தார் 
உள்ளத்து ளெல்லாம் உளன். 

விளக்க உரை: 

ஒருவன் தன் உள்ளம் அறியப் பொய் இல்லாமல் நடப்பானானால் அத்தகையவன் உலகத்தாரின் உள்ளங்களில் எல்லாம் இருப்பவனாவான்.

பழமொழி :

"Joy multiplies when shared." 

மகிழ்ச்சி பகிர்ந்தால் இரட்டிப்பாகிறது.

இரண்டொழுக்க பண்புகள் :

1.என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.

2.பெரியோர் அறிவுரையை கேட்டு நடப்பேன்.

பொன்மொழி :

வெற்றி பெற மூன்று வழிகள்: மற்றவர்களை விட- அதிகமாக தெரிந்து கொள்ளுங்கள், அதிகமாக பணியாற்றுங்கள் குறைவாக எதிர்பாருங்கள் - வில்லியம் ஷேக்ஸ்பியர்

பொது அறிவு : 

01.உலகில் இயற்கை ரப்பர் உற்பத்தி மற்றும் ஏற்றுமதியில்
முன்னணியில் நாடு எது?

தாய்லாந்து -Thailand

02.மாலத்தீவின் தலைநகரம் எது?

 மாலே  - Maley

English words :

Consensus- agreement 

Bustle -hurry

தமிழ் இலக்கணம்: 

 300,400, 500 எழுத்தால் எழுதுவது எவ்வாறு என்று  பார்ப்போம்
இன்று 300 எழுதுவதைப் பார்ப்போம்
300 –முன்னூறு
           முந்தூறு
எது சரி?
"நான் முன்னூறு ரூபாய் வாங்கினேன்."

முன்னூறு பிரித்தால் 
முன் + நூறு 

"நான் முன் + நூறு ரூபாய் வாங்கினேன்."
இதன் பொருள் நான் முன்பு நூறு ரூபாய் வாங்கினேன் என்பதாகும்.

அடுத்த சொல்
முந்நூறு இதைப் பிரித்தால் மூன்று + நூறு  

"நான் மூன்று + நூறு ரூபாய் வாங்கினேன்." என்பது இதன் பொருளாகும்.
எனவே 300 ஐ முந்நூறு என்று தான் எழுத வேண்டும்

அறிவியல் களஞ்சியம் :

 வாழைப்பழங்களில் பொட்டாசியம் உள்ளது என்பதை அறிந்த நமக்கு, அதன் பொட்டாசியம் சிதைவு அடையும் பொபோது அவைகள் சற்றே கதிரியக்கத்தை உருவாக்குகின்றன என்பது தெரிந்து இருக்க வாய்ப்பே இல்லை. . கதிர்வீச்சு விஷத்தை உட்கொள்ள ஒரே நேரத்தில் நீங்கள் 10,000,000 வாழைப்பழங்களை சாப்பிட வேண்டும். 

நீதிக்கதை

 அடிமையானக் குதிரை

ஒரு குதிரைக்கும், கலைமானுக்கும் இடையில் சிறு பகை ஏற்பட்டதால் அக்கலைமானை ஒழித்துக் கட்ட எண்ணியக் குதிரை ஒரு மனிதனின் உதவியை நாடியது. அதன் வேண்டுகோளை ஏற்ற மனிதன் குதிரைக்குச் சேணமும், கடிவாளமும் போட்டான். அதன் மீது சவாரி செய்து கலைமானை விரட்டிப் பிடித்துக் கொன்றான். 

தனது பகைவன் ஒழிந்ததைக் கண்டு மகிழ்ந்த குதிரைக் கனைத்தது. தன் எதிரியை ஒழித்த மனிதனுக்கு நன்றி கூறியது. தன் கடிவாளத்தை நீக்கித் தன்னை விடுவிக்கும்படி வேண்டியது. 

குதிரையே, உன்னை விடுவிப்பதா! அது முடியவே முடியாது. நான் வசதியாகச் சவாரி செய்ய நீ எனக்கு மிகவும் பயன்படுவாய். ஆகையால் உன்னை விடுவிக்கவே மாட்டேன் என்று கூறிச் சிரித்தான். 

அன்று முதல் குதிரை, மனிதனுக்கு அடிமையாக இருக்கிறது. குதிரையின் வஞ்சம் தீர்ந்தது. ஆனால் அது தன் சுதந்திரத்தினை இழந்து அடிமையாகவே இருக்க வேண்டியதாயிற்று. 

நீதி :

பிறருக்கு கேடு நினைப்பவன் நிச்சயம் கெட்டுப்போவான்.

இன்றைய செய்திகள்

07.01.2026

⭐மாணவர்களின் கல்வி மற்றும் டிஜிட்டல் திறன்களை மேம்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாக உயர்கல்வி பயிலும் 10 லட்சம் மாணவர்களுக்கு இலவச லேப்டாப் வழங்கும் திட்டத்தை தமிழ்நாடு அரசு செயல்படுத்தி உள்ளது. 

⭐2026-27 ஆண்டுக்குள் நாடு முழுவதும் ஒரு கோடி வீடுகளில் சோலார் பேனல்களைப் பொருத்தும் இலக்கை மத்திய அரசு நிர்ணயித்துள்ளது.சோலார் அமைப்புகள் பொருத்தப்பட்ட வீடுகளுக்கு மாதந்தோறும் 300 யூனிட் வரை இலவச மின்சாரம் கிடைக்கும்.

⭐அடுத்த ஐந்து நாட்களுக்கு வடமேற்கு, மத்திய, கிழக்கு மற்றும் வடகிழக்கு இந்தியாவில் காலை நேரங்களில் அடர்த்தியான மூடுபனி நிலை நீடிக்கும் எனவும், இதனால் குளிர் அதிகரிக்கும் எனவும் இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது. 

🏀 விளையாட்டுச் செய்திகள்

🏀டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடர் இந்தியா மற்றும் இலங்கையில் நடைபெறுகிறது.
நேபாளம் அணி தனது டி20 உலக கோப்பை போட்டிக்கான ஜெர்சியை அறிமுகப்படுத்தியுள்ளது.

🏀ஆஷஸ் தொடரின் 5-வது மற்றும் கடைசி போட்டி சிட்னியில் நடைபெற்று வருகிறது.5 போட்டிகள் கொண்ட இந்த டெஸ்ட் தொடரை 3 -1 என்ற கணக்கில் ஆஸ்திரேலியா ஏற்கனவே கைப்பற்றி விட்டது குறிப்பிடத்தக்கது.

Today's Headlines

⭐ Intending to improve the academic and digital skills of students, the Tamil Nadu government has implemented a scheme to provide free laptops to 10 lakh students pursuing higher education in the first phase.

⭐The central government has set a target of installing solar panels in one crore homes across the country by 2026-27. Homes equipped with solar systems will get up to 300 units of free electricity every month.

⭐ The Indian Meteorological Department has also said that this will increase the cold. And the  dense fog in the mornings over northwest, central, east and northeast India for the next five days

 SPORTS NEWS 

🏀The T20 World Cup cricket series is being held in India and Sri Lanka. Nepal has launched its jersey for the T20 World Cup.

🏀The 5th and final match of the Ashes series is being played in Sydney. It is noteworthy that Australia has already won this 5-match Test series by a score of 3-1.

Covai women ICT_போதிமரம்

 





1 Comments:

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive