தமிழகத்திலுள்ள 32 மாவட்டங்களிலும் இலவச ஐஏஎஸ் அகாடமி துவக்கப்படும் என கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் கூறியுள்ளார். சட்டமன்றத்தில் இன்று பேசிய அவர்
இன்னும் 1 மாதத்திற்குள் தமிழகத்திலுள்ள 32 மாவட்ட நூலகங்களிலும் இலவச ஐஏஎஸ் அகாடமி துவக்கப்படும் என்றார். பேரவையில் தருமபுரி சட்டமன்ற உறுப்பினர் சுப்பிரமணியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் செங்கோட்டையன், நூலகங்களை பராமரிக்க தற்போது தனியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், அதற்கான பணிகள் நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
மேலும் பேசிய அமைச்சர் செங்கோட்டையன், சட்டமன்ற உறுப்பினர்கள் அவர்கள் தொகுதிகளில் நூலகங்கள் அமைக்க நூல்களை வழங்க வேண்டும் என கேட்டுக் கொண்டார். எத்தனை நூல்கள் வழங்கினாலும் அதனை பெற்று கொண்டு, நூலகங்களில் வைப்பதற்கென தனியாக குழு அமைக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் குறிப்பிட்டார்.
Appadiye NEET COACHING aarampichu yellaraiyum doctor akkiyachu.....aduthu IAS centre aarampichu yellaraiyum collector akkaporinga.....pesu...pesu....aana ippadi oru koomuttaiya...
ReplyDelete