போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய செவிலியர்கள்! அதிரடி அறிவிப்பால் பரபரப்பு.!

புதிய ஓய்வு ஊதியத்தை ரத்து செய்து பழைய திட்டதை கொண்டுவரவேண்டும், இடைநிலை ஆசிரியர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்க வேண்டும் என்பன உட்பட பல அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஜாக்டோ ஜியோ அமைப்பை சேர்ந்த ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் கடந்த 22 ந் தேதி முதல் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

காலவரையின்றி தொடரும் இந்த போராட்டத்தால், ஆசிரியர்கள் பள்ளிக்கு வராமல், மாணவர்கள் பெரும் அவதிப்பட்டு வந்தனர். மேலும் அவர்களது கல்வியும் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளது.இந்நிலையில் பிப்ரவரி கடைசி வாரத்தில் பொதுத்தேர்வுகள் ஆரம்பமாக உள்ளநிலையில் ஆசிரியர்களை பணிக்கு திரும்புமாறு தமிழக அரசு அறிவிப்பு வெளியிட்டது.மேலும் தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.


அதனை தொடர்ந்து போராட்டத்தை கைவிட்டுவிட்டு ஆசிரியர்கள் பணிக்கு திரும்பவேண்டும் எனவும், அதனை மீறியும் போராட்டம் தொடரப்பட்டால், அவர்களது பணியிடங்கள் காலி இடங்களாக அறிவிக்கப்பட்டு தற்காலிக ஆசிரியர்கள் நியமிக்கப்படுவர் எனவும் பள்ளி கல்வி துறை அறிவித்தது. அதன் பின்னர் பல ஆசிரியர்கள் வேலைக்கு திரும்பியுள்ளனர்.

இந்த நிலையில், அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக இன்று தஞ்சையில் செவிலியர்கள் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர்.

Share this

0 Comment to "போராட்டத்தில் ஈடுபட்ட அரசு ஊழியர்களுக்கு ஆதரவாக களமிறங்கிய செவிலியர்கள்! அதிரடி அறிவிப்பால் பரபரப்பு.! "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...