தமிழகத்தில் இதுவரை, 50 சதவீத தபால் ஓட்டுகள் பதிவாகி உள்ளன.தமிழகத்தில்
மட்டும், தேர்தல் பணியில், 4.22 லட்சம் ஊழியர்கள் ஈடுபட உள்ளனர்.
அவர்களில், 2.03 லட்சம் பேருக்கு, தபால் ஓட்டு போட, விண்ணப்பப் படிவம்
வினியோகிக்கப்பட்டு உள்ளது.
1.01 லட்சம் பேர், தங்கள் ஓட்டுகளைப் பதிவு செய்துள்ளனர். மற்றவர்கள்
எப்போது வேண்டுமானாலும், தங்கள் ஓட்டுகளை பதிவு செய்யலாம். இது தவிர,
தேர்தல் பணி சான்றிதழ், 97 ஆயிரத்து, 467 பேருக்கு வழங்கப்பட்டுள்ளது.
இவர்கள் தாங்கள் பணிபுரியும் ஓட்டுச் சாவடியிலே, தங்கள் ஓட்டை பதிவு
செய்யலாம். வெளிநாட்டில் வசிக்கும், 924 பேருக்கு ஓட்டு உள்ளது.அவர்கள் இங்கு வந்தால் மட்டுமே, ஓட்டளிக்க முடியும். வாக்காளர் பட்டியலில்
பெயர் உள்ள ஓட்டுச்சாவடியில் மட்டுமே, சம்பந்தப்பட்ட வாக்காளர் ஓட்டளிக்க
முடியும். வெளியூரில் வசிப்போர், அங்கிருந்தபடியே ஓட்டளிக்கலாம் என, சமூக
வலைதளங்களில் பரவும் தகவல் தவறானது.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...