தொடக்கக் கல்வி இயக்கக நிர்வாகத்தின் கீழ் ஊரகப் பகுதிகளில் செயல்படும் அரசு தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் 2025-26ஆம் கல்வியாண்டில் 5ஆம் வகுப்பு பயிலும் மாணவர்களில் இருந்து ஓர் ஒன்றியத்திற்கு 16 பேர் வீதம் (ஆண்கள் – 8, பெண்கள் – 8) பெயர் தெரிவு செய்து 10.01.2026ஆம் தேதிக்குள் வழங்க அனைத்து மாவட்டக் கல்வி அலுவலர்கள் (தொடக்கக் கல்வி) கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
இம்மாணவர்களை தெரிவு செய்கையில் 2025-26 கல்வியாண்டின்
1) முதல் பருவ / காலாண்டுத் தேர்வில் பெற்ற மதிப்பெண்களின் உயர்நிலையில் இருந்தும்
2) பெற்றோர்களின் ஆண்டு வருமானம் ரூ.3 லட்சத்திற்கு மிகாத வகையிலும்
3) மாணவர்கள் 01.04.2015 முதல் 31.3.2016 வரை பிறந்தவர்கள் மற்றும் மாணவியர்கள் 01.04.2014 முதல் 31.3.2016 வரை பிறந்தவர்களை மட்டும் தெரிவு செய்ய அறவுறுத்தப்படுகிறார்கள்.
மேலும் இணைப்பில் கண்டுள்ள Excel படிவத்தில் கோரியுள்ள விவரங்களை பூர்த்தி செய்து இதே வாட்ஸ்ஆப் குழுவில் மட்டும் பதிவிடுமாறு தெரிவிக்கப்படுகிறது.
இத்திட்டம் குறித்த ஏதேனும் கூடுதல் விவரங்கள் தேவைப்படின் திரு.M.பழனிவாசன் 94443 07602 /9841947640 என்ற கைபேசி எண்களில் தொடர்பு கொள்ளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.
தொடக்கக் கல்வி இயக்குநருக்காக
ஆ,ஜெய பாண்டி,
உதவிக் கல்வி அலுவலர் (புள்ளியியல்)







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...