இந்தியா முழுவதும் தேசிய தகுதி மற்றும் நுழைவுத்தேர்வு (நீட்) மூலமே மருத்துவ கலந்தாய்வு நடந்தது. இதற்காக தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவிபெறும் பள்ளிகளில் பிளஸ்-2 மாணவர்களுக்கு அரசு சார்பில் இலவச நீட் பயிற்சி அளிக்கப்பட்டது. மே மாதம் நடந்த நீட்தேர்வை 8,445 பேர் எழுதினார்கள். அவர்களில் 1,037 பேர் நீட் தேர்வில் தகுதிபெற்றனர்.
நீட் தேர்வு மதிப்பெண் அடிப்படையில் சென்னை ஓமந்தூரார் தோட்டத்தில் உள்ள பல்நோக்கு அரசு உயர் சிறப்பு மருத்துவமனை வளாகத்தில் முதல்கட்ட மருத்துவ கலந்தாய்வு கடந்த ஜூலை மாதம் 1-ந்தேதி தொடங்கி ஜூலை 7-ந்தேதி முடிவடைந்தது. மாநில பாடத்திட்டத்தில் படித்த மாணவர்கள் 72.25 சதவீதம் பேரும், சி.பி.எஸ்.இ. உள்ளிட்ட இதர பாடத்திட்டங்களில் படித்த மாணவர்கள் 27.75 சதவீதம் பேரும் தேர்வு ஆனார்கள்.
அரசு பள்ளிகளில் படித்த மாணவர்கள் 4 பேருக்கு மட்டுமே எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர இடம் கிடைத்துள்ளது. 4 பேருக்கும் அரசு மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது. அரசு உதவிபெறும் பள்ளிகளில் படித்த 26 மாணவ-மாணவிகளுக்கு அரசு மற்றும் அரசு உதவிபெறும் மருத்துவ கல்லூரிகளில் இடம் கிடைத்துள்ளது.
CM sonnathu sarithan. Oru payalum velai paarpathu illa....eppa paaru porattam.....ooda ooda uthaikanum
ReplyDelete