பொறியியல் கலந்தாய்வை அண்ணா
பல்கலைக்கழகமே நடத்தக்கோரி சூரப்பா கடிதம்
2019-ம் ஆண்டுக்கான பொறியியல் கலந்தாய்வை மட்டும் நடத்த அனுமதி கோரி, தமிழக அரசுக்கு அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா கடிதம் எழுதியுள்ளதாக தகவல்வெளியாகியுள்ளது.
பொறியியல் மாணவர் சேர்க்கை மையக்குழுவை தமிழக அரசு அண்மையில் அமைத்து அரசாணை வெளியிட்டிருந்தது. இந்த குழுவில் உயர்கல்வித்துறை செயலர் மங்கத் ராம்சர்மா, தொழில்நுட்ப இயக்குநரக இயக்குநர் விவேகானந்தன் ஆகியோர் இடம் பிடித்துள்ளனர்.
இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொறியியல் மாணவர் சேர்க்கை மைய தலைவர் பதவியில் இருந்து அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பா ராஜினாமா செய்ததுடன் பொறியியல் கலந்தாய்வை அண்ணா பல்கலைக்கழகம் நடத்தாது என்றும் அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அரசாணையை ரத்துசெய்யுமாறு அரசுக்கு சூரப்பா தற்போது கடிதம் எழுதியுள்ளதாக கூறப்படுகிறது.இந்த ஒரு வருடம் மட்டும் பழைய விதிகளின்படி அண்ணா பல்கலைக்கழகமே கலந்தாய்வு நடத்த கோரிக்கை விடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.
தொழில்நுட்ப இயக்குநரகம் மூலம் கலந்தாய்வுக்கான பணிகளை மேற்கொள்ள போதிய அவகாசம் இல்லை என்றும் குறிப்பிடப்பட்டுள்ளதாகவும்,அடுத்தாண்டு முதல் இயக்குநரகம் கலந்தாய்வு நடத்தினால் தமக்கு ஆட்சேபனை இல்லை என்றும் கடிதத்தில் சூரப்பா கூறியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இந்த ஆண்டு தொழில்நுட்ப இயக்குநகரம் கலந்தாய்வினை நடத்தினால் அதற்கு அண்ணா பல்கலைக்கழகம் எவ்வித ஒத்துழைப்பும் வழங்காது என்றும் சூரப்பா திட்டவட்டமாக கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் இதுபோன்ற புதிய மற்றும் 100% உண்மையான அண்ணா பல்கலைக்கழகத் தகவல்களை அறிய கீழே உள்ள Source களைத் தொடர்புகொள்ளவும்...,
Anna University Facebook page
WhatsApp Groups District Wise (Contact Admin)
Anna University Instagram Page
Anna University Telegram Channel
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...