Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NMMS : கல்வி உதவித் தொகை பெறுவதற்கு என்எம்எம்எஸ் தேர்வு ஹால்டிக்கெட் இன்று வெளியீடு

என்எம்எம்எஸ் தேர்வு எழுதவுள்ள மாணவர்​களுக்​கான ஹால்​டிக்​கெட் இன்று (ஜனவரி 5) வெளி​யிடப்பட உள்​ள​தாக தேர்​வுத் துறை அறி​வித்​துள்​ளது.

மத்​திய அரசின் தேசிய வரு​வாய்​வழி மற்​றும் திறன் படிப்பு உதவித்​தொகை திட்​டத்​தின் (என்எம்எம்எஸ்) கீழ் அரசு, அரசு உதவி பெறும் பள்​ளி​களில் 8-ம் வகுப்பு பயிலும் மாணவர்​களுக்கு கல்வி உதவித்​தொகை அளிக்​கப்​பட்டு வரு​கிறது.

இதற்​காக ஆண்​டு​தோறும் மாணவர்​களுக்கு என்எம்எம்எஸ் தேர்வு நடத்​தப்​படும். இந்த தேர்​வின் மூலம் தமிழகத்​தில் 6,695 பேர் உட்பட நாடு முழு​வதும் ஒரு லட்​சம் மாணவர்​கள் தேர்வு செய்​யப்​படு​வர். அவர்​களுக்கு 9-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 முடிக்​கும் வரை மாதம் ரூ.1,000 உதவித்​தொகை வழங்​கப்​படும்.

நடப்பு கல்​வி​யாண்​டுக்​கான என்எம்எம்எஸ் தேர்வு ஜனவரி 10-ம் தேதி நடத்​தப்பட உள்​ளது. இதற்​கான இணை​யதள விண்​ணப்​பப் பதிவு கடந்த டிசம்​பரில் நடை​பெற்​றது. இந்த தேர்​வெழுத விண்​ணப்​பித்த மாணவர்​களின் பெயர்ப் பட்​டியலுடன் கூடிய வருகை தாட்​கள் மற்​றும் ஹால்​டிக்​கெட்​கள் தேர்​வுத்​துறை இணை​யதளத்​தில் (dge.tn.gov.in) இன்று (ஜனவரி 5) வெளி​யிடப்பட உள்​ளது.

இவற்றை தேர்வு மைய கண்​காணிப்​பாளர்​கள் மற்​றும் பள்ளி தலைமை ஆசிரியர்​கள் தவறாமல் பதி​விறக்​கம் செய்​து​ கொள்ள வேண்​டும்.

பிழை இருந்தால் திருத்தலாம்: மாணவர்​களின் ஹால்​டிக்​கெட்​டில் தலைமை ஆசிரியர்​கள் கையொப்​பம், பள்ளி முத்​திரை​யிட்டு வழங்க வேண்​டும்.

மேலும், மாணவர்​களுக்கு தேர்வு மைய விவரத்​தை​யும் தெளி​வாக தெரிவிக்க வேண்​டும். ஹால்​டிக்​கெட்​களில் ஏதேனும் பிழைகள் இருப்​பின் அதை சிவப்பு நிற மையி​னால் திருத்தி பள்ளி தலை​மை​யாசிரியர் சான்​றொப்​பமிட வேண்​டும்.

இந்த தகவலை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்​களுக்​கும் தெரி​வித்து உரிய முன்​னேற்​பாடு​களை அந்​தந்த மாவட்ட முதன்​மைக் கல்வி அதி​காரி​கள் மேற்​கொள்ள வேண்​டும். இதுகுறித்த கூடு​தல் விவரங்​களை மேற்​கண்ட வலை​தளத்​தில் இருந்து அறிந்து கொள்​ளலாம் என்று தேர்​வுத் துறை அதி​காரி​கள் தெரி​வித்​தனர்.

அவகாசம் நீட்​டிப்பு: அரசுப் பள்​ளி​களில் பயிலும் பத்​தாம் வகுப்பு மாணவர்​களுக்​கான முதல்​வரின் திற​னாய்வு தேர்வு ஜனவரி 31-ம் தேதி நடை​பெறவுள்​ளது. இதற்​கான இணை​யதள விண்​ணப்​பப் பதிவு கடந்த டிசம்​பர் 26-ல் தொடங்கி ஜனவரி 3-ம் தேதி​யுடன் நிறைவு​பெற்​றது.

தற்​போது மாணவர்​கள் நலன் கருதி விண்​ணப்​பிக்​கும் கால அவகாசம் ஜனவரி 6-ம் தேதி வரை நீட்​டிக்​கப்​பட்​டுள்​ளது. எனவே, விருப்​ப​முள்​ளவர்​கள் www.dge.tn.gov.in என்ற இணை​யதளம் வழி​யாக துரித​மாக விண்​ணப்​பிக்​க வேண்​டுமென அறி​வுறுத்​தப்​படுகிறது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive