Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பணி நியமனம் மற்றும் கலந்தாய்வு குறித்து செய்திதாள் கோர்வை

14,700 புதிய ஆசிரியர்களுக்கு நாளை முதல் பணி நியமனம்

           புதிதாக தேர்வு பெற்ற, 14,700 ஆசிரியர்களுக்கு, பணி நியமன உத்தரவு வழங்குவதற்கான கலந்தாய்வு, நாளை முதல், 'ஆன்லைன்' வழியில் நடக்கிறது. நேற்று, பணி நியமன ஆணை வழங்குவதற்கு அடையாளமாக, ஏழு பேருக்கு, தலைமைச் செயலகத்தில், முதல்வர் ஜெயலலிதா, பணி நியமன ஆணையை வழங்கினார்.


இது குறித்து, பள்ளிக் கல்வி இயக்குனர், ராமேஸ்வர முருகன் வெளியிட்ட அறிவிப்பு:
முதுகலை ஆசிரியர், மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடத்திற்கான கலந்தாய்வு, 30ம் தேதியும் (நாளை), ஒரு மாவட்டத்தில் இருந்து, வெளி மாவட்டத்தில் சேர்வதற்கு, 31ம் தேதியும் கலந்தாய்வு நடக்கும்.இடைநிலை ஆசிரியர், மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடத்திற்கு, செப்., 1ம் தேதியும், வெளி மாவட்டங்களுக்கு, செப்., 2ம் தேதியும் கலந்தாய்வு நடக்கும்.
பட்டதாரி ஆசிரியர், மாவட்டத்திற்குள், செப்., 3ம் தேதியும், வெளி மாவட்டங்களில், பணி நியமனம் பெறுவதற்கான கலந்தாய்வு, செப்., 4, 5ம் தேதிகளிலும் நடக்கும். தேர்வு பெற்றவர்கள், ஆசிரியர் தேர்வு வாரியத்தின், தேர்வுக் கடிதம் மற்றும் அசல் சான்றிதழ்களுடன், இருப்பிட முகவரி சம்பந்தபட்ட மாவட்டத்தில் அமைக்கப்பட்டுள்ள கலந்தாய்வு மையத்திற்கு, சம்பந்தபட்ட நாட்களில், காலை, 9:00 மணிக்கு, நேரில் ஆஜராக வேண்டும். இவ்வாறு, இயக்குனர் தெரிவித்துள்ளார்.

ஆக.,30-ல் ஆசிரியர் பணி கலந்தாய்வு - தினமலர்

ஆசிரியர் பணிக்கு தேர்வு செய்யப்பட்ட 14 ஆயிரத்து 700 பேருக்கு பணி நியமன கலந்தாய்வு நடைபெறுகிறது. இதன்படி வரும் 30-ம் .தேதி முதுகலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் உள்ள காலி பணி இடங்களுக்கு) முதுகலை ஆசிரியர்கள் (வேறு மாவட்டத்தில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு) 31-ம்தேதியும்,
இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள் உள்ள காலி பணியிடங்களுக்கு) செப்., ஒன்றாம் தேதியும் (வேறு மாவட்டத்திற்குள் உள்ள காலிப்பணியிடங்களுக்கு)செப்.,2-ம் தேதியும்), 
பட்டதாரி ஆசிரியர்களுக்கு (மாவட்டத்திற்குள் ?ள்ள காலிபணியடங்களுக்கு) செப்3-ம் தேதியும், பட்டதாரிஆசிரியர்கள் (வேறு மாவட்டத்திற்குள் உள்ள காலிப்பணியிடங்களுக்கு) செப்.,4,5ம் தேதியும் நடைபெறும் ஆசிரியர்களுக்கு இணையம் மூலம் கலந்தாய்வு நடைபெறும் எனவும் தமிழகம் முழுவதும் அறவி்க்கப்பட்டுள்ள 32மையங்களில் கலந்தாய்வு நடைபெறும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 14,700 ஆசிரியர்களுக்கு கலந்தாய்வு நாளை தொடங்குகிறது

புதிதாக தேர்ந்து எடுக்கப்பட்ட 14,700 ஆசிரியர்களை பணி நியமனம் செய்வதற்கான கலந்தாய்வு நாளை (சனிக்கிழமை) முதல் 4–ந் தேதி வரை நடக்கிறது

ஆசிரியர்கள் தேர்வு

முதல்–அமைச்சர் ஜெயலலிதா உத்திரவின்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான www.trb.tn.nic.in –ல் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம்பெற்றுள்ள 14,700 ஆசிரியர்களுக்கான நியமன கலந்தாய்வு இணையதளம் வாயிலாக நடத்தப்படவுள்ளது.

அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை, மேல்நிலைப்பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள், பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் அரசு, நகராட்சி, ஊராட்சி ஒன்றிய நடுநிலை மற்றும் தொடக்கப்பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள், இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வுவாரியம் மூலம் நேரடி நியமனத்திற்காக தேர்வு செய்யப்பட்ட பணி நாடுநர்களுக்கு இணையதளம் வாயிலாக காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

நாளை தொடங்குகிறது

முதுகலை ஆசிரியர்கள் மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 30–ந் தேதியும் (நாளை), வேறு மாவட்டத்தில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 31–ந் தேதியும், இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) செப்டம்பர் மாதம் 1–ந் தேதியும், (வேறு மாவட்டத்திற்கு) 2–ந் தேதியும், பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்) 3–ந் தேதியும், (வேறு மாவட்டத்திற்கு) 4, 5–ந் தேதிகளும் கலந்தாய்வு நடக்கிறது.

சென்னையில் மைலாப்பூரில் உள்ள சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூரில் ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளியிலும், காஞ்சீபுரத்தில் டாக்டர் பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப்பள்ளியிலும் இந்த கலந்தாய்வு நடக்கிறது.

இந்த தகவலை பள்ளிக்கல்வி இயக்குனர் வி.சி.ராமேஸ்வர முருகன் தெரிவித்துள்ளார்.

இணையதளம் வாயிலாக கலந்தாய்வு நடைபெறும்-புதிய தலைமுறை

வருகின்ற August 30 முதல் 05/09/2014 வரை புதியதாக தேர்ச்சிப் பெற்ற ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு நடைபெறும்.


முதுகலை ஆசிரியர்கள்
மாவட்டத்திற்குள்-30.08.2014
வேறு மாவட்டம் -31.08.2014

இடைநிலை ஆசிரியர்கள்
மாவட்டத்திற்குள்-1.09.2014
வேறு மாவட்டம் -2.09.2014

பட்டதாரி ஆசிரியர்கள்
மாவட்டத்திற்குள்-3.09.2014
வேறு மாவட்டம் -4.09.2014
வேறு மாவட்டம் -5.09.2014

ஆசிரியர் பணிக்கான கலந்தாய்வு 30-ம் தேதி ஆரம்பம்-மாலைமலர்

தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் 2353 முதுகலை ஆசிரியர்கள், 10698 பட்டதாரி ஆசிரியர்கள், 1649 இடைநிலை ஆசிரியர்கள் என மொத்தம் 14700 ஆசிரியர்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களுக்கு பணி வழங்குவதற்கான கலந்தாய்வு வரும் 30-ம் தேதி முதல் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
 
     
  •  அதன்படி முதுகலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு ஆகஸ்ட் 30-ம் தேதியும், வேறு மாவட்டங்களில் உள்ள காலிப் பணியிடங்களுக்கு 31-ம் தேதியும் நடைபெறும்.

  • இடைநிலை ஆசிரியர்களுக்கான கலந்தாய்வு மாவட்டத்திற்குள் உள்ள பணியிடங்களுக்கு செப்டம்பர் முதல் தேதியும், வேறு மாவட்டங்களில் உள்ள பணியிடங்களுக்கு 2-ம் தேதியும்,

    பட்டதாரி ஆசிரியர்களைப் பொருத்தவரை, மாவட்டத்திற்குள் உள்ள காலிப் பணியிடங்களுக்கு செப்டம்பர் 3-ம் தேதியும், வேறு மாவட்டத்தில் உள்ள பணியிடங்களுக்கு செப்டம்பர் 4 மற்றும் 5-ம் தேதிகளிலும் கலந்தாய்வு நடைபெறுகிறது.

    தமிழகம் முழுவதும் அறிவிக்கப்பட்டுள்ள 32 மையங்களில் இணையதளம் மூலம் கலந்தாய்வு நடத்தப்பட்டு பணி நியமன ஆணை வழங்கப்பட உள்ளது.

புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள ஆசிரியர்களுக்கு 30-08-2014 முதல் 05-09-2014 வரை கலந்தாய்வு

மாண்புமிகு தமிழக முதலமைச்சர் அவர்களின் உத்திரவின்படி ஆசிரியர் தேர்வு வாரியத்தால் தெரிவு செய்யப்பட்டு, ஆசிரியர் தேர்வு வாரியத்தின் இணையதளமான www.trb.tn.nic.in- ல் வெளியிடப்பட்டுள்ள பட்டியலில் இடம் பெற்றுள்ள 14,700 ஆசிரியர்களுக்கான நியமனக் கலந்தாய்வு இணையதளம்
வாயிலாக, நடத்தப்படவுள்ளது.
 அரசு மற்றும் நகராட்சி உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் உள்ள முதுகலை ஆசிரியர்கள் / பட்டதாரி ஆசிரியர்கள் காலிப்பணியிடங்கள் மற்றும் அரசு /நகராட்சி/ ஊராட்சி ஒன்றிய நடுநிலை/ தொடக்கப் பள்ளிகளில் உள்ள பட்டதாரி ஆசிரியர்கள்/ இடைநிலை ஆசிரியர்கள் காலிப்பணியிடங்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியம் மூலம் நேரடி நியமனத்திற்காக தெரிவு செய்யப்பட்ட பணிநாடுநர்களுக்கு இணையதளம் வாயிலாகக் கீழ்க்கண்ட அட்டவணையின்படி காலை 9 மணி முதல் கலந்தாய்வு நடத்தப்பட்டு, பணிநியமன ஆணைகள் வழங்கப்பட உள்ளன.

 பணிநாடுநர்களுக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் நுழைவுச் சீட்டில் (Hall ticket) குறிப்பிடப்பட்டுள்ள அவர்களது இருப்பிட முகவரியில் உள்ள மாவட்டத்தில், பின்வரும் இடங்களில் நடைபெறும் கலந்தாய்வில் அவர்களது கல்விச் சான்றுகள் மற்றும் ஆசிரியர் தேர்வு வாரியத்தின் தெரிவுக் கடிதம் ஆகியவற்றுடன் தவறாமல் கலந்து கொள்ளுமாறு பணிநாடுநர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள்.

  1. முதுகலை ஆசிரியர்கள்- (மாவட்டத்திற்குள்)   30-08-2014
  2. முதுகலை ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்)    31-08-2014
  3. இடைநிலை ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்)  01-09-2014
  4. இடைநிலை ஆசிரியர்கள்(வேறு மாவட்டம்)   02-09-2014
  5. பட்டதாரி ஆசிரியர்கள் (மாவட்டத்திற்குள்)    03-09-2014
  6. பட்டதாரி ஆசிரியர்கள் (வேறு மாவட்டம்)     04-09-2014 மற்றும் 05-09-2014
கலந்தாய்வு நடைபெறும் இடம்

1 சென்னை சி.எஸ்.ஐ. செயின்ட் எப்பாஸ் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, எண்.160, டாக்டர் இராதாகிருஷ்ணன் சாலை, மைலாப்பூர், சென்னை-4.
2 கோயம்புத்தூர் பாரதி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, ஆர்.எஸ்.புரம், தடாகம் ரோடு, கோயம்புத்தூர்
3 கடலூர் முதன்மைக் கல்வி அலுவலகம், மஞ்சகுப்பம், கடலூர்
4 தருமபுரி முதன்மைக் கல்வி அலுவலகம், மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகம், தருமபுரி.
5 திண்டுக்கல் அவர்லேடி மேல்நிலைப் பள்ளி, மதுரை ரோடு, திண்டுக்கல்
6 ஈரோடு வெள்ளாளர் கலைக் கல்லூரி, திண்டல், ஈரோடு
7 காஞ்சிபுரம் டாக்டர். பி.எஸ்.சீனிவாசன் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, காஞ்சிபுரம்
8 கன்னியாகுமரி எஸ்.எல்.பி.மேல்நிலைப் பள்ளி, நாகர்கோவில்
9 கரூர் பசுபதி ஈஸ்வரா நகர்மன்ற பெண்கள் மேல்நிலைப் பள்ளி, கரூர்.
10 கிருஷ்ணகிரி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி, கிருஷ்ணகிரி.
11 மதுரை இளங்கோ மாநகராட்சி மேல்நிலைப் பள்ளி, இராஜாஜி மருத்துவமனை அருகில் செனாய்நகர், மதுரை-3.
12 நாகப்பட்டினம் கிரசன்ட் மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, நாகூர்.
13 நாமக்கல் நாமக்கல் தெற்கு அரசு மேல்நிலைப் பள்ளி, நாமக்கல்.
14 பெரம்பலூர் தனலட்சுமி சீனிவாசன் மேல்நிலைப் பள்ளி, பெரம்பலூர்.
15 புதுக்கோட்டை பிரகதாம்பாள் தேர்வுக் கூடம், (முதன்மைக் கல்வி அலுவலகம் அருகில்), புதுக்கோட்டை.
16 இராமநாதபுரம் சையது அம்மாள் மேல்நிலைப் பள்ளி, இராமநாதபுரம்.
17 சேலம் சிறுமலர் மேல்நிலைப் பள்ளி, நான்குரோடு, சேலம்.
18 சிவகங்கை மருதுபாண்டியர் அரசு மேல்நிலைப்பள்ளி, சிவகங்கை. (மாவட்ட ஆட்சியர் வளாகம் அருகில்).
19 தஞ்சாவூர் அனைவருக்கும் கல்வி திட்ட அலுவலகம், கூடுதல் முதன்மைக் கல்வி அலுவலக வளாகம், தஞ்சாவூர்
20 நீலகிரி முதன்மைக் கல்வி அலுவலகம், நீலகிரி.
21 தேனி முதன்மைக் கல்வி அலுவலகம், தேனி.
22 திருவண்ணாமலை முதன்மைக் கல்வி அலுவலகம், தியாகி அண்ணாமலைப்பிள்ளை அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், திருவண்ணாமலை.
23 திருவாரூர் கஸ்தூரிபாய் காந்தி மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, திருவாருர்.
24 திருவள்ளூர் ஸ்ரீலெட்சுமி மேல்நிலைப் பள்ளி, திருவள்ளூர்.
25 திருப்பூர் ஜெய்வாபாய் மகளிர் நகராட்சி மேல்நிலைப் பள்ளி, (இரயில் நிலையம் அருகில்), திருப்பூர்
26 திருச்சி அரசு சையத்முர்துசா மேல்நிலைப் பள்ளி, திருச்சி-8.
27 திருநெல்வேலி சேப்டர் மேல்நிலைப் பள்ளி, திருநெல்வேலி டவுன், திருநெல்வேலி
28 தூத்துக்குடி முதன்மைக் கல்வி அலுவலகம், சீ.வா. அரசு மேல்நிலைப் பள்ளி வளாகம், தூத்துக்குடி.
29 வேலூர் nஉறாலி கிராஸ் மேல்நிலைப் பள்ளி, சத்துவாச்சாரி, வேலூர்.
30 விழுப்புரம் முதன்மைக் கல்வி அலுவலகம், விழுப்புரம்.
31 விருதுநகர் கே.வி.எஸ். மெட்ரிக் மேல்நிலைப் பள்ளி, விருதுநகர்.
32 அரியலூர் அரசு மேல்நிலைப் பள்ளி, அரியலூர்.

















3 Comments:

  1. மொத்தமாகப் பள்ளிகளையும், கல்லூரிகளையும் நடத்த வேண்டிய அரசு, வீதிக்கு வீதி சாராயம் விற்றுக்கொண்டிருக்கிறது. சாராயம் விற்றுக்கொண்டிருந்த பலர் இன்று கல்லூரிகளை வைத்து வியாபாரம் நடத்திக்கொண்டிருக்கிறார்கள்.

    ReplyDelete
    Replies
    1. dear fnd its not permantent justv only temberuary because today kerala tomorrow tamilnadu so we will wait and watch.

      Delete
  2. When is the additional vacancy list coming for paper2?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive