எரிவாயு சிலிண்டர் பயனர்கள், தங்களுக்கு வரும் மானியத்தை தடையின்றி பெறுவதை உறுதி செய்ய e-KYC செயல்முறையை முடிக்க வேண்டியது அவசியம். எண்ணெய் நிறுவனங்கள் நடப்பு நிதியாண்டிற்கு மார்ச் 31ஆம் தேதி வரை காலக்கெடு விதித்துள்ளது. இந்த தேதிக்குள் e-KYC செயல்முறையை முடிக்கவில்லை என்றால், பயனர்கள் மானியம் பெறுவதில் சிக்கல் ஏற்படலாம்.
👉மத்திய அரசு ஒரு வருடத்தில் அதிகபட்சம் ஒன்பது சிலிண்டர்கள் வரை மட்டுமே மானியத்தை வழங்குகிறது. இந்த தொகையை விட அதிகமாக பயன்படுத்தப்படும் சிலிண்டர்களை முழுமையாக செலுத்த வேண்டும். இருப்பினும், இந்த மானியம் பயனாளிகளின் வங்கி கணக்குகளில் நேரடியாக வரவு வைக்க, அவர்களின் கணக்குகள் செயலில் இருக்க வேண்டும். முறையான சரிபார்ப்பு இல்லையென்றால், நிதி வெளியீடு நிறுத்தப்படலாம்.









0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...