கோழிக்குஞ்சு மீது தெரியாமல் சைக்கிளை ஏற்றிய 6 வயது சிறுவன் அதனை காப்பாற்ற தான் சேமித்து வைத்திருந்த 10 ரூபாய் பணத்துடன் மருத்துவமனைக்கு சென்ற நெகிழ்ச்சி சம்பவம் அரங்கேறியுள்ளது.
மிசோரமை சேர்ந்த 6 வயது சிறுவன் டெரிக். இவர் சைக்கிள் ஓட்டும்போது எதிர்பாராதவிதமாக பக்கத்து வீட்டின் கோழிக்குஞ்சு மீது சைக்கிளை ஏற்றிவிட்டார். இதனால் பதறிப்போன அந்த சிறுவன் எப்படியாவது கோழிக்குஞ்சை காப்பாற்றிவிட விட வேண்டும் என எண்ணி அதற்கு பல முயற்சிகளை எடுத்துள்ளார்.

கோழிக்குஞ்சு இறந்துபோனது தெரியாமல் அதனை ஒரு கையில் எடுத்துக்கொண்டு மறு கையில் தான் சேமித்து வைத்திருந்த 10 ரூபாய் பணத்துடன் மருத்துவமனைக்கு சென்றுள்ளார் சிறுவன். பின்னர் வீடு வந்து ஒரு 100 ரூபாய் பணத்தை எடுத்துக்கொண்டு மீண்டும் கோழிக்குஞ்சை காப்பாற்ற முயன்றுள்ளார். அப்போது மருத்துவமனையில் இருந்த செவிலியர்கள் சிறுவனின் இளகிய மனதை கண்டு நெகழிந்து போயுள்ளனர். அத்துடன் சிறுவன் ஒரு கையில் 10 ரூபாய் பணத்துடனும், மறுகையில் இறந்து போன கோழிக்குஞ்சுடனும் இருக்கும்போது அந்த செவிலியர் புகைப்படம் ஒன்றையும் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் தற்போது சமூகவலைதளங்களை ஆக்கிரமித்து வருகிறது. பலரும் அந்த புகைப்படத்தை தங்களது சமூக வலைதள பக்கத்தில் ஷேர் செய்து வருகின்றனர்.
 
 
அவசர உலகமாக மாறிப்போன இக்காலத்தில் சிலர் விபத்து ஏற்படுத்திவிட்டு, நிற்காமல் சென்றுவிடுகின்றனர். இதனால் பாதிக்கப்பட்டோர் உடனடியாக சிகிச்சை பெற முடியாமல் தவிக்கின்றனர். ஆனால் 6 வயது சிறுவன், தான் ஏற்றிவிட்டோம் என்பதற்காக கோழிக்குஞ்சை காப்பாற்ற மருத்துவமனைக்கு கொண்டு சென்ற சம்பவம் சிறுவனின் இளகிய மனதை மட்டுமில்லாமல், உண்மையான சமூக அக்கறையும், சிறுவனின் அன்பையும் பறைசாற்றும் விதமாக அமைந்துள்ளது.

0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Blog Archive

Recent Comments