தலைமை செயலர் எச்சரிக்கை

தலைமை செயலக ஊழியர்கள், இன்று வேலைக்கு வராவிட்டால், ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்படும்' என, தமிழக அரசின் தலைமை செயலர் கிரிஜா வைத்தியநாதன், எச்சரிக்கை விடுத்துள்ளார். அனைத்து துறை செயலர்களுக்கும், கிரிஜா அனுப்பியுள்ள கடிதம்:இன்று வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவோர் மீது, ஒழுங்கு நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்; சம்பளம் வழங்க கூடாது. பகுதி நேர ஊழியர்கள், தொகுப்பூதியப் பணியாளர்கள், வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டால், பணி நீக்கம் செய்ய வேண்டும். இன்று, அரசு ஊழியர்கள் யாருக்கும், தற்செயல் விடுப்பு வழங்கக் கூடாது.அனைத்து துறை தலைவர்களும், தங்களுடைய துறையில் உள்ள மொத்த ஊழியர்கள்; வேலைக்கு வந்தவர்கள்; வராதவர்கள்; ஏற்கனவே விடுப்பு கேட்டிருந்தவர்கள் விபரத்தை, இன்று காலை, 10:30 மணிக்குள், பணியாளர் மற்றும் நிர்வாக சீர்திருத்தத் துறைக்கு, அனுப்பி வைக்க வேண்டும்.இவ்வாறு, கடிதத்தில் கூறப்பட்டுள்ளது.




1 Comments:

  1. இந்த தலைமை செயலர் எல்லா பலன்களையும் நன்றாகவே பெற்று விட்டார். அதனால் அவருக்கு எதுவுமே தேவையில்லை. அதனால் சம்பளம் வாங்காமலே பணியாற்றட்டுமே. அரசின் நிதி நெருக்கடியை சமாளிக்கலாம்

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Recent Posts

Whatsapp

Total Pageviews

Blog Archive