மருத்துவ படிப்புகளுக்கு 11ல் விண்ணப்பம்

சென்னை : எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான விண்ணப்ப வினியோகம், வரும், 11ம் தேதி துவங்குகிறது.
இது குறித்து, மருத்துவ கல்வி இயக்ககம் வெளியிட்ட அறிவிப்பு:தமிழகத்தில், அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லுாரிகளில் உள்ள, எம்.பி.பி.எஸ்., - பி.டி.எஸ்., படிப்புகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற உள்ளது. இதற்கு, ஜூன், 10ல், அறிவிப்பாணை வெளியிடப்படும். விண்ணப்ப வினியோகம், 11ம் தேதி துவங்கும். ஜூன், 18 மாலை, 5:00 மணி வரை, அரசு மருத்துவக் கல்லுாரிகள் மற்றும், www.tnhealth.org, www.tnmedicalselection.org என்ற இணையதளங்களில், விண்ணப்பங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம்.பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை, ஜூன், 19ம் தேதி மாலை, 5:00 மணிக்கு முன், 'மருத்துவ மாணவர் சேர்க்கை குழு செயலர், ஈ.வெ.ரா., நெடுஞ்சாலை, கீழ்ப்பாக்கம்' என்ற, முகவரியில் சமர்ப்பிக்க வேண்டும். தர வரிசை பட்டியல், ஜூன், 28ல் வெளியிடப்படலாம். ஜூலை, 7ல் முதற்கட்ட கவுன்சிலிங், 22ல், இரண்டாம் கட்ட கவுன்சிலிங் நடைபெற வாய்ப்புள்ளது. விபரங்களை இணையதளத்தில் மாணவர்கள் பார்த்து தெரிந்து கொள்ளலாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Share this

0 Comment to " மருத்துவ படிப்புகளுக்கு 11ல் விண்ணப்பம்"

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...