 |
NRI Day - வெளிநாடுவாழ் இந்தியர் நாள்
|
திருக்குறள்:
குறள் 323:
ஒன்றாக நல்லது கொல்லாமை மற்றதன்
பின்சாரப் பொய்யாமை நன்று.
விளக்க உரை:
இணையில்லாத ஓர் அறமாகக் கொல்லாமை நல்லது, அதற்கு அடுத்த நிலையில் கூறத்தக்கதாகப் பொய்யாமை நல்லது.
பழமொழி :
Questions are the seeds of knowledge.
கேள்விகளே அறிவின் விதைகள்.
இரண்டொழுக்க பண்புகள் :
1.என் ஆசிரியர் மற்றும் பெற்றோர் எனக்கு கொடுக்கும் பொறுப்பை திருந்த செய்வேன்.
2.பெரியோர் அறிவுரையை கேட்டு நடப்பேன்.
பொன்மொழி :
என்னிடம் சிறப்பான தனித்திறமை என்று எதுவுமே இல்லை . என்னிடம் இருப்பது ஆர்வம் மட்டுமே - ஆல்பர்ட் ஐன்ஸ்டீன்
பொது அறிவு :
01.நம்நாட்டில் முதன்முதலாக இரும்பு எஃகு தொழிற்சாலை நிறுவப்பட்ட இடம் எது?
ஜாம்ஷெட்பூர் -Jamshedpur
02.தங்கப் போர்வை நாடு" (Golden Fleece)எனப்படுவது எது?
ஆஸ்திரேலியா -Australia
English words :
Slammed-banged
generous -noble
தமிழ் இலக்கணம்:
இன்று 500 ஐ எப்படி எழுதுவது என்று பார்ப்போம்
1. ஐநூறு ரூபாய் எனக்கு கிடைத்தது
2. ஐந்நூறு ரூபாய் எனக்கு கிடைத்தது
இதை பிரித்து எழுதுவோம்.
ஐநூறு = ஐ+ நூறு
ஐந்நூறு = ஐந்து + நூறு
ஐந்நூறு ரூபாய் எனக்கு கிடைத்தது என்பதே சரி
அறிவியல் களஞ்சியம் :
நீங்கள் சுழற்றிக்கொண்டே ஒரு பந்தை கைவிடும்போது, பலத்த காற்று வீசும் பட்சத்தில் அது பறந்து போகும் என்கிறது அறிவியல். இதை மேக்னஸ் விளைவு என்று அழைகிறார்கள். இந்த விளைவு தான் டென்னிஸ் மற்றும் கால்பந்து விளையாட்டை ஒரு தந்திரமான மற்றும் எளிமையான விளையாட்டாக மாற்றுகிறது.
ஜனவரி 09
NRI Day - வெளிநாடுவாழ் இந்தியர் நாள்
வெளிநாடுவாழ் இந்தியர் நாள், 2003 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு ஆண்டும் ஜனவரி 9 ஆம் நாள் கொண்டாடப்படுகிறது. இந்தியாவைத் தவிர்த்த பிற நாடுகளில் வாழும் இந்தியர்களின் நினைவாகக் கொண்டாடப்படுகிறது. மகாத்மா காந்தி, தென்னாப்பிரிக்காவிலிருந்து மும்பை வந்து சேர்ந்த நாளின் (ஜனவரி 9, 1915) நினைவாக இந்த நாள் தேர்ந்தெடுக்கப்பட்டது. ஒவ்வொரு ஆண்டும் ஒவ்வொரு இந்திய நகரத்தில் இவ்விழா கொண்டாடப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. விழாவின்போது, வெளிநாடுவாழ் இந்தியர்களுக்கும் விருதுகள் வழங்கப்படுகின்றன.
நீதிக்கதை
உயிரைக் காத்த உண்மை
நரி, ஓநாய், முயல் ஆகிய மூன்றும் சேர்ந்து ஒரு விவசாயின் பயிர்களையும், விளை பொருட்களையும் நாசம் செய்து வந்தன. இதனால் மிகவும் பாதிக்கப்பட்ட விவசாயி மூன்றையும் ஒழித்துக் கட்ட முடிவு செய்தான். ஒரு நாள் அந்த விவசாயி அவைகளைப் பிடிக்கப் பந்தயங்களை வைத்தான். ஒரு நாள் நரி, ஓநாய், முயல் மூன்றும் விவசாயி வைத்த பந்தயங்களில் மாட்டிக் கொண்டன.
அவற்றைப் பிடித்த விவசாயி முதலில் முயலிடம் என் தோட்டத்திற்கு ஏன் வந்தாய்? என்று கேட்டான். அதற்கு முயல் முள்ளங்கி இலைகளைச் சாப்பிட வந்தேன். பசியினால் தான் இந்தத் தவறைச் செய்து விட்டேன். இனி ஒருபோதும் இங்கே வரமாட்டேன். என்னை மன்னித்துவிடு என்று உண்மையைக் கூறியது. அடுத்தது நரியிடம் கேட்டான். அதற்கு நரி முயல் போன்ற பிராணிகள் வந்து உனது தோட்டத்தை அழித்துவிடக்கூடாது என்று எண்ணித் தான் வந்ததாகக் கூறியது.
அதற்கு அடுத்தபடியாக ஓநாயிடம் கேட்டான். அதற்கு அந்த ஓநாய் நீ திருடி வைத்துள்ள எங்களுக்கு உணவாக வேண்டிய ஆட்டுக்குட்டிகளை உண்ண வந்தேன் என்று ஆணவத்துடன் கூறியது. மூன்றையும் விசாரித்த விவசாயி தன் தவறை ஒப்புக்கொண்ட முயலை மட்டும் விடுவித்து நரியையும், ஓநாயையும் கொன்றான்.
நீதி :
உண்மை நிச்சயம் வெல்லும்
இன்றைய செய்திகள்
09.01.2026
⭐ பொதுமக்களின் வசதிக்காகவும், குறைந்த கட்டணத்தில் பாதுகாப்பான பயணத்தை உறுதி செய்யவும் பொது மற்றும் ஏசி இல்லாத ரயில் பெட்டிகளின் உற்பத்தியை அடுத்த 2 ஆண்டுகளில் 9640 பொது மற்றும் ஏசி இல்லாத பெட்டிகளைத் தயாரிக்க இந்திய அரசு திட்டமிட்டுள்ளது.
⭐சென்னை நகரில் போகி அன்று எரிக்கப்படும் பொருட்களால் புகை மண்டலம் ஏற்படுகிறது. மூச்சு திணறல், கண் எரிச்சல் போன்ற நோய்களால் பொது மக்களுக்கு பாதிப்பு ஏற்படுகிறது. எனவே புகையில்லா போகிப் பண்டிகையைக் கொண்டாட தமிழ்நாடு மாசு கட்டுப்பாடு வாரியம் வேண்டுகோள்.
⭐பிலிப்பின்ஸ் நாட்டிலுள்ள மாயோன் எரிமலையின் உச்சியிலிருந்து அவ்வப்போது பாறைகள் சரிந்து விழுவதால் அப்பகுதியில் வசிக்கும் 729 குடும்பங்களைச் சேர்ந்த 2,800-க்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டு வருகின்றனர்.
🏀 விளையாட்டுச் செய்திகள்
🏀ஆஸ்திரேலியா-இங்கிலாந்து அணிகள் இடையேயான 5-வது மற்றும் கடைசி ஆஷஸ் டெஸ்ட் போட்டி சிட்னியில் நடைபெற்றது.
ஆஷஸ் டெஸ்ட் தொடரில் சிறப்பாக விளையாடிய ஸ்டார்க் தொடர் நாயகன் விருதை வென்றார். ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்டில் ஸ்டார்க் 5 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.
Today's Headlines
⭐The Government of India plans to manufacture 9640 general and non-AC coaches in the next 2 years. Additionally, the production of public and non-AC train coaches aims to provide convenience to the public and ensure safe travel at affordable fares.
⭐In Chennai city, the burning of materials on Bhogi day creates a thick cloud of smoke. This causes health problems such as breathing difficulties and eye irritation for the general public. Therefore, the Tamil Nadu Pollution Control Board appeals to the public to celebrate a smoke-free Bhogi festival.
⭐More than 2,800 people from 729 families living in the area are being evacuated due to occasional rock falls from the summit of the Mayon volcano in the Philippines.
SPORTS NEWS
🏀The 5th and final Ashes Test match between Australia and England was held in Sydney. Starc won the Man of the Series award for his outstanding performance in the Ashes Test series, and Starc took 5 wickets.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...