Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

தேசிய மருத்துவ ஆணையம் சார்பில் நீட் தேர்வுக்கான பாடத்திட்டங்கள் வெளியீடு

hindutamil-prod%2F2026-01-02%2Fdwflmysn%2F125421211 
இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நடத்தப்படும் நீட் தேர்வில் கேட்கப்படும் கேள்விகளுக்கான பாடதிட்டங்களை தேசிய மருத்துவ ஆணையம் வெளியிட்டுள்ளது.
 
நாடு முழுவதும் அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளின் எம்பிபிஎஸ், பிடிஎஸ் படிப்புகள், சித்தா, ஆயுர்வேதா, யுனானி, ஓமியோபதி படிப்புகள் மற்றும் கால்நடை மருத்துவப் படிப்பின் அகில இந்திய ஒதுக்கீட்டு இடங்கள் நீட் தேர்வில் தகுதி பெறுபவர்களைக் கொண்டு நிரப்பப்படுகிறது. அதேபோல், ராணுவ கல்லூரிகளில் பிஎஸ்சி நர்சிங் படிப்புக்கான மாணவர் சேர்க்கைக்கு நீட் தேர்வு கட்டாயமாக்கப்பட்டுள்ளது. இந்த நீட் தேர்வை தேசிய தேர்வுகள் முகமை (என்டிஏ) ஆண்டுதோறும் நடத்தி வருகிறது.
நீட் தேர்வில் 180 கேள்விகள் கேட்கப்படும். ஒவ்வொரு கேள்விக்கும் தலா 4 மதிப்பெண்கள் வீதம் மொத்தம் 720 மதிப்பெண்களுக்கு தேர்வு நடைபெறுகிறது. தாவரவியல் மற்றும் விலங்கியலை உள்ளடக்கிய உயிரியல் பாடத்தில் இருந்து 360 மதிப்பெண்களுக்கும், இயற்பியல் மற்றும் வேதியியலில் தலா 180 மதிப்பெண்களுக்கும் கேள்விகள் இடம்பெறும். தவறான பதிலுக்கு 1 மதிப்பெண் (நெகட்டிவ்) குறைக் கப்படும்.
இந்நிலையில், அதற்கான பாடத்திட்டங்கள் https://www.nmc.org.in/ என்ற இணையதளத்தில் வெளியிடப்பட் டுள்ளது. அதன் அடிப்படையில் கேள்விகள் கேட்கப்படும் என்று தேசிய மருத்துவ ஆணையம் (என்எம்சி) தெரிவித்துள்ளது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive