NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

பொறியியல் மாணவர்களுக்கு டிச.17 முதல் ஆன்லைன் செய்முறைத் தேர்வு: விதிமுறைகள் வெளியீடு

பொறியியல் மாணவர்களுக்கு டிச.17 முதல் ஆன்லைனில் செய்முறைத் தேர்வு நடத்தப்பட உள்ளதாக அண்ணா பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.

இது தொடர்பாக அண்ணா பல்கலைக்கழகத் தேர்வுக் கட்டுப்பாட்டுத் துறை அலுவலகம் சுயநிதி அல்லாத அனைத்துக் கல்லூரி முதல்வர்களுக்கும் அறிவுறுத்தல்களை வெளியிட்டுள்ளது.






: விதிமுறைகள்

''* உயர் கல்வி மாணவர்களுக்கு நவம்பர் மற்றும டிசம்பர் 2020-க்கான செமஸ்டர் தேர்வுகளை நடத்த அரசு அனுமதி அளித்துள்ளது.


* அதன்படி, இளநிலை, முதுநிலை பொறியியல் மாணவர்களுக்கான செய்முறைத் தேர்வு ஆன்லைன் மூலம் டிசம்பர் 17 முதல் 30-ம் தேதி வரை நடைபெற உள்ளது.

* செய்முறைத் தேர்வுகள் இணையம் மூலம் பிரபல வீடியோ சேவைகள் மூலம் நடத்தப்பட வேண்டும்.

* ஆய்வகப் பாடத்திட்டத்தின் அடிப்படையில் புற மதிப்பீட்டு வினாக்கள் அயலகத் தேர்வுக் கண்காணிப்பாளரால் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்படும்.

* செய்முறைத் தேர்வு வினாக்களுக்குப் பதில் அளிக்க, மாணவர்கள் ஏ4 தாள்களை மட்டுமே பயன்படுத்த வேண்டும்.


* இந்த ஆன்லைன் தேர்வு 3 மணி நேரம் நடத்தப்படும்.

* செய்முறைத் தேர்வை எழுதி முடித்த பிறகு அதன் ஸ்கேன் செய்யப்பட்ட நகலை, மாணவர்கள் சம்பந்தப்பட்ட தேர்வு நடத்துபவர்களின் மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பிவைக்க வேண்டும்.

* தேர்வை நடத்துபவர்கள் தேர்வுத்தாள் நகலை மண்டல அலுவலகங்களுக்கு அனுப்ப வேண்டும். அதை மண்டல அலுவலகங்கள் கல்லூரிகள் வாரியாகப் பிரித்துவைத்து, தேர்வுக் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு அனுப்ப வேண்டும்.

* செய்முறைத் தேர்வு நடைபெறும் நேரத்தில் பறக்கும் படைக் குழுவினர் ஆன்லைனில் கண்காணிக்கத் தேர்வுக் கண்காணிப்பாளர்கள் அனுமதிக்க வேண்டும்''




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive