அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் நடத்திய கவிதைப் போட்டியில் வென்ற அரசுப்பள்ளி ஆசிரியர்

திருவாரூர் மாவட்டம் கோட்டூர் ஒன்றியம் மேலகண்டமங்கலம் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் பட்டதாரி ஆசிரியராகப் பணிபுரிந்து வரும் முனைவர் மணி.கணேசன் என்பார் அண்மையில் அரண் பன்னாட்டுத் தமிழாய்வு மின்னிதழ் நடத்திய ஹைக்கூக் கவிதைப் போட்டியில் நடுவர்கள் அனைவராலும் ஒருமித்து வெற்றியாளராக அறிவிக்கப்பட்டார். உடன் பணியாற்றும் ஆசிரியர்கள், கல்வி பயிலும் மாணவர்கள், பல்வேறு கலை இலக்கிய அமைப்பினர், முற்போக்கு இலக்கியவாதிகள் போன்றோர் வெற்றி பெற்ற ஆசிரியருக்குப் பாராட்டுத் தெரிவித்து மகிழ்ந்தனர்.

Share this