இது தொடர்பாக, டிஎன்பிஎஸ்சி தேர்வு கட்டுப்பாட்டு அலுவலர் ஏ.சண்முகசுந்தரம் நேற்று வெளியிட்ட செய்திக் குறிப்பு: கடந்த 2023-ல் நடைபெற்ற ஒருங்கிணைந்த நூலக பணி தேர்வு, உதவி ஜெயிலர் தேர்வு, ஒருங்கிணைந்த ஜியாலஜி சார்நிலை பணி தேர்வு, உதவி பயிற்சி அலுவலர், உதவி பகுப்பாய்வாளர் தேர்வு, கடந்த 2024-ல் நடந்த இந்துசமய அறநிலைய ஆட்சித் துறை செயல் அலுவலர் (கிரேடு-1) தேர்வு, உதவி வேளாண் அலுவலர் மற்றும் உதவி தோட்டக்கலை அலுவலர் தேர்வு உட்பட 10 போட்டித் தேர்வுகளுக்கான விடைத்தாள்கள் தேர்வாணையத்தின் இணைய தளத்தில் (www.tnpsc.gov.in) பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன.
இத்தேர்வுகளை எழுதிய தேர்வர்கள் உரிய கட்டணம் செலுத்தி தங்களின் ஒருமுறை பதிவு (ஓடிஆர்) வாயிலாக பிப். 19-ம் தேதி வரை ஆன்லைனில் பதிவிறக்கம் செய்துக் கொள்ளலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...