சேலம் மாவட்டம், பெத்தநாயக்கன்பாளையம் ஒன்றியம், மண்ணூர் மலை, ஊராட்சி ஒன்றிய .நடுநிலைப்பள்ளியில் முதன்முறையாக ஆண்டு விழா சிறப்பாக நடைபெற்றது.முன்னதாக தலைமை ஆசிரியர் முருகன் அனைவரையும் வரவேற்றார்.ஆண்டு அறிக்கையை ஆசிரியர் வெங்கடாசலம் வாசித்தார்.நிகழ்ச்சிகளை ஆசிரியர் பால்குமார் தொகுத்து வழங்கினார்.
ஆண்டு விழாவில் முதல் வகுப்பு குழந்தைகள் வரவேற்பு நடனம் ஆடினர் கராத்தே, சிலம்பம், யோகாசனம், நாடகம், விழிப்புணர்வு பாடல், கரகாட்டம், பேச்சுப்போட்டி, சாமி பாடல்கள் நடனம்,கிராமிய பாடல்கள் நடனம், நாட்டுப்புற பாடல்கள் நடனம், கல்வி விழிப்புணர்வு பாடல்களுக்கு நடனம், முதல் வகுப்பு முதல் எட்டாம் வகுப்பு வரை 30 பாடல்களுக்கு மிகச் சிறப்பாக நடனம் ஆடினார்கள் மாற்றுத்திறனாளி மாணவரும்* பங்கேற்று நடனம் ஆடியது மிகவும் சிறப்பாக இருந்தது.மேலும் பள்ளி மேலாண்மைக்குழு சார்பில் கிராமிய பாடலுக்கு நடனம் ஆடினர் மேலும் நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில் 100% நேர்மையாகவும் உண்மையாகவும் வாக்களிப்போம் என பெற்றோர்களும்,ஊர் பொதுமக்களும் உறுதிமொழி எடுத்துக்கொண்டனர்.
அனைவருக்கும் ஆசிரியர் ஜோசப் ராஜ் நன்றி கூறினார்.
Super sir
ReplyDelete