பிளஸ் 2 தேர்வு முடிவுகள் இன்று(ஏப்.,19) காலை 9:30 மணிக்கு வெளியிடப்படுகிறது. தேர்வர்கள் பதிவு செய்த மொபைல் போன் எண்ணுக்கு எஸ்.எம்.எஸ். தகவலாக மதிப்பெண்கள் வரும்.தமிழக பள்ளிக் கல்வி பாட திட்டத்தில் பிளஸ் 2 பொது தேர்வு மார்ச் 1ல் துவங்கி மார்ச் 19ல் முடிந்தது. விடைத்தாள் திருத்தம் மார்ச் 29ல் துவங்கி ஏப். 10ல் முடிந்தது. தேர்வு முடிவுகள் ஏற்கனவே திட்டமிட்டபடி இன்று காலை 9:30 மணிக்கு வெளியாகின்றன. அரசு தேர்வுத் துறையின் www.tnresults.nic.in www.dge1.tn.nic.in மற்றும் www.dge2.tn.nic.in ஆகிய இணையதளங்களில் தங்கள் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம். தேர்வர்களின் பதிவு எண் பிறந்த தேதி மாதம் ஆண்டு ஆகியவற்றை பதிவு செய்து மதிப்பெண்களை தெரிந்து கொள்ளலாம். படிக்கும் பள்ளிகளிலும் மதிப்பெண்ணை தெரிந்து கொள்ளலாம்.மாணவர்கள் மற்றும் தனி தேர்வர்கள் ஏற்கனவே தேர்வு துறைக்கு வழங்கிய மொபைல் போன் எண்ணுக்கு குறுஞ்செய்தியாக காலை 9:30 மணிக்கு முடிவுகள் அனுப்பப்படும். தேர்ச்சி பெறாத மாணவர்களுக்கு ஜூன் 6 முதல் 13 வரை சிறப்பு துணை தேர்வு நடத்தப்படுகிறது.அதற்கு விண்ணப்பிக்கும் தேதி பின்னர் அறிவிக்கப்படும். இந்த தகவலை அரசு தேர்வுத் துறை இயக்குனர் வசுந்தராதேவி தெரிவித்துள்ளார்.மாணவர்கள் தற்காலிக மதிப்பெண் பட்டியலை நாளை காலை 9:00 மணி முதல் 26ம் தேதி வரை தங்கள் பள்ளிகளில் பெற்று கொள்ளலாம். தனி தேர்வர்கள் வரும் 24ம் தேதி காலை 9:00 மணி முதல் வரும் 26ம் தேதி வரை www.dge.tn.nic.inஎன்ற இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம்.

Categories

Blog Archive

Total Pageviews

Popular Posts

Recent Comments