இளநிலை
நீட் 2026 தேர்விற்கான விண்ணப்பப் பதிவு விரைவில் தொடங்கப்பட உள்ளது.
இந்நிலையில், இந்தாண்டு நடைபெறவுள்ள தேர்விற்கான புதுப்பிக்க பாடத்திட்டை
தேசிய தேர்வு முகமை வெளியிட்டுள்ளது.
இளநிலை நீட் தேர்வு, தேசிய
தேர்வு முகமையின் மூலம் 2019-ம் ஆண்டு முதல் நடத்தப்பட்டு வருகிறது.
2026-ம் ஆண்டுக்கான நீட் தேர்விற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகி,
விண்ணப்பப் பதிவு தொடங்கப்பட உள்ளது. இந்நிலையில், இத்தேர்விற்கான
புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்தை தேசிய தேர்வு முகமை இணையதளத்தில்
வெளியிட்டுள்ளது.
தேசிய மருத்துவ ஆணையம் (NMC) மற்றும் இளநிலை மருத்துவப் படிப்பிற்கான வாரியம் (UGMEB) மூலம் அங்கீகரிக்கப்பட்ட 2026-ம் ஆண்டு நீட் தேர்விற்கான பாடத்திட்டம் மாணவர்களுக்கான இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது.
இயற்பியல், வேதியியல் மற்றும் உயிரியல் பாடங்களுக்கு அலகு வாரியாக பாடத்திட்டம் இடம்பெற்றுள்ளன.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...