பயோ மெட்ரிக் வருகைப் பதிவுக்கு எதிர்ப்பு
தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு.

அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து தொடரப்பட்ட வழக்கில் தமிழக அரசு ஒரு வாரத்தில் பதிலளிக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.  இது தொடர்பாக நாகர்கோவிலை சேர்ந்த அன்னல் என்ற அரசுப் பள்ளி ஆசிரியை தாக்கல் செய்த மனுவில் தமிழகத்தில் உள்ள அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் ஆசிரியர் அல்லாத பணியாளர்களுக்கு ஆதார் அடிப்படையில் பயோ மெட்ரிக் வருகைப் பதிவு முறையை அறிமுகம் செய்து கடந்த  2018 ஆண்டு அக்டோபர் மாதம் தமிழக அரசு பிறப்பித்த அரசாணையை ரத்து செய்ய உத்தரவிட  கோரியிருந்தார். இதனை விசாரித்த நீதிபதி சுப்பிரமணியம், ஒரு வாரத்தில் பதிலளிக்கும்படி தமிழக அரசுக்கு உத்தரவிட்டுள்ளார்.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments