இந்திய கணக்கு தணிக்கையாளர் அமைப்பின், தேர்வு பிரிவு கூடுதல் செயலர் கஞ்ச் வெளியிட்ட அறிவிப்பு:கணக்கு தணிக்கையாளர் பதவிக்கான, சி.ஏ., தேர்வில், இன்று நடக்கவிருந்த, 'அக்கவுன்டிங் பிரின்சிபல்ஸ்' பாடத்துக்கான தேர்வு, 13ம் தேதிக்கு மாற்றப் பட்டுள்ளது. இந்த பாடத்துக்கு விண்ணப்பித்த மாணவர்களுக்கு, அவர்களுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்ட மையங்களில், வரும், 13ம் தேதி பிற்பகல், 2:00 முதல், 5:00 மணி வரை தேர்வு நடக்கும். இதைத் தவிர, ஆக., 21ல் அறிவிக்கப்பட்ட அட்டவணைப்படி, தேர்வுகள் நடப்பதில் மாற்றம் இல்லை. தெளிவான தகவல்களுக்கு, www.icai.org என்ற, இணையதளத்தை பார்க்கவும்.இவ்வாறு, அறிவிப்பில் கூறப்பட்டுள்ளது.
இன்று நடக்கவிருந்த, சி.ஏ., தேர்வில், ஒரு பாடத்திற்கான தேர்வு மட்டும், 13ம் தேதிக்கு மாற்றப்பட்டுள்ளது.
0 Comments:
Post a comment
Dear Reader,
Enter Your Comments Here...