வாக்குப்பதிவின்போது அலுவலர்கள் மிகவும் கவனமுடன் இருக்க வேண்டும் என்றார் ஆட்சியரும், மாவட்டத் தேர்தல் அலுவலருமான ஆ. அண்ணாதுரை*
*ஆட்சியரகத்தில் வெள்ளிக்கிழமை நடைபெற்ற உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்கள், மண்டல அலுவலர்கள், காவல் துறை அலுவலர்களுக்கான கலந்தாய்வுக் கூட்டத்தில் அவர் பேசியது தேர்தல் பணியில் ஈடுபடும் அலுவலர்கள் வாக்குப் பதிவுக்கு முன் தினம், வாக்குப் பதிவு தினம் மற்றும் வாக்குப் பதிவுக்கு பின்னர் மேற்கொள்ள வேண்டிய பணிகளை மிகவும் கவனமுடன் செய்ய வேண்டும்*
*புகைப்படத்துடன் கூடிய வாக்காளர் சீட்டை வாக்களிப்பதற்கான அடையாள அட்டையாக அனுமதிக்கக் கூடாது*
*தேர்தல் ஆணையத்தால் அறிவிக்கப்பட்டுள்ள 12 அடையாள சான்றுகளை மட்டுமே வாக்களிப்பதற்கு அனுமதிக்க வேண்டும்*
*மாதிரி வாக்குப்பதிவின்போது அனைத்து வேட்பாளர்கள் மற்றும் அரசியல் கட்சிகளின் முகவர்கள் உடன் இருப்பதை உறுதி செய்ய வேண்டும்வாக்குச் சாவடியில் பயன்படுத்தப்படும் உபகரணங்கள் அனைத்தும் உள்ளனவா என்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்*
*வாக்குச் சாவடிக்கு மாலை 6 மணி வரை வாக்களிக்க வரும் வாக்காளர்களை மட்டுமே அனுமதிக்க வேண்டும். மாலை 6 மணிக்குள் வாக்குச்சாவடிக்கு வரும் வாக்காளர்களுக்கு டோக்கன் தர வேண்டும் என்றார் ஆட்சியர்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...