ஈரோடு,
திருப்பூர், கோவை, நீலகிரி, நாமக்கல் ஆகிய மாவட்டங்களில் செயல்பட்டு
வரும் தனியார் நர்சரி மற்றும் பிரைமரி பள்ளிகளுக்கான தொடர் அங்கீகார ஆணை
வழங்கும் விழா நேற்று ஈரோட்டில் நடந்தது.
இதற்கான ஆணைகளை வழங்கி அமைச்சர் செங்கோட்டையன் பேசியதாவது: தனியார் பள்ளிகளுக்கு தற்போது 3 ஆண்டுக்கு ஒருமுறை வழங்கப்படுகிறது.
இதை 5 ஆண்டுகளாக நீட்டிக்க தனியார் பள்ளி நிர்வாகிகள் வலியுறுத்தி வருகின்றனர். இது அரசின் பரிசீலனையில் உள்ளது. நிரந்தர அங்கீகாரம் வழங்க வேண்டும் என்பதுதான் அரசின் விருப்பம். ஆனால் நீதிமன்ற தடை உள்ளது.
ஜனவரி 15க்குள் 7200 ஸ்மார்ட் வகுப்புகள் அமைக்கப்பட்டுவிடும். 6 முதல் 8ம் வகுப்பு மாணவர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகின்றது. இவ்வாறு அவர் பேசினார்
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...