NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

IAS, IPS, IFS தேர்வுக்கு ரூ.3,000 மாத உதவித்தொகையுடன் இலவசப் பயிற்சி, தங்குமிடம்: பாரதியார் பல்கலை. அறிவிப்பு

பாரதியார் பல்கலை.யில் சிவில் சர்வீஸ் தேர்வுக்கு ரூ.3,000 மாத உதவித்தொகையுடன் இலவசப் பயிற்சி பெற விருப்பம் உள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்துக் கோவை பாரதியார் பல்கலைக்கழகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில், சிவில் சர்வீஸ் முதல்நிலைத் தேர்வு, வரும் 2021-ம் ஆண்டு ஜூன் 27-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற உள்ளது.


இதற்கான முழு நேர இலவசப் பயிற்சி பாரதியார் பல்கலைக்கழகத்தில் வரும் பிப். 15-ம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது. 


இதற்காக மாணவ, மாணவிகள் வரும் ஜன. 30-ம் தேதி நடத்தப்படும் நுழைவுத்தேர்வு அடிப்படையில் தேர்வு செய்யப்பட உள்ளனர். அன்று காலை 11 மணி முதல் மதியம் 1 மணி வரை நுழைவுத்தேர்வு நடைபெறும்.

நுழைவுத் தேர்வுக்கான விண்ணப்பம் www.b-u.ac.in என்ற இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

 மாணவர்கள் அதைப் பதிவிறக்கம் செய்து, முழுமையாகப் பூர்த்தி செய்து, கல்விச் சான்றிதழ்கள், ஜாதிச் சான்றிதழ், ரூ. 5-க்கான தபால் தலை ஒட்டப்பட்ட சுய முகவரி எழுதப்பட்ட தபால் உரை ஆகியவற்றை “ஒருங்கிணைப்பாளர் மற்றும் பயிற்சி இயக்குநர், அண்ணா நூற்றாண்டு நினைவு குடிமைப்பணியியல் பயிற்சி மையம், நாச்சிமுத்து அரங்கம், பாரதியார் பல்கலைக்கழகம், கோவை-46” என்ற முகவரிக்கு வரும் ஜன. 5-ம் தேதிக்குள் கிடைக்குமாறு அனுப்பி வைக்க வேண்டும். நுழைவுத்தேர்வு மதிப்பெண் அடிப்படையில் தேர்வு செய்யப்படுபவர்களுக்கு மாதம் ரூ.3,000 உதவித்தொகை, பயிற்சி, தங்குமிடம் போன்றவை இலவசமாக வழங்கப்படும். தங்குமிடம் வெளி மாவட்ட மாணவர்கள் 60 பேருக்கு மட்டுமே அனுமதிக்கப்படும்’’.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive