Best NEET Coaching Centre

Best NEET Coaching Centre

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் நியமனம் செய்யக் கோரி செப்.1-இல் பேரணி - தினமணி

       ஆசிரியர் தகுதித் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வலியுறுத்தி வரும் செப்டம்பர் 1-ஆம் தேதி சென்னையில் கவன ஈர்ப்புப் பேரணி நடைபெற உள்ளது.
 
         இது குறித்து அந்த அமைப்பின் தலைவர் ஆர்.செல்லதுரை சென்னையில் செய்தியாளர்களிடம் செவ்வாய்க்கிழமை கூறியது: பட்டதாரி ஆசிரியர் பணிக்கு ஆசிரியர் தேர்வு வாரியத்தின் சார்பில் கடந்த 10.8.2014 அன்று வெளியிடப்பட்ட பட்டியலில் சுமார் 11,000 பேர் தாற்காலிகமாகத் தேர்வு பெற்றதாக அறிவிக்கப்பட்டது. இந்தப் பட்டியலில் 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்றவர்களில் 9 ஆயிரம் பேரின் பெயர்கள் இடம்பெறாதது கண்டு அதிர்ச்சியடைந்தோம்.

         அதையடுத்து தகுதிகாண் மதிப்பெண் முறையை ரத்து செய்ய வேண்டும், ஆசிரியர் தகுதித்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் பணி நியமனம் செய்ய வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வருகிறோம்.

           அடுத்த கட்டமாக, இதே கோரிக்கைகளை மீண்டும் வலியுறுத்தி செப்டம்பர் 1-ஆம் தேதி காலை 10 மணிக்கு எழும்பூர் ராஜரத்தினம் அரங்கிலிருந்து புதுப்பேட்டை லாங்ஸ் கார்டன் வரை கவன ஈர்ப்புப் பேரணி நடத்தத் திட்டமிட்டுள்ளோம். பேரணியின் முடிவில் கோரிக்கைகளை பரிசீலிக்கக் கோரி முதல்வர் ஜெயலலிதாவிடம் மனு அளிக்கவுள்ளோம் .




9 Comments:

  1. thanks.தர்மத்தின் வாழ்வுதனை சூது கவ்வும்.தர்மம் மறுபடியும் வெல்லும்.

    ReplyDelete
  2. கடின உழைப்புக்கு ஏற்ற பரிசு கிடைப்பது தான் தர்மம்

    ReplyDelete
  3. PLEASE SAY THE GOVERNMENT TO NEXT TIME POSTING FIRST PREFERENCE IN LOST CANDIDATES BOTH PAPER I AND PAPER II.THIS IS THE BEST IDEA OF ALL CANDIDATES FUTURE.THANKS

    ReplyDelete
  4. Seniority method ok . Anal TET mark adipataiyiil pani valanginal 5% relxtion no use ethanal innum problem athigamthan agum so(50% seni+ 50% wtge) yarukkum paathippu illai

    ReplyDelete
    Replies
    1. mark குறைத்தவர்களுக்கு அநீதி என்கிறீர்கள் இந்த முறை நீடித்தால் 90க்கு மேல் எடுப்பவர்களுக்கு என்றைக்குமே அநீதி தான்

      Delete
    2. 50 & 50 correct sir , ellai entral mendum pirachanai erppadum ethu unmai

      Delete
    3. TET pass seithavargalai 50 seniority & 50 TET mark ethve sariyaga erukkum

      Delete
  5. நமது சி.எம். கன்டிப்பாக நமது கோரிக்கையை ஏற்ப்பார் என நம்புவோமக.

    ReplyDelete
  6. Poraduvom poraduvom TET pass seithavargalai seniority adippadayilum velai valanga vendumendru poraduvom

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive