Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

டி.என்.பி.எஸ்.சி.க்கு புதிய தலைவர் எப்போது?

              தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்துக்கு புதிய தலைவர் நியமனம் குறித்த அறிவிப்பு எப்போது வெளியாகும் என்ற எதிர்பார்ப்பில் ஊழியர்களும், தேர்வர்களும் உள்ளனர். தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் தலைவராக இருந்த ஏ.நவநீதகிருஷ்ணன், மாநிலங்களவை இடைத் தேர்தல் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து, டி.என்.பி.எஸ்.சி., தலைவர் பொறுப்பை கடந்த ஜூன் மாதம் அவர் ராஜிநாமா செய்தார். இதன்பின், தலைவர் பொறுப்பை டி.என்.பி.எஸ்.சி. உறுப்பினராக உள்ள பாலசுப்பிரமணியன் கூடுதல் பொறுப்பாக கவனித்து வருகிறார்.

         தலைவர் நியமனம்: தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தை திறம்பட செயல்படுத்தும் நபர் ஒருவரை தலைவராக நியமிக்க வேண்டும் என்ற கோரிக்கையை ஊழியர்களும், தேர்வர்களும் முன்வைக்கின்றனர்.

          புதிய தலைவர் தேர்வு செய்யப்படாமல் இருப்பது, குரூப் 2 போன்ற முக்கிய தேர்வுகளின் முடிவுகளை வெளியிடுவதில் தாமதத்தை ஏற்படுத்துவதாகவும், விரைவில் புதிய தலைவர் தேர்வு செய்யப்பட்டால் பணிகள் தொய்வின்றி விரைந்து நடைபெற வாய்ப்பு ஏற்படும் என்று தேர்வாணைய வட்டாரங்கள் கூறுகின்றன.
 
               இது குறித்து, அரசுத் துறை வட்டாரங்களிடம் விசாரித்த போது, டி.என்.பி.எஸ்.சி.க்கு புதிய தலைவரை நியமிப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும், அதற்கான உரிய அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் எனவும் தெரிவிக்கப்படுகிறது




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive