Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET Article: அடிப்படை கல்வி மேம்பட அதிக அளவில் இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுமா?



     தமிழகத்தில் உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிகளின் எண்ணிக்கையை விட அதிக எண்ணிக்கையில் உள்ளவை அரசு ஆரம்பப் பள்ளிகள்.
     தற்போது உள்ள சூழ்நிலையில் அனைத்து தொடக்கப் பள்ளிகளிலும் தமிழ் வழியோடு, ஆங்கில வழி கல்வியையும் அவசியம் கொண்டு வரவேண்டும். ஐந்தில் வளையாதது ஐம்பதில் வளையாது என்பதுபோல் இளம் வயதிலேயே அவனுக்கு ஆங்கில அறிவை ஊட்டிவிட்டால் மாணவர்களது எதிர்காலம் பிரகாசமாக இருக்கும்.
 ஆசிரியர் நியமனங்களில் பட்டதாரி ஆசிரியர் பணியிடங்கள் அதிக அளவில் நிரப்பப்படுகின்றன. அதுபோல் இடைநிலை ஆசிரியர் பணியிடங்களையும் மிக அதிக அளவில் நிரப்பினால்தான் காமராஜரின் கல்வித் தாகம் முழுமையாக தீரும். தற்போதுபட்டதாரி ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களில் சுமார் 10,726 பெயர்கள் தேர்வுப் பட்டியலில் வெளியிடப்பட்டுள்ளன.
           
ஆனால் இடைநிலை ஆசிரியர்களுக்கான தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற 30000 பேர்களிலிருந்து வெறும் 2,408 பேர் மட்டுமே தேர்வு செய்யப்படவுள்ளனர். இதனால் மீதமுள்ள பணிநாடுநர்கள் வேலைவாய்ப்பு கிடைக்குமா? என்ற கவலையில் உள்ளனர். மேல்நிலைக் கல்வியைப்போல் ஆரம்பக் கல்விக்கும் முக்கியத்துவம் அளிக்கவேண்டும். தற்போது தேர்ச்சிபெற்றுள்ள 30 ஆயிரம் இடைநிலை ஆசிரியர்கள் தேர்வுப் பட்டியலிலிருந்து முதற்கட்டமாக குறைந்தபட்சம் 10 ஆயிரம் பேரையாவது பணியமர்த்தவேண்டும். அப்போதுதான் அடிப்படைக் கல்வி மேம்படும்.
     மேலும், தற்போது உள்ள வெயிட்டேஜ் முறையை நீக்கவேண்டும் என்றும் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே பணிநியமனம் இருக்கவேண்டும் என்றும் சில பட்டதாரி ஆசிரியர்கள் போராடி வருகின்றனர். அவர்களது வாதப்படி ஆசிரியர் தகுதித் தேர்வை மறுமடியும் எழுதி கூடுதல் மதிப்பெண் பெற்றாலும் பிளஸ்டூ, பட்டப்படிப்பு, பி.எட் போன்றவற்றை மீண்டும் எழுத முடியாத சூழல் உள்ளதால் வெயிட்டேஜ் மதிப்பெண் பெறுவது எப்போதுமே இயலாத காரியம். இதனால் பட்டதாரி ஆசிரியர் தேர்வுப் பட்டியலில் இடம் பெற வாய்ப்பில்லை. எனவேதான் வெயிட்டேஜ் முறையை நீக்கவேண்டும் என்று போராடுகின்றனர்.
     பிளஸ்டூ பாடத்திட்டம் தற்போதுள்ள முறை வேறு. 10 ஆண்டுகளுக்கு முன்பு இருந்த நிலை வேறு. தற்போது கல்வி பயில உள்ள வசதிகள் 10 ஆண்டுகளுக்கு முன்பு இல்லை. தொழிற்கல்வி பாடம் படிக்கும் பிளஸ்டூ மாணவனுக்கு செய்முறை மதிப்பெண்கள் அதிக அளவில் வழங்கப்படுகிறது. ஆனால் ஏ குரூப் எனும், கணிதம், உயிரியல்,இயற்பியல், வேதியியல் பாடம் படித்த மாணவர்கள் குறைவான மதிப்பெண்ணைத்தான் பெற முடியும். இரு பிரிவு மாணவர்களையும் சம அளவு கோலில் பார்க்கக்கூடாது எனவும் தேர்வர்கள் கூறுகின்றனர்.
     வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பல ஆண்டுகளுக்கு முன்பு பதிந்துவிட்டு வேலைக்காக காத்திருக்கும் வயது முதிர்ந்த ஆசிரியர்கள் தற்போது படித்து தேர்ச்சி பெற்ற புதிய பட்டதாரி ஆசிரியர்களுடன் எவ்வாறு போட்டி போட இயலும்? எந்த ஒரு பணி நியமனத்திலும் இதுபோன்ற ஒரு முறை கடைபிடிக்கப்படுவதில்லை. இடைநிலை, பட்டதாரி ஆசிரியர் நியமனத்தில் மட்டும் இந்த முரண்பாடு ஏன்? வேலைவாய்ப்பு பதிவு எதற்காக? வயது முதிர்வுக்கு சலுகை கிடையாதா? என்றும் தேர்வர்கள் கோருகின்றனர். என்சிடிஇ வழிகாட்டுதலில் ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண்ணை மட்டுமே கணக்கிடும்படி கூறப்பட்டுள்ளது. பிளஸ்டூ, பட்டப்படிப்பு, பி.எட் மதிப்பெண்களை கணக்கெடுக்கும்படி கூறப்படவில்லை.
     சான்றிதழ் சரிபார்ப்பு முடிந்துவிட்டதால் மீண்டும் வேலைவாய்ப்பு பதிவு மூப்பு சரிபார்க்க கால அவகாசம் இல்லை.



தீர்வு என்ன?
1.   ஆசிரியர் தகுதித் தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைவருக்கும் வேலை உறுதி என்ற உத்தரவாதத்தை அரசு அறிவிக்கவேண்டும்.
2.   மொத்த காலிப் பணியிடங்களை சரிபாதியாக பிரித்து முதல் பாதியை ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று தேர்ச்சி பெற்ற அதிக மதிப்பெண் பெற்றவர்களுக்கும், மறு பாதியை ஆசிரியர் தகுதித் தேர்வில் 82 மதிப்பெண்களுக்கு மேல் 89 மதிப்பெண்களுக்குள் பெற்று தேர்ச்சி பெற்ற இடஒதுக்கீட்டுப் பிரிவினர்களில் அதிக மதிப்பெண் மற்றும் வயது மூப்பு அடிப்படையில் வயது முதிர்ந்த ஆசிரியர்களுக்கும் வழங்கவேண்டும்..
தாள் 1, தாள் 2 தேர்வுகளில் தேர்ச்சி பெற்ற அனைவரையும் பணியமர்த்தும்வரை இந்த முறை கடைப்பிடிக்கவேண்டும்.
இவ்வாறு நடைமுறைப்படுத்துவதுதான் இரு சாராரையும் ஏற்றுக்கொள்ளக்கூடியதாக இருக்கும்.
//////////////////=
By Anandan S




5 Comments:

  1. ------------------------------
    சென்னையில் மாபெரும் பேரணி !
    ------------------------------

    வரும் செப்டம்பர் 1. திங்கள்கிழமை எக்மோர் ராஜரத்தினம் ஸ்டேடியத்தில் இருந்து பேரணி ஆரம்பமாகிறது.

    வெயிட்டேஜ் முறையை ரத்து செய்யகோரி மாபெரும் பேரணி காவல் துறையின் அனுமதியுடன் நடைபெறுகிறது.

    பாதிக்கப்பட்டவர்கள் அனைவரும் பெருந்திரளாக கலந்து கொண்டு பேரணியை சிறப்பிக்க செய்யுமாறு கேட்டுகொள்கிறோம்.

    மேலும் நமது நண்பர்கள் இங்கு சென்னையில் கடந்த ஒரு வார காலமாக போராடிக்கொன்டிருக்கிறார்கள். அவர்களுடன் நாமும் இனைந்து அவர்களுக்கு பக்க பலமாய் இருப்போம்.

    அலைகடலெனன திரன்டு வாரீர் நண்பர்களே. சென்னையே மக்கள் வெள்ளத்தில் தினரட்டும்.

    மாற்றம் வேண்டுமா? வேண்டாமா? முடிவு செய்து கொள்ளுங்கள். இதுதான் நமது வாழ்வா சாவா என்ற கடைசி போராட்டம். அனைவரும் குடும்பத்துடன் கலந்துகொள்ளவேண்டும்.

    தயவுசெய்து விடுபட்ட மாவட்டங்களுக்கு யாரேனும் முன் வந்து தங்கள் போன் நெம்பர் கொடுக்கவும். மாவட்ட வாரியாக அனைத்து நண்பர்களும் ஒருங்கினைந்து தவறாமல் வந்து கலந்துகொள்ளவும்.

    கருர் 9843734462
    கருர் 9597477975
    வேலூர் 9944358034
    தி. மலை 7305383952n
    கோயமுத்தூர் 9843311339 நாமக்கல் 9003435097
    சேலம் 9566977189
    திருநெல்வேலி 9543079848
    திருச்சி 9944766642
    தஞ்சாவூர் 9842132592
    9865066553

    ReplyDelete
  2. chennaiku arugil ulla seniors...TET WEIGHTAGE AAL engal valvatharam pathika pattulathu enru muraiyaga eluthi,weightage ratthu seithu,tet pass plus b.ed seniority padi pani niyamanam seiya utharavida vendum enru MANILA MANITHA URIMAIGAL AANAIYATHIDAM pugar manu kodukavum...nalla thirvu nichyam kidaikum..

