மலேசியா, சிங்கப்பூருக்கு 25 மாணவர்கள் கல்வி சுற்றுலா: அமைச்சர் செங்கோட்டையன் தகவல்

மலேசியா, சிங்கப்பூர் நாடுகளுக்கு 25
மாணவர்கள் கல்வி சுற்றுலா அழைத்து செல்லப்பட உள்ளதாக அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.
அரசுப் பள்ளிகளில் படிக்கும் மாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அழைத்துச் செல்ல தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி அறிவியல் கண்காட்சி, தேசிய திறனாய்வு தேர்வு உள்ளிட்ட பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற 50 அரசுப்பள்ளி மாணவர்களும், அவர்களைஅழைத்துச் செல்ல 2 ஆசிரியர்களும் தேர்வு செய்யப்பட்டனர். இந்தக் குழு கடந்த ஜனவரி 20-ம்தேதி சென்னையில் இருந்து புறப்பட்டு பின்லாந்து நாட்டுக்கு சென்றனர். அங்கு தங்கி ஆல்டோ டிசைன் தொழிற்சாலை, அறிவியல் மைய ஆய்வகங்கள் உட்பட பல இடங்களை பார்வையிட்டனர். அந்த நாடுகளின் கலை, பண்பாட்டு தகவல்களையும் அறிந்துகொண்டவர்கள் நேற்று தமிழகம் திரும்பினர். நாடு திரும்பிய மாணவர்கள் தங்கள் அனுபவங்களை சென்னை அண்ணா நுாலகத்தில் பள்ளிக் கல்வித் துறைஅமைச்சர் கே.ஏ.செங்கோட்டையனிடம் பகிர்ந்துக் கொண்டனர்.
அதன்பின் அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களிடம் கூறும்போது, ‘‘இந்தியாவில் கல்விக்கு தமிழகம் முன்னோடியாக இருக்க வேண்டும் என்பதற்காக ரூ.3 கோடி நிதிஒதுக்கிமாணவர்களை வெளிநாடுகளுக்கு கல்வி சுற்றுலா அனுப்பினோம். இந்த திட்டம் மாணவர்களின் கல்விக்கு ஊக்கமளிப்பதாக அமையும். அடுத்தகட்டமாக 25 மாணவர்களை தேர்வு செய்துமலேசியா, சிங்கப்பூர் மற்றும் கனடா அனுப்ப திட்டமிடப்பட்டுள்ளது.
 மரம் நடுதல் உட்பட சமுதாய பணிகள் செய்யும் மாணவர்களுக்கு சிறப்பு மதிப்பெண்கள் வழங்குவதற்கான அரசாணை விரைவில் வெளியிடப்படும். நாடு முழுவதும் 10லட்சம் ஆடிட்டர்கள் தேவைப்படுகின்றனர். ஆனால், 2.5 லட்சம்ஆடிட்டர்கள் மட்டுமே உள்ளனர். எனவே, பிளஸ் 2 படித்தவர்கள் சார்ட்டர்ட் அக்கவுண்ட்ஸ் படிக்கவசதியாக 5 ஆயிரம் மாணவர்களை தேர்வு செய்து பயிற்சி அளிக்கப்பட உள்ளது’’என்றார்
0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive