Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

#அறிவியல்-அறிவோம்: உடலை இரும்பாக்கும் "கரும்பு".



(S.HARINARAYANAN)

தமிழர்களின் திருநாளாம்  பொங்கல் திருநாள் என்றலே நாம் அனைவரின் நினைவில் தோன்றுவது கரும்புதான்(Saccharum officinarum - தாவரவியல் பெயர்). கரும்பில் நிறைய நன்மைகள் அடங்கியுள்ளன. ஆனால் அதன் உண்மையான நன்மைகள் பலருக்கும் தெரிவதில்லை.

கரும்பில் சாற்றில் மஞ்சள் காமாலையை குணப்படுத்தும் மருத்துவப் பொருள் நிறைந்துள்ளது. பொதுவாக மஞ்சள் காமாலை வந்தால், சருமம் மஞ்சள் நிறத்தில் காணப்படும் இதற்கு காரணம், பிலிரூபின் இரத்தத்தில் கலந்திருப்பதே ஆகும்.
இதுமட்டுமல்லாது, மோசமான கல்லீரல் செயல்பாடுகள் மற்றும் பித்த நாளங்களில் அடைப்பு போன்றவைகளும் மஞ்சள் காமாலையை உண்டாக்கும். எனவே மஞ்சள் காமாலையிலிருந்து உடனே குணமாவதற்கு, இரண்டு டம்ளர் கரும்பு சாற்றுடன் எலுமிச்சை மற்றும் உப்பு சேர்த்து குடித்து வந்தால் போதுமானது.
உடலில் உள்ள சிறுநீரக குழாய், பிறப்புறுப்பு, செரிமான மண்டலக் குழாய் போன்ற பல இடங்களில் தொற்றுநோய்களினால் எரிச்சல், அரிப்பு போன்றவை ஏற்படும். இத்தகையவற்றை சரிசெய்ய ஒரு டம்ளர் கரும்பு சாறு குடித்தால், அவை சரியாகிவிடும்.
கரும்பின் நன்மைகளிலேயே முக்கியமான ஒன்று என்றால் அது சிறுநீரக கற்களை குணமாக்குவது தான். பொதுவாக இந்த கற்கள் உடலில் ஏற்படும் வறட்சியினால் ஏற்படும். அதற்காகத் தான் அடிக்கடி தண்ணீர் குடிக்க வேண்டும் என்று மருத்துவர்கள் கூறுகின்றனர்.
ஏனெனில் அவை அந்த கற்களை உடைத்து வெளியேற்றிவிடும். எனவே தண்ணீர் மட்டுமின்றி, கரும்பு சாற்றையும் குடித்தால், அந்த கற்கள் எளிதில் உடைந்து கரைந்துவிடும்.
இனிப்பாக இருப்பதால், நீரிழிவு நோயாளிகள் சாப்பிட பயப்படுவார்கள். ஆனால் உண்மையில் இதில் இருக்கும் இனிப்பானது இரத்தத்தில் உள்ள குளுக்கோஸின் அளவை சீராக வைக்கும். எனவே உடல் எடையை குறைக்க விரும்புவோர் அல்லது சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்கள், இதனை எந்த ஒரு அச்சமுமின்றி சாப்பிடலாம்.
கரும்பில் வைட்டமின் மற்றும் கனிமச்சத்துக்கள் அதிகம் உள்ளது. அதிலும் பாஸ்பரஸ், இரும்புச்சத்து, பொட்டாசியம், கால்சியம் மற்றும் மக்னீசியம் போன்றவை அதிக அளவில் இருப்பதால், உடலில் எந்த ஒரு ஊட்டச்சத்து குறைபாடுமின்றி, உடலை ஆரோக்கியமாக வைத்துக் கொள்ளலாம்
நிறைய பேர் இருமல், சளி அல்லது தொண்டை வலி இருந்தால், கரும்பை நிச்சயம் சாப்பிடக் கூடாது என்று சொல்வார்கள். ஆனால் உண்மையில் அந்த மாதிரியான எண்ணம் தவறானது. இந்த மாதிரியான பிரச்சனைக்கு சிறந்தது என்று சொன்னால், அது கரும்பு தான்.
கரும்பில் இயற்கையாக  புற்றுநோயை குணப்படுத்தும் தன்மையுடையது. குறிப்பாக பெருங்குடல், நுரையீரல், மார்பக புற்றுநோய் போன்றவற்றிற்கு சிறந்தது.
நிறைய மக்கள் அதிக அளவு தண்ணீர் குடிப்பதை விரும்பமாட்டார்கள். எனவே அத்தகையவர்களுக்கு உடலில் ஏற்படும் வறட்சியை நீக்க கரும்பு சாற்றை குடிக்கலாம்.
பல்லுக்கு உறுதி
செங்கரும்பினில் முழுமையாக குளுக்கோஸ் மட்டுமே நிறைந்திருக்கும். வெண் கரும்பில் சுக்ரோஸ் எனும் கூட்டுச் சர்க்கரை அதிகம் உள்ளது. ஆக வெண்கரும்பு, நீரிழிவு நோயாளிகள் உட்பட எல்லோருக்குமான தேர்வாக இருக்கும். செங்கரும்பு, சிறுவர்களுக்கும் நீரிழிவு நோய் இல்லாதவர்க்கும் ஏற்றது என்பதால் பொங்கல் நேரத்தில் உட்கொள்ளலாம்.
கரும்பில் வைட்டமின் சத்தும் கனிமச் சத்தும் பெருமளவில் இல்லை என்றாலும் நம் உடலுக்குத் தேவையான அளவு கால்சியம், இரும்புச் சத்து, மெக்னீசியம், பொட்டாசியம் போன்ற சத்துகள் உள்ளன. இவை தவிர, உடலுக்கு மிகவும் தேவையான ஊட்டச்சத்துக்கள் கரும்பில் அதிக அளவில் உள்ளன. ஃபீனால் சத்தும் ஃபிளேவனாய்டு சத்துமே அவை. உணவு முறை, வாழ்க்கை முறை மாற்றங்கள் பெருகிவிட்ட இந்த காலகட்டத்தில், கரும்பு போன்ற ‘ஆண்டி ஆக்ஸிடண்ட்ஸ்’ நிறைந்த பொருட்களை உட்கொள்ளத் தவறக்கூடாது.
சர்க்கரைக்குச் சத்தான கரும்பு
வெண்கரும்பு இனிப்பாக இருந்தாலும், இதிலிருக்கும் சுக்ரோஸ் எனும் கூட்டுச் சர்க்கரை, உடலில் வளர்சிதை மாற்றம் நடக்கும்போது செயல் புரியும் நொதிகள் காரணமாக, ரத்தத்தின் சர்க்கரை அளவை எளிதில் அதிகரிக்காது. இது ‘லோ கிளைசெமிக் இண்டெக்ஸ்’ உணவு வகையிலேயே சேர்க்கப்பட்டுள்ளது. நீரிழிவு நோயாளிகள் வாரம் ஒரு முறை அளவாக அருந்தலாம். நல்ல பலனைத் தரும்.
இதிலிருக்கும் ஃபீனால் சத்தும் ஃபிளேவனாய்ட் சத்தும் புற்றுநோயைத் தடுக்கும் காரணிகளாக விளங்குகின்றன. உடல் செல்களுக்குத் தீமையை ஏற்படுத்தும், புற்றுநோய் ஏற்பட முக்கியக் காரணமாக இருக்கும் ‘ஃபிரீ ராடிக்கல்ஸ்’ உருவாக்கத்தை இது பெரிதும் தடுக்கிறது.
கொழுப்பைக் குறைக்கும் கரும்பு
மஞ்சள் காமாலை நோய்க்குக் கரும்புச் சாறு அருந்தச் சொல்வது தொன்றுதொட்டு பின்பற்றப்படுகிறது. ‘கரும்பு கசத்தால் வாய்க்குற்றம்’ எனும் வழக்கு மொழியே உண்டு. அதாவது, கரும்புச் சாறு இனிப்பாக இருக்க, அதைச் சுவைக்கும்போது கசப்புச் சுவை தட்டினால் செரிமான சுரப்புகளின் செயலில் மாற்றம் ஏற்பட்டுள்ளது எனப் பொருள். பெரும்பான்மையான செரிமானச் சுரப்புக்கள் சுரக்க, கல்லீரலே முதல் காரணமாய் இருக்கும். கல்லீரல் நன்கு செயல்புரியவும், செரிமானச் சுரப்புக்கள் நன்கு சுரக்கவும் கரும்பு பெரும் துணை புரிகிறது.
மேலும், கரும்பில் உள்ள ‘பாலிகோ சனால்’ எனும் இயற்கையான வேதிப்பொருள் ரத்தத் தட்டணுக்கள் ஒன்றுக்கொன்று இணைந்து ஏற்படக்கூடிய ரத்த உறைவைத் தடுப்பதுடன், ரத்தத்தில் உள்ள கொழுப்பைக் குறைக்கும் பண்பையும் கொண்டுள்ளது.
சித்த மருத்துவத்தின்படி, உடலில் அதிகரித்த பித்தத்தை கரும்பு சமநிலைப்படுத்தும். சிறுநீர் சீராக வெளியாவதில் சிக்கல், சிறுநீர் கழிக்கும்போது எரிச்சல் உள்ளிட்ட பிரச்சினைகள் உள்ளவர்களுக்கு இது நல்ல தீர்வாக இருக்கும். உடல் சூட்டைக் குறைக்கும் குணம் உடையது கரும்பு.

கரும்பில் சுண்ணாம்பு சத்து எனப்படக்கூடிய கால்சியம் அதிகம் இருக்கிறது. இந்த சுண்ணாம்பும் எச்சிலும் இணைந்து வேதிவினையாற்றுகிறது. அந்த சமயத்தில்,தண்ணீர் குடிக்கும்போது அதிகமான சூட்டைக் கிளப்பும் எதிர்வினை நடக்கிறது.இதனால்,நாக்கு வெந்து விடுகிறது. கொஞ்சம் இடைவெளிவிட்டு தண்ணீர் அருந்துவதால் இந்த பாதிப்பு வருவதில்லை"
🌎தைப்பொங்கல் காலை வணக்கம் 💐





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive