Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

குரூப் 1 தேர்வில் வினாக்கள் கடினம்

              நேற்று நடந்த குரூப் 1 தேர்வில் வினாக்கள் கடினமாக இருந்ததாக தேர்வு எழுதியவர்கள் தெரிவித்தனர்.


          தேனியில் நேற்று எட்டு தேர்வு மையங்களில் குரூப் 1 தேர்வு நடந்தது. தேர்வில் பங்கேற்க 2,838 பேருக்கு அனுமதி சீட்டு வழங்கப்பட்டிருந்தது.இதில் 1483 பேர் மட்டுமே தேர்வில் பங்கேற்றனர்.
தேர்வு குறித்து கூறியதாவது: 
பி.தினேஷ்பாபு, தேனி முல்லைநகர்: 
இந்த தேர்வு எழுதினால் எந்தெந்த பணியில் சேர்ந்து பணியாற்றுவோமோ, அந்த பணியில் சேரும் தகுதியை நிர்ணயிப்பதற்கு ஏற்ற வகையில் கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன. இதனால் கடுமையாக உழைத்தவர்கள் மட்டுமே தேர்வை வெற்றிகரமாக எதிர்கொண்டிருக்க முடியும். 
ஆர்.கருப்பசாமி, தேனி: 
பெரும்பாலும் கணக்கு பகுதியில் இருந்து அதிக கேள்விகள் வந்திருந்தன. பொது அறிவு, சமீபத்திய நடப்புகள் குறித்த கேள்விகள் அதிகம் கேட்கப்பட்டிருந்தன. எல்லாமே கடுமையாக இருந்தன. எதற்குமே சுலபமாக பதிலளிக்க முடியாது.
கே.கனகசுந்தரி, கோட்டூர்: 
அரசியல் நிகழ்வுகள் தொடர்பான கேள்விகள், கணக்கு தொடர்பான கேள்விகள் அதிகம் இருந்தன. எதிர்பார்க்காத கேள்விகளே அதிகம். பல்வேறு கோணங்களில் எழுதுபவரின் புத்திசாலித்தனத்தை அறியும் வகையிலான கேள்விகள் இடம் பெற்றிருந்தன. 
எம்.நந்தினி, தேனி பழனிசெட்டிபட்டி: 
உலக நடப்புகளில் கடந்த 4 ஆண்டுகள் நடந்தவை தொடர்பான கேள்விகள் இடம் பெற்று இருக்கும் என எதிர்பார்த்தோம். ஆனால் அதற்கும் மேற்பட்ட காலங்களில் நடந்தவைகள் இடம் பெற்று இருந்தன. உலக அறிவுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்பட்டிருந்தது. 

பி.நவநீதன், ரெங்கமநாயக்கன்பட்டி: 
6ம் வகுப்பு புத்தகம் முதல் 12ம் வகுப்பு புத்தகங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறும் என எதிர்பார்த்தோம். ஆனால் பாடப்புத்தகங்களில் இருந்து கேள்விகள் இடம் பெறவில்லை. வெளிக்கேள்விகளே அதிகம் இடம் பெற்று இருந்தன. இவ்வாறு கூறினர்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive