Public Exam Question Bank For Sale

Public Exam Question Bank For Sale

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

கேரள பள்ளிகளில் மலையாளம் கட்டாயம் - மசோதாவுக்கு கர்நாடக மாநிலம் எதிர்ப்பு

கேரள பள்​ளி​களில் 10-ம் வகுப்பு வரை மாணவர்​கள் கட்​டாய​மாக மலை​யாளம் கற்க ​வகை செய்​யும் சட்ட மசோதா கடந்த ஆண்டு தாக்​கல் செய்​யப்​பட்​டது. இந்த மசோ​தாவை விரைவில் சட்​ட​மாக்க மாநில அரசு தீவிர முயற்​சிகளை மேற்கொண்டு வரு​கிறது.

இதற்கு கர்​நாடக அரசு கடும் ஆட்​சேபம் தெரி​வித்​துள்​ளது. இதுதொடர்​பாக கர்​நாடக எல்​லை​யோர மக்​கள் வளர்ச்சி வாரியத்தின் சார்​பில் அதன் செய​லா​ளர் பிர​காஷ் மத்​திஹள்ளி உள்​ளிட்ட நிர்​வாகி​கள் கேரள மாநில ஆளுநர் ராஜேந்​திர அர்லேகரிடம் மனு அளித்​தனர்.

அதில் கூறி​யிருப்​ப​தாவது: கேரளா​வின் வயநாடு, காசர்​கோடு ஆகிய எல்​லை​யோர மாவட்​டங்​களில் கன்​னடர்​கள் பரவலாக வாழ்​கின்​றனர். குறிப்​பாக காசர்​கோடு மாவட்​டத்​தில் 70 சதவீதத்​துக்​கும் அதி​க​மான எண்​ணிக்​கை​யில் கன்​னடர்​கள் இருக்​கின்​றனர். இவர்​கள் தங்​களின் தாய்​மொழி​யான கன்​னடத்தை கற்று வரு​கின்​றனர்.

கேரள அரசின் மலை​யாள கட்​டாய மசோதா அமல்​படுத்​தப்​பட்​டால், கன்​னடர்​கள் கன்​னடம் கற்க முடி​யாத நிலை ஏற்​படும். அரசி​யலமைப்​பின் 350-வது பிரிவு மொழி சிறு​பான்​மை​யினரின் உரிமை​களை பாது​காப்​பது மாநிலத்​தின் கடமை என்று குறிப்பிடுகிறது.

கேரள அரசு மலை​யாளத்தை கட்​டாய​மாக்​கு​வது மொழி சிறு​பான்​மை​யினரின் உரிமை​களுக்கு எதி​ரானது. இந்​திய அரசி​யலமைப்பு சட்​டத்​துக்கு எதி​ரான அந்த மசோ​தாவை நிராகரிக்க வேண்​டும். இவ்​வாறு மனு​வில் குறிப்​பிடப்​பட்டு உள்​ளது. கர்நாடக அரசின் இந்த நடவடிக்கைக்கு கேரள அரசு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

Blog Archive