NEET Coaching Centre

NEET Coaching Centre

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

NMMS தேர்வில் 2016 முதல் 2020 ஆண்டு வரை தேர்ச்சி பெற்ற மாணவர்களின் விபரங்களை National Scholarship Portalல் பதிவேற்றம் செய்ய இயக்குனர் உத்தரவு !!

பள்ளிக்கல்வி திட்ட ஆண்டு 2020-21 மத்திய அரசின் உதவித்தொகைத் திட்டம் - தேசிய வருவாய் வழி மற்றும் தகுதி படிப்பு உதவித்தொகைத் தேர்வில் ( National Means - cum - Merit Scholarship ) தேர்ச்சி பெற்ற / மாணவியர்களின் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் இணையதளத்தில் புதிதாக பதிவேற்றம் மற்றும் Renewal செய்யும் பணிகளை 31 டிசம்பர் 2020 க்குள் முழுமையாக முடித்தல் 
 
 கடந்த 2019-20 ஆம் கல்வியாண்டில் NMMS தேர்வில் தேர்ச்சி பெற்று , இக்கல்வியாண்டில் 9 ஆம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியரின் விவரங்கள் National Scholarship Portal இல் ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்யப்படவேண்டும் என்று பார்வையில் கண்ட தமிழ்நாடு பள்ளிக்கல்வி இயக்குநரின் செயல்முறைகளில் தெரிவிக்கப்பட்டிருந்தது . இப்பணியை 31 டிசம்பர் 2020 க்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது . ஆனால் , தேர்ச்சி பெற்ற 6695 மாணவ மாணவியரில் 04 டிசம்பர் 2020 வரை 6339 மாணவ மாணவியரின் தகவல்கள் மட்டுமே பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது..
 
 . 
 
இதே போன்று , கடந்த 3 ஆண்டுகளில் NMMSS உதவித்தொகை பெற்றுவரும் அதாவது இந்த கல்வியாண்டில் 10,11 மற்றும் 12 ஆம் வகுப்பில் படித்துவரும் NMMSS உதவித்தொகைக்குத் தகுதிபெற்ற மாணவர்களின் National Scholarship Portal ல் உதவித்தொகைக்கான Renewal செய்யும் பணியும் இன்னும் முழுமை பெறாமல் , 13492 மாணவர்களுக்கு 12598 மாணவர்களின் விண்ணப்பங்கள் மட்டுமே 04 டிசம்பர் 2020 வரை Renewal செய்யப்பட்டுள்ளது . இப்பணியையும் 31 டிசம்பர் 2020 க்குள் முடிக்க வேண்டும் என்று மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது . இதுகுறித்து , தொலைபேசி மூலம் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தின் சார்ந்த இருக்கைப் பணியாளர்களிடம் விவரம் கேட்டறிந்ததன் பேரில் சில மாணவர்கள் சுயநிதிப் பள்ளிகளில் சேர்ந்ததால் தகுதியிழந்ததாகவும் மற்றும் சில மாணவர்கள் வேறு மாவட்டப் பள்ளிகளில் படிப்பைத் தொடர்வதால் அவர்களின் தகவல் அம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலகத்தில் இல்லாததால் NMMSS உதவித் தொகைக்கு விண்ணப்பிக்கும் பணியை கறுதி செய்வதில் தாமதம் ஏற்படுவதாகவும் அறியப்படுகிறது . 
 
மத்திய மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் வழிகாட்டுதலின்படி , ஒவ்வொரு மாவட்டத்திலும் NMMSS தேர்ச்சி பெற்ற மாணவ மாணவிகள் தங்கள் இடைநிலைக் கல்வியையும் மேல்நிலைக்கல்வியையும் அரசு மற்றும் அரசு உதவி பெறும் ப d ளிகளில் மட்டுமே தொடர வேண்டும் எனவும் மத்திய அரசின் மற்ற எந்த உதவித்தொகையையும் பெறுபவராக இருக்கக்கூடாது எனவும் தகுதியுள்ள அனைத்து மாணவ மாணவிகளுக்கு அறிவுறுத்துமாறு அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது . இது தொடர்பாக , மாநில அளவிலும் மாவட்ட அளவிலும் சிறப்பு முகாம்கள் முறையான சமூக இடைவெளி விட்டு அரசின் வழிகாட்டு நெறிமுறைகளைப் பின்பற்றி நடத்திடவும் அறிவுறுத்தப்படுகிறது . இதன் பொருட்டு , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் தங்கள் மாவட்டத்தில் 2019-20 ஆம் கல்வியாண்டில் NMMSS தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளின் விவரங்கள் சார்ந்து கொடுக்கப்பட்டுள்ள படிவத்தை நிரப்பி உடனடியாக idnsedanic.in என்ற மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பி வைக்கும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . மேலும் , NMMSS உதவித்தொகை பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்கள் தகுதியிருந்தும் உரிய காலத்திற்குள் முறையாக விண்ணப்பிக்காததால் உதவித்தொகை கிடைக்கப்பெறாமல் அவதியுறுவது மிகவும் வருந்தத்தக்க செயலாகும் . எனவே , அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் அவர்தம் மாவட்டத்தில் உள்ள அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளித் தலைமையாசிரியர்களையும் இதுசார்ந்து அவரவர் பள்ளியில் பயிலும் NMMSS உதவித்தொகை பெறுவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட மாணவர்களை Fresh மற்றும் Renewal applications முடித்து விட்டனரா என்பதை உறுதி செய்து கொள்ளவும் பள்ளியளவிலான Institute Verification ஐ எவ்வித சுணக்கமும் இல்லாமல் முடித்திடவும் அறிவுறுத்துமாறு கேட்டுக்கொ dra ப்படுகிறார்கள் . இப்பணி குறித்து இனிவரும் காலங்களில் ஏதேனும் புகார் பெறப்பட்டால் அப்பள்ளித்தலைமையாசிரியர்களே முழுப்பொறுப்பேற்க நேரிடும் என்பதையும் அறிவுறுத்திட அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . 
 
இதேபோன்று , District Verification ஐ உரிய காலத்திற்குள் முடித்திட அம்மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களே பொறுப்பேற்றிடவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள் . இப்பணியினை 31.12.2020 க்குள் நிறைவு செய்யவேண்டியு d ளதாலும் உரிய காலத்திற்குள் முறையாக விண்ணப்பிக்காததால் உதவித்தொகை பெறுவதில் விடுபட்ட மாணவர்களுக்கு இனிவரும் காலங்களில் வேறு எந்த வகையிலும் உதவித்தொகை கிடைக்கும் வாய்ப்புகள் இல்லை என்பதாலும் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களும் இப்பொருள் மீது தனிக்கவனம் செலுத்தி NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற அனைத்து மாணவ மாணவிகளின் விவரங்களையும் உடனடியாக ஆன்லைன் மூலம் பதிவேற்றம் செய்திடவும் ( Fresh applications ) சென்ற ஆண்டுகளில் ( 2016-17 , 2017-18 மற்றும் 2018-19 ) NMMS தேர்வில் தேர்ச்சி பெற்ற மாணவர்களின் Renewal applications உடனடியாக முடித்திடவும் உரிய தொடர்நடவடிக்கை மேற்கொள்ள மீளவும் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள் .  
 
Click here to Downlaod Director Procedings




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive