Half Yearly Exam 2025
Latest Updates
Public Exam Question Bank For Sale
'சஸ்பெண்ட்' ஆசிரியர்களுக்கு மீண்டும் வேலை
பிளஸ் 2 தேர்வின் போது, 'வாட்ஸ் அப்'பில்
வினாத்தாள், 'லீக்' ஆன விவகாரத்தில், 'சஸ்பெண்ட்' செய்யப்பட்ட, இரண்டு
பள்ளிக்கல்வி அலுவலர்கள் மற்றும், 'பிட்' பிரச்னையில் சிக்கிய ஐந்து
ஆசிரியர்களின், சஸ்பெண்ட் உத்தரவு, திரும்பப் பெறப்பட்டுள்ளது; ஏழு பேரும்
மீண்டும் பணியில் சேர்ந்துள்ளனர்.
அரசு புது மருத்துவ கல்லூரியில் 100 இடங்கள் தயார்
தமிழக அரசு புதிதாக துவக்கியுள்ள,
ஓமந்துாரார் தோட்ட அரசு மருத்துவக் கல்லுாரியில், மாணவர் சேர்க்கைக்கு,
இந்திய மருத்துவக் கவுன்சிலான எம்.சி.ஐ., பரிந்துரைத்து உள்ளது. மத்திய
அரசு அனுமதி, சில நாட்களில் கிடைக்கும் என்பதால், திட்டமிட்டபடி, 100
எம்.பி.பி.எஸ்., இடங்களில் மாணவர் சேர்க்கப்பட உள்ளனர்.
காலி பணியிடங்கள் கவுன்சிலிங்: பள்ளிக்கல்வித்துறை முடிவு
இடமாறுதல் கவுன்சிலிங்கிற்கு முன் பணி நிரவல் மூலம் ஆசிரியர் காலிப்பணியிடங்களை நிரப்ப பள்ளி கல்வித்துறை முடிவு செய்துள்ளது.அரசு
உயர்நிலை, மேல்நிலைப்பள்ளி பட்டதாரி, முதுகலை பட்டதாரி ஆசிரியர் ஆன்லைன்
இடமாறுதல் கவுன்சிலிங் விரைவில் நடக்க உள்ளது.
திரிசங்கு நிலையில் ஆசிரியர் கல்வி: ஓராண்டு பி.எட். படிப்பு தொடருமா? - காத்திருக்கும் கல்வியியல் கல்லூரிகள்
ஆசிரியர் கல்வி (பி.எட்.) படிப்பை 2 ஆண்டுகளாக உயர்த்தும் தேசிய ஆசிரியர்
கல்வி கவுன்சிலின் முடிவை எதிர்த்து நீதிமன்றத்தில் வழக்கு நடைபெறும்
சூழலில், ஓராண்டு பி.எட். படிப்பு இந்த ஆண்டு தொடருமா என்று கல்வியியல்
கல்லூரிகள் எதிர்பார்த்துக் காத்திருக்கின்றன
ஏடிஎம்களில் பணம் எடுப்பவர்களுக்கு இனி ரசீது வழங்கப்படாது: எச்டிஎஃப்சி வங்கி அறிவிப்பு
எச்டிஎஃப்சி வங்கி ஏடிஎம் இயந்திரங்களில் பணம் எடுப்பவர்களுக்கு இனி
காகித வடிவிலான ரசீது வழங்கப்படாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு
பதிலாக வாடிக்கையாளரின் செல்ஃபோன் எண்ணுக்கு எஸ்எம்எஸ் மூலம் மட்டும்
தகவல் தெரிவிக்கப்படும்.
425 ஆரம்ப பள்ளி ஆசிரியர் நியமனம்: போட்டித் தேர்வுக்கு இன்று முதல் விண்ணப்பிக்கலாம்.
புதுச்சேரி மற்றும் காரைக்கால் அரசு
ஆரம்ப பள்ளிகளில் காலியாக உள்ள 425 ஆசிரியர் பணியிடங்களுக்கான போட்டித்
தேர்வுக்கு திங்கள் (ஜூன் 1) முதல் விண்ணப்பிக்கலாம் என
அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் 2,500 பள்ளி கட்டடங்களை இடிக்க உத்தரவு!
தமிழகத்தில், இடிந்து விழும் நிலையில், மாணவர்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும்
வகையில் உள்ள, 2,500 தொடக்கப் பள்ளிக் கட்டடங்களை, உடனே இடித்துத்
தள்ளும்படி, மாவட்டக் கல்வி அலுவலர்களுக்கு, பள்ளிக் கல்வித்துறை அதிரடி
உத்தரவு பிறப்பித்துள்ளது.
மின் கட்டண கூடுதல் வைப்பு தொகை:20 லட்சம் பேரிடம் ரூ.50 கோடி வசூல்
மின் வாரியம், 20 லட்சம் பேரிடம், 50 கோடி
ரூபாய் அளவிற்கு, கூடுதல் காப்பு வைப்புத் தொகை வசூல் செய்துஉள்ளது.
தமிழ்நாடு மின் வாரியத்திற்கு, வீடு, வணிகம், தொழிற்சாலை என, மொத்தம், 2.60
கோடி மின் நுகர்வோர் உள்ளனர். புதிய மின் இணைப்பு பெறும் போது, மின்
நுகர்வோரிடம் இருந்து, ஒரு முனை, 200 ரூபாய்; மும்முனை, 600 ரூபாய் என,
காப்பு வைப்புத் தொகை வசூலிக்கப்படுகிறது.
74 பணியிடங்களுக்கான குரூப்-1 தேர்வு: ஜூன் 15-க்குள் அறிவிக்கை வெளியாகும்
74 பணியிடங்களுக்கான குரூப்-1 புதிய தேர்வு அறிவிக்கை ஜூன் 15-ம்
தேதிக்குள் வெளியிடப்படும் என்று டிஎன்பிஎஸ்சி பொறுப்புத் தலைவர்
பாலசுப்ரமணியன் தெரிவித்துள்ளார்.சித்தா, யுனானி, ஆயுர்வேதம் ஆகிய
பிரிவுகளில் 83 துணை மருத்துவர் காலி பணியிடங்களுக்கான தேர்வு நேற்று
நடைபெற்றது.
சென்டம் கோச்சிங் - வெற்றி பெற்ற மகிழ்வில்...
கடந்த கல்வியாண்டு எல்லோருக்கும் நல்விதமாக அமைந்ததை வெளிவந்த பன்னிரண்டாம் வகுப்பு, பத்தாம் வகுப்பு தேர்ச்சி முடிவுகளின் வாயிலாக அறிந்து கொள்ள முடிந்தது. அத்தேர்ச்சி முடிவுகள் மாணவர்களின்
எதிர்காலத்தை சிறப்பானதாக ஆக்கவும், பெற்றோரின் கனவுகளை நனவாக்கவும் வழிவகுத்ததென்றால், அதற்கு பாடசாலை.நெட் இணையதளமும் ஒரு காரணம்.
பள்ளிகள் இன்று திறப்பு
அரசு, அரசு உதவி பெறும் பள்ளிகள் கோடை விடுமுறைக்குப் பிறகு திங்கள்கிழமை ( ஜூன் 1) திறக்கப்பட உள்ளன.
ஆய்வக உதவியாளர் தேர்வு: 'பேஸ்புக், மலாலா' கேள்விகள்
அரசுப் பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கான
தேர்வில், சமச்சீர் கல்வியில் படிக்காதவர்களுக்கு, வினாத்தாள் கடினமாக
இருந்தது. வினாத்தாளில், 'பேஸ்புக்'கை உருவாக்கியவர் யார் என்ற கேள்வியும்
இடம் பெற்றிருந்தது.
அரசு பணிக்கான நேர்காணல் வீடியோவில் பதிவு:முறைகேடுகளை தவிர்க்க டி.என்.பி.எஸ்.சி., அதிரடி
அரசு பணிகளுக்கான போட்டித் தேர்வுகளின்
நேர்காணலை வீடியோவில் பதிவு செய்வதால், முறைகேடுகளுக்கு இடமில்லை,'' என,
தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையமான - டி.என்.பி.எஸ்.சி., தலைவர்
பாலசுப்ரமணியம் தெரிவித்தார்.
முக்கியப் பாடங்களுக்கான விடைத்தாள் மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க இன்று கடைசி
பிளஸ்
2 இயற்பியல், வேதியியல், உயிரியல், கணிதம் ஆகியப் பாடங்களில் விடைத்தாள்
மறுமதிப்பீட்டுக்கு விண்ணப்பிக்க திங்கள்கிழமை (ஜூன் 1) கடைசி நாளாகும்.
பட்டியல் வந்தாச்சு; பணி நியமனம் என்னாச்சுகலக்கத்தில் உதவி பேராசிரியர்கள்
அரசுக் கலை, அறிவியல் கல்லுாரிகளில் காலியாக
உள்ள உதவி பேராசிரியர் பணியிடங்களுக்கு தேர்வானவர்களின் பட்டியல் ஏப்ரலில்
வெளியிடப்பட்டது.
அரசு கலை மற்றும் அறிவியல் கல்லுாரி முதலாமாண்டு மாணவர்களுக்கு கல்லூரிகள் திறப்பு தாமதமாகும்
பிரிட்ஜ் கோர்ஸ்' எனப்படும் நீதி போதனை
வகுப்பு குறித்து உயர்கல்வி துறை சார்பில் அரசு கலை மற்றும் அறிவியல்
கல்லுாரிகளுக்கு அறிவிப்பு வராததால் கவுன்சிலிங் முடித்த முதலாமாண்டு
மாணவர்களுக்கு 15ம் தேதிக்கு பிறகே கல்லுாரிகள் திறக்கப்பட உள்ளது.
மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யோக அடையாள அட்டை
மாற்றுத்திறனாளிகளின் வசதிக்காக, அவர்களை
பற்றிய அனைத்து விவரங்களுடன் கூடிய, இணைய அடிப்படையிலான பிரத்யேக அடையாள
அட்டையை வழங்க, மத்திய அரசு முடிவு செய்துள்ளது.
எளிதாக வருமான வரி தாக்கல் செய்யும் படிவம் அறிமுகம்: கெடு தேதியையும் ஒரு மாதம் நீட்டித்து உத்தரவு
வருமான வரி செலுத்துபவர்களின் வசதிக்காக,
வருமான வரி தாக்கல் படிவம் எளிமையாக மாற்றப்பட்டுள்ளது. மூன்றே
பக்கங்களில், மிகக் குறைவான நிரப்புதல் வசதியுடன் அறிமுகமாகியுள்ளது.
வழக்கமாக, ஜூலை 31க்குள் தாக்கல் செய்யப்பட வேண்டிய வருமான வரி தாக்கல்
படிவங்களுக்கான காலக்கெடு, இந்த ஆண்டு, ஒரு மாதம் நீட்டிக்கப்பட்டு, ஆகஸ்ட்
31க்குள் தாக்கல் செய்ய கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.
ஜூன் 24-ல் வங்கி ஊழியர்கள் வேலைநிறுத்தம்
அகில இந்திய வங்கி ஊழியர்கள் சம்மேளனத்தின் பொதுச் செயலாளர்
சி.எச்.வெங்கடாச்சலம் கூறியதாவது:பாரத ஸ்டேட் வங்கியின் குழும வங்கிகளான
ஸ்டேட் பேங்க் ஆப் திருவாங்கூர், ஸ்டேட் பேங்க் ஆப் மைசூரு உள்ளிட்ட
வங்கிகளை பாரத ஸ்டேட் வங்கியுடன் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
வருமான வரி கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடுவை ஆகஸ்டு 31 வரை நீட்டித்தது வருமான வரித்துறை
வருமான வரி கணக்கை செலுத்துவதற்கான காலக்கெடுவை ஆகஸ்டு 31 வரை நீட்டித்து
வருமான வரித்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது.அதே வருமான வரி கணக்கை தாக்கல்
செய்யும் படிவங்களும் எளிமையாக்கப்பட்டுள்ளன.மேலும் வெளிநாடு சென்றதற்கான
செலவு குறித்த தகவல்களை தாக்கல் செய்ய தேவையில்லை என்றும் வருமான வரித்துறை
கூறியுள்ளது.
இஸ்ரோவின் 3 மையங்களுக்கு புதிய இயக்குனர்கள்: நாளை பொறுப்பேற்பு
ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் விண்வெளி மையம் உள்ளிட்ட இஸ்ரோவின் மூன்று மிகப்பெரிய மையங்களுக்கு புதிய இயக்குனர்கள் நாளை பொறுப்பேற்க உள்ளனர்.
வகுப்பறையில் ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்த ஏன் அனுமதிக்க வேண்டும்?தயவு செய்து, கற்பித்தல்-கற்றலுக்காகச் செல்போனை அனுமதியுங்க
சமீபத்தில் ஆசிரியர்
நண்பர்களுடன் உரையாடிக்கொண்டிருந்தபோது, கற்பித்தல் முறையில் புதிய
கருவியாகச் செல்போன் அமைந்திருப்பதை அறிந்தேன். செல்போன் என்பது வெறும்
தகவல்தொடர்புச் சாதனமாக இல்லாமல், கல்வித்துறையில், முக்கியமாகக்
கற்பித்தலில் எவ்வாறு பயன்படுத்துவது என்பதைப் பற்றிய நீண்ட உரையாடல் புதிய
உத்வேகத்தை அளித்தது என்றுதான் சொல்லவேண்டும். அதில் ’வகுப்பறையில்
ஆசிரியர்கள் செல்போன் பயன்படுத்துவது எப்படி?’ என்ற வரிதான் மீண்டும்
மீண்டும் உரையாடலில் எழுந்த ஒரு தேடல்.
ஜூலை-2015 மாத்த்திற்க்கான அகவிலைப்படி எவ்வளவு உயரலாம்?
As far as DA from July 2015 is concerned we have CPI (IW)
for 9 months out of 12 months.
Jul-2014 252
Aug-2014 253
2015 RH List (June - Dec)
June 2 - Tuesday - ஷபே பாராஅத்.
June 19 - Friday - ரம்ஜான் நோன்பு முதல் நாள்.
July 14 - Tuesday - ஷபே காதர்.
மேலும் 29 நகரங்களில் வீட்டு வாடகைப் படி உயர்வு-
தமிழகத்தின்
கோவை, ஈரோடு
உள்பட நாட்டின்
29 நகரங்களில் பணிபுரியும் மத்திய அரசு ஊழியர்களுக்கு
உயர்த்தப்பட்ட வீட்டு வாடகைப் படியையும், போக்குவரத்துப்
படியையும் வழங்குவதற்கு, மத்திய அமைச்சரவை
ஒப்புதல் வழங்கியது.
பள்ளி ஆய்வக உதவியாளர் பணிக்கு இன்று தேர்வு
தமிழகத்தில் பள்ளி ஆய்வக உதவியாளர் பணியிடங்களுக்கான தேர்வு ஞாயிற்றுக்கிழமை நடைபெறவுள்ளது.
'ஆன்-லைன்' கலந்தாய்வுக்கு ஆசிரியர்கள் கடும் எதிர்ப்பு:மாவட்ட அளவில் வெளிப்படையாக நடத்த கோரிக்கை
ஆன்-லைன்' முறையில், ஆசிரியர்களுக்கான பொது
மாறுதல் கலந்தாய்வு நடத்துவதை தவிர்த்து, மாவட்ட அளவில், வெளிப்படையான
கலந்தாய்வை நடத்த வேண்டும்' என, ஆசிரியர்கள் கோரிக்கை
விடுத்துள்ளனர்.ஆண்டுதோறும், மே மாதத்தில், ஆசிரியர்களுக்கான பொது மாறுதல்
கலந்தாய்வு நடத்துவது வழக்கம்.