    ReplyDelete
  3. 1.தமிழக அரசு 5 சதவீத தளர்வை 2013 தேர்வர்க்கு மட்டும் கொடுத்து 2012 தேர்வர்களை ஏமாற்றியது. 2012 தேர்வர்களுக்கும் கொடுத்தால் 2012 இல் தேர்வாகி பணியில் உள்ள ஆசிரியர்கள் பாதிக்கப்படுவார்கள் என்ற காரணம்.இது டி.ஆர்.பிக்கு தலைவலி.

    2.தேர்விற்கு முன்பாக அறிவிக்கவேண்டிய GO க்களை நினைத்த நேரத்தில் ,நினைத்த இடத்தில் அறிவித்ததது.

    3.முக்கியமாக வேலைவாய்ப்பு அலுவலக பதிவுமூப்பை திடீரென நீக்கியது.

    4.இதுபோன்ற சரியான நேரத்தில் அறிவிக்காத முறையற்ற அறிவிப்புகளால் பலர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

    வெய்டேஜ் பிரச்சனை

    1.தற்பொழுதுள்ள வெய்டேஜ் முறையினால் +2 மற்றும் ஆசிரிய பட்டய மதிப்பெண்ணை அதிகப்படுத்த வாய்ப்பே இல்லை.இது மிகப்பெரிய குறையாகும்.

    2.இப்பொழுது உள்ள பாட முறைக்கும் 1999 ல் உள்ள பாட முறைக்கும் உள்ள வேறுபாடு, பாட பிரிவுகளின் வேறுபாடு மற்றும் செய்முறை தேர்வு மதிப்பெண்களின் வேறுபாடு இவற்றால் தகுதியான வெய்டேஜ் மதிப்பெண்ணை கண்க்கிடுவது சரியானதாக இருக்க முடியாது.

    3.அப்பொழுது உள்ள சூழ் நிலைவேறு.இப்பொழுது கம்யூட்டர்,இன்டர்னெட் வசதிகள் அதிகம்.வாய்ப்புகளும் வசதிகளும் தற்பொழுது அதிகமாக உள்ளது.

    4. 2010 கல்விக்கொள்கையின்படி நடப்பு ஆண்டின் அறிவை சோதிக்கவேண்டுமே தவிர பழைய மதிப்பெண்களை வெய்டேஜ் முறைக்கு எடுப்பது ஏற்றுக்கொள்ள கூடியது அல்ல.

    5.தமிழக அரசின் இது போன்ற முறையற்ற அறிவிப்புகளால் என்னைப்போன்றோர் பலர் மனரீதியாக பாதிக்கப்பட்டுள்ளனர். இதனால் எங்களது வாழ்வாதாரமும், உரிமைகளும் பறிக்கப்பட்டுள்ளது.

    6.ஆசிரியர் பணி வழங்க இவ்வளவு கால தாமதம் ஆனதற்கு காரணம் வெய்டேஜ் முறையாகும். இதற்கு 2012 ஆம் ஆண்டின் முறையில் (TET Pass + SENIORITY) ஆசிரியர் பணி வழங்கியிருந்தால் இப்படிப்பட்ட எந்த ஒரு பிரச்சனையும் ஏற்பட்டிருக்காது.

    ஆகவே தகுதித்தேர்வு அறிவித்த ஆண்டிற்கு (2010) முன்பாக உள்ளவர்களுக்கு தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பு அடிப்படையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்,

    அல்லது தகுதித்தேர்வு மதிப்பெண் + வேலைவாய்ப்பு அலுவலக பதிவு மூப்பின்படி 50 சதவீதம், வெய்டேஜ் முறையில் 50 சதவீதம் என்ற முறையில் ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இந்த முறை அனைத்து தேர்வர்களுக்கும் பொதுவானதாகும்.யாரையும் பாதிக்காத முறையாகும்.
    ஆகவே அனைத்து தகுதிகளும் உள்ள எங்களுக்கு ஆசிரியர் பணி வழங்கவேண்டும்.இல்லையெனில் இந்த ஏமாற்றத்துடன் நான் தமிழ் நாட்டில் வாழ விரும்பவில்லை, எனவே நான் இந்திய குடிமகன் என்பதற்கு ஆதாரமாக உள்ள எனது வோட்டர் I D, ரேசன் கார்டு மற்றும் ஆதார் கார்டு இவற்றை திரும்பப்பெற்றுக்கொண்டு என்னை அகதியாக்கி வேறொரு நாட்டிற்கு அனுப்புமாறு கேட்டுக்கொள்கிறேன்.

    ReplyDelete
  4. கல்வியாளர் கஜேந்திரபாபு அவர்களுக்கு கோடான கோடி நன்றி....

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive