Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Android Rooting என்றால் என்ன? செய்வது எப்படி?


       நிறைய பேருக்கு அது குறித்த கேள்விகள் இருப்பதால் அது பற்றிய நிறை, குறைகளை சொல்லி விட்டு எப்படி Root செய்வது என்று சொல்கிறேன். அதன் பிறகு உங்கள் விருப்பம்.
Android Rooting என்றால் என்ன?

            Android Rooting என்பது உங்கள் போனுக்கு நீங்கள் Super User Access பெறுவதற்கு உதவுகிறது. இதன் மூலம் நீங்கள் இதுவரை உங்கள் போன் மூலம் என்ன செய்ய முடியாது என்று நினைத்தீர்களோ அவை அனைத்தையும் செய்யலாம். custom software (ROM’s) வசதி, Custom Themes, வேகமான செயல்பாடு, அதிகரிக்கும் Battery Life, OS Upgrade மற்றும் பல.
எளிதாக சொல்ல வேண்டும் என்றால் உங்கள் போனை நீங்கள் ஹாக் செய்து விட்டீர்கள் என்று
அர்த்தம்.
பலன்கள்:
Custom Software (ROM’s):
ROM (Read Only Memory) ஆனது Android போனை இயக்க உதவுகிறது. போனில் Default ஆக இருக்கும் ROM -ஐ மாற்றும் வசதி சாதரணமாக கிடைக்காது. Root செய்வதன் மூலம் Custom ROM வசதி நமக்கு கிடைக்கும். இதன் பெரிய பலன் இதன் மூலம் Android OS Upgrade வசதி நமக்கு கிடைக்கும்.
Custom Themes:
Android Theme – ஐ நீங்கள் மற்றும் வசதி இதன் மூலம் கிடைக்கிறது.
Speed and Battery:
முன்னமே சொன்னது போல போனின் Speed மற்றும் Battery Life அதிகரிக்கும்.
Android OS Upgrade:
மேலே சொன்னது போல Custom ROM உங்களுக்கு Android OS Upgrade வசதியை பெற முடியும்.
இவை மட்டுமின்றி WiFi and USB tethering, Simple Backup Solution போன்ற வசதிகள் கிடைக்கும்.
குறைபாடுகள்:
பிரச்சினை என்றால் சில Applications உங்கள் போனில் இயங்க மறுக்கும், இதனால் புது போன் வாங்கும் நிலைக்கு கூட கொண்டு செல்லும்.
Android Market அல்லாத Applications அல்லது இணையம் மூலம் Virus வரும் வாய்ப்பு உள்ளது. இது நீங்கள் மிகவும் கவனிக்க வேண்டிய ஒன்று.
இப்படி ரூட் செய்து உங்கள் போனில் ஏதேனும் பிரச்சினை வாரண்டி கிளைம் செய்ய முடியாது. (நன்றி – மாசிலா, பின்னூட்டம்)
Android Phone – ஐ Root செய்வது எப்படி?
முதலில் உங்கள் போனில் உள்ள முக்கிய தகவல்களை Backup எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். போன் மெமெரியில் 25MB Space இருக்கும் படி பார்த்துக் கொள்ளுங்கள்.
1இப்போது SuperOneClick என்ற மென்பொருளை உங்கள் கணினியில் இன்ஸ்டால் செய்து கொள்ளுங்கள்.
2. இப்போது உங்கள் Android போனை உங்கள் கணினியில் USB Data Cable மூலம் இணைத்து விட்டு, Settings>> Applications >> Development என்பதில் “USB Debugging” என்பதை enable செய்யவும்.
3. இப்போது கணினியில் SuperOneClick மென்பொருளை ஓபன் செய்யுங்கள்.
4. Samsung Capacitive என்கிற போன் மாடல் தவிர மற்றவற்றை பயன்படுத்துபவர்கள் Universal என்பதை கிளிக் செய்து Root என்பதை கிளிக் செய்யவும்.
5. இப்போது சிறிது நேரத்தில் உங்கள் Phone Root ஆகி விடும். அதன் பின்னர் Allow Non Market Apps என்பதை கிளிக் செய்யுங்கள் (தேவைப்பட்டால்).
அவ்வளவு தான் உங்கள் போன் Root ஆகி விட்டது. ஆனால் போனின் பாதுகாப்பு இனி உங்கள் கையில்.
Android Phone – இல் இருந்தே Root செய்ய உதவும் Applications:link ��
https://code.google.com/p/zero-gaming-apps/downloads/detail?name=UniversalAndroot-1.6.2-beta5.apk&can=2&q=
http://www.freewarelovers.com/android/app/z4root




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive