Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TET:ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு முன்னுரிமை

          புதுச்சேரி கல்வித் துறை பணியிட நியமனங்களில் ஆசிரியர் தகுதித் தேர்வில் வெற்றிபெற்றவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
 
        இதுதொடர்பாக கல்வித் துறை இயக்குநர் ல.குமாரிடம், புதுச்சேரி மாணவர் பெற்றோர் நலச்சங்கத் தலைவர் வை.பாலா அளித்த மனு:

             கடந்த ஜூலை 2012-ல் தமிழக அரசால் நடத்தப்பட்ட ஆசிரியர் தகுதித் தேர்வில் (பஉப) புதுச்சேரி, காரைக்காலைச் சேர்ந்த சுமார் 8,500 பேர் பங்கேற்றனர். இதில் 20 பேர் மட்டுமே 90 மதிப்பெண்கள் மற்றும் அதற்கு மேல் பெற்று தேர்வாகி இருந்தனர்.கடினமான இதில் தேர்ச்சி பெற்ற இவர்களில் பலர் இன்று வரை அரசுப் பணி கிடைக்காமல் வேதனையில் உள்ளனர்.

250 பேர் காத்திருப்பு:
                 தகுதித் தேர்வில் இதுவரை 90 மதிப்பெண்களுக்கு மேல் பெற்று சுமார் 250 பேர் அரசுப் பணிக்காக காத்துக் கொண்டிருக்கும் நிலையில் தற்போது தகுதித் தேர்வு மதிப்பெண்களை தளர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இது தகுதியுடன் பணிக்காக காத்துக்கொண்டிப்போர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.தற்போது நிரப்பப்பட உள்ள 425 இடைநிலை ஆசிரியர்களின் பணி நியமனத்தில் ஆசிரியர் தகுதித் தேர்வில் 90 மதிப்பெண்கள் மேல் பெற்றவர்களுக்கு முன்னுரிமை தர வேண்டும் என அதில் கோரப்பட்டுள்ளது.




4 Comments:

  1. When is the lab assistant exam result?

    ReplyDelete
    Replies
    1. பள்ளிகளில் ஆய்வக உதவியாளரை நியமிக்க கடந்த 2013 ஆம் ஆண்டு அரசு ஒப்புதல் அளித்தது. உடனே நமது நல்உள்ளம் படைத்த அரசியவாதிகள் &அலுவலர்கள் ஒரு குறிப்பிட்ட தொகையை நிர்ணயித்து, வெற்றிகரமாக வசூலித்து அனைத்து பங்குதாரர்களுக்கும் ரகசியமாக பணத்தை சேர்த்து விட்டனர். உடனே மகிழ்ச்சி வெள்ளத்தில் திளைத்த லஞ்சம் வாங்கிய நாய்கள், 2014 ஆம் ஆண்டு பணி நியமன ஆணை வழங்க ஒரு சில வாரம் இருக்கும் போது, பள்ளிகளில் ஆய்வக உதவியாளர் பணியிடம் நிரப்ப பட உள்ளது என்ற தகவல் வெளிவர, நம்மை போன்ற இளைஞர் ஒருவர் அதைபற்றி தகவலை அதிகாரிகளிடம் கேட்டார். அதற்க்கு அவர்கள் சரியான பதில் அளிக்கவில்லை. உடனே நீதிமன்றம் சென்றார். நீதிமன்றம் கூறிய தீர்ப்பு: "காலிபணியிடங்களை நிரப்பும் போது முறையக செய்திதாளில் அறிவிப்பு வெளியிட்டு எழுத்து தேர்வு நடத்தி பின்னர் நிரப்ப வேண்டும் " என்று பெரிய குண்டை தூக்கிபோட பணம் வாங்கியவர்கள் பதறிபோயினர். அப்போது தான் லஞ்சம் வாங்கிய நாய்கள் யோசித்தனர். தேர்வு நடத்தும் பொறுப்பை Tnpsc or TRB யிடம் ஒப்படைத்தால் அவர்கள் கொடுக்கும் பட்டியலில் உள்ள நபரைதான் போட முடியும். So நாமளே Exam நடத்தினால் என்ன என்று TNDGE யிடம் தேர்வை ஒப்படைத்தனர். மேலூம் தேர்வில் 150 க்கு 150 எடுத்தாலூம் கூட பின்னர் நடத்தபடும் நேர்முக தேர்வில் தான் பணி உறுதி செய்யபடும் என்றும் விதியை வரையறை செய்தனர். ஒருவழியாக 2015 ல் Exam நடந்தது. பணம் வாங்கிய பெருச்சாளிகள் நிம்மதியடைந்தனர். அதன்படிResult வெளியிட்டு, நெர்முக தேர்வையும் பெயருக்கு நடத்த தயார் நிலையில் இருந்த போது தான் மீண்டும் ஒரு Case. இதன் தீர்ப்பு "பணிநியமன ஆணை வழங்க அவர்களின் எழுத்து தேர்வின் மதிப்பெண்ணையும் கவனத்தில் கொள்ள வேண்டும்" என்று கூறியது. இதையும் மீறி எவ்வாறு பணம் வாங்கியவர்களுக்கு பணி ஆணை கொடுப்பது என்று தீவிர யோசனையில் உள்ளனர். Ok. விரைவில் அறிவிப்பு வரும் 2018 ல்.

      Delete
  2. They mentioned 250 candidates waiting for job with above 90 marks in TET. Puducherry government gives 217 vacancies for 90 marks. Remains 37 candidates should come under other category. Then why they appeal in High Court. This is waste of time.

    ReplyDelete
  3. recruitment வந்த பிறகு 82,75 மதிப்பெண் பெற்றவர்களுக்கு இடையுறு செய்கிறீர்களே G.O. வந்தபோதே முறையிட வேண்டியதுதானே . G.O. வந்து மூன்று மதங்களுக்கு பிறகு வேலைக்கு விண்ணபித்து காத்திருக்கும் போது பிரச்சனை பன்றிங்களே இது உங்களுக்கே நியாயமாக உள்ளதா ?

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive