பிரச்சனைக்கு தீர்வு காண்பதே நீதிமன்ற குறிக்கோள் - நீதிபதி

தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்தால் மட்டுமே போராட்டம் கைவிடப்படும் என சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் திட்டவட்டமாக தெரிவித்துள்ளனர். சஸ்பெண்ட் செய்யப்பட்ட ஆசிரியர் தொடர்ந்த வழக்கை நீதிபதி கிருபாகரன் விசாரித்தார். நீதிமன்றத்தில் ஆஜரான ஜாக்டோ-ஜியோ நிர்வாகிகள் தங்களின் நிலை குறித்து விளக்கினர்.

இன்று ஐகோர்ட்டில் இவ்விவகாரம் தொடர்பான விசாரணை நடைபெற்றது. அப்போது, 90% ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியுள்ளதாக உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தகவல் தெரிவித்துள்ளது. இதனையடுத்து விடுத்த வேண்டுகோளை ஏற்று ஆசிரியர்கள் பணிக்கு திரும்பியது மகிழ்ச்சியளிக்கிறது என நீதிபதிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.  ஓரிரு நாளில் இயல்பு நிலை முழுமையாக திரும்பி விடும் என பள்ளிக்கல்வித்துறை தரப்பில் விளக்கம் தெரிவிக்கப்பட்டுள்ளது.  பேச்சுவார்த்தைக்கு அரசு அழைத்தால் மட்டுமே பணிக்கு திரும்ப முடியும் என ஜாக்டோ-ஜியோ அமைப்பு  திட்டவட்டமாக தெரிவித்துள்ளது.

பிரச்சனைக்கு தீர்வு காண்பதே நீதிமன்ற குறிக்கோள் என நீதிபதி கிருபாகரன் கூறியுள்ளார்.

Share this