முதுகலைப்பட்டதாரி ஆசிரியர்களுக்கான
போட்டித்தேர்வில்,பி வரிசை வினாத்தாளில்40 கேள்விகள் எழுத்துப்பிழைகளுடன்
இருந்தன.பிழையான கேள்விகளுக்கு முழுமதிப்பெண் வழங்க வேண்டும் எனக்கோரி
சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் மனுதாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை
விசாரித்த நீதிபதி எஸ்.நாகமுத்து,தமிழ்ப்பாடத்துக்கு மறுதேர்வு நடத்த
ஆசிரியர் தேர்வுவாரியத்துக்கு உத்தரவிட்டார்.
Guides / Study Materials Download
Equivalence of Degree GO
பொது சேவைகள் - பல்வேறு பல்கலைக்கழங்களால் வழங்கப்படும் இளங்கலை / முதுகலை பட்டப் படிப்புகள் இணையானதாக கருதி தமிழக அரசு ஆணை வெளியீடு.
சைபர் குற்றங்களைத் தடுப்பதெப்படி? ஹன்ஸா
பொதுவாக ஒருவர் மீது அவதூறு
சொல்லப்பட்டால் அது பொய் எனில் அவர் மீது மான நட்ட வழக்கு தொடர முடியும்.ஆனால், இணையத்தில் அவதூறு சொல்லப்பட்டால், அந்த இணையதள
உரிமையாளர் மீதுதான் வழக்கிட முடியும்.
பள்ளி பிரார்த்தனையில் கை கூப்பி நிற்கும்படி கட்டாயப்படுத்த முடியாது:உயர்நீதிமன்றம்
பள்ளியில் பிரார்த்தனையின்போது கை
கூப்பி நிற்கும்படியோ அல்லது கை கட்டி நிற்கும்படியோ கட்டாயப்படுத்த முடியாது
என்று மும்பை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்திருக்கிறது.
SSA மாநில திட்ட இயக்ககம் உத்தரவு
மாதந்தோறும் 1 முதல் 4 வகுப்புகளில் நடைபெறும் எளிமைப்படுத்தப்பட்ட செயல்வழிக்கற்றல் முறையையும் (SABL) மற்றும் 6 முதல் 8 வகுப்புகள் வரை நடைபெறும் படைப்பாற்றல் கற்றல் முறையையும் (ALM) ஆசிரிய பயிற்றுனர்கள் பார்வையிட்டு (A,B,C,D) என தரமிட்டு வட்டார மற்றும் மாவட்ட அளவில் பராமரிக்க மாநில திட்ட இயக்ககம் உத்தரவு
எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் அளிக்கும் "இ-வித்யா" திட்டம் அறிமுகம்
அரசு பள்ளிகளில் படிக்கும் மாணவர்களின்
பெற்றோர்களுக்கு எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் "இ-வித்யா"
திட்டம் மாநிலத்தில் முதன்முறையாக ஏனாமில் அறிமுகம் செய்யப்பட உள்ளது.
புதுச்சேரியில் உள்ள பிரபல தனியார் பள்ளிகளில் மாணவர்களின் பெற்றோர்களுக்கு
எஸ்.எம்.எஸ்., மூலம் தகவல் தெரிவிக்கும் திட்டம் செயல்பாட்டில் உள்ளது.
வெளிநாட்டுக் கல்வியில் இந்தியா: சில துளிகள்
2 - வெளிநாடுகளுக்கு மாணவர்களை அனுப்புவதில் இந்தியா பெற்றுள்ள இடம்
மத்திய அரசு மாதிரி பள்ளி திட்டம் தமிழக அரசு ஏற்று நடத்த கல்வியாளர்கள் வலியுறுத்தல்
நாடு முழுவதும் 2500 தேசிய மாதிரி
பள்ளிகளை தொடங்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதன் மூலம் தமிழகத்தில் 356
பள்ளிகள் தனியார் பங்களிப்புடன் தொடங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. கேந்திரிய
வித்யாலயா பள்ளிகளுக்கு இணையான கட்டமைப்பு மற்றும் கல்வித்தரத்துடன் கூடிய இத்தகைய
பள்ளிகளை தனியார் துறையினருடன் இணைந்து தொடங்க மத்திய அரசு முடிவு செய்திருப்பது
கல்வியாளர்கள் இடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
பள்ளிக் கல்வியின் மீதுபாயும் மூன்று தாக்குதல்கள்
மாதிரிப் பள்ளிகள் திட்டம் என்ற
பெயரில் ஒரு மாதிரியான அத்துமீறலுக்கு வழிசெய்கிறது மத்திய அரசு. அனைத்துக்
குழந்தைகளின் ஏற்றத்தாழ்வற்ற கல்வி உரிமையைக் கொச்சைப்படுத்தி, தனியார் நிறுவனங்கள் மக்கள் பணத்தை விழுங்க உதவும் கல்வி உரிமைச்
சட்டம் என்பதாக ஒன்றைக் கொண்டுவந்தது இந்த அரசு.
தொடக்க மற்றும் உயர் தொடக்க ஆசிரியர்களுக்கு வட்டார வள மைய அளவில்"READING AND WRITING ARITHMETICS SKILLS" பயிற்சி
மாநில திட்ட இயக்குநர் (அகஇ) அவர்களின்
செயல்முறைகள் ந.க.எண்.745/அ 11/பயிற்சி/2013, நாள். 10.2013ன் படி தொடக்க /
உயர்தொடக்கநிலை ஆசிரியர்களுக்கான வட்டார வள மைய பயிற்சி கீழ்கண்ட
அட்டவணைப்படி நடைபெறவுள்ளது.
தொடக்க கல்வி நிர்வாகம் முழுகணினி மயமாக்க வேண்டும் - ஆசிரியர்குரல் வேண்டுகோள்
தமிழகத்தில் தொடக்க, நடுநிலைப்பள்ளிகள்,தொடக்க கல்வி இயக்குனர் தலைமையில்
நடந்து வருகிறது.மாவட்டத்தில் மாவட்ட
தொடக்க கல்வி அலுவலர்,அவருக்கு கீழ் ஒன்றியங்களில் உதவி தொடக்கக் கல்வி அலுவலகங்களில் 2 உதவி
தொடக்க கல்வி அலுவலர்கள் ,மாவட்டத்திற்கு அறிவியல், நர்சரி உதவி தொடக்க கல்வி அலுவலர்கள் நிர்வாகம் செய்கின்றனர்.
முதுநிலை பட்டதாரி ஆசிரியர் தேர்வு : சான்றிதழ் சரிபார்ப்பு
முதுநிலை ஆசிரியர் பணியிடங்களுக்கு
கூடுதலாக அழைக்கப்பட்ட 213 பேருக்கு நவம்பர் 5 மற்றும் 6 தேதிகளில் சான்றிதழ் சரிபார்ப்பு
நடைபெறும் என்று தமிழ்நாடு ஆசிரியர் தேர்வு வாரியம் தெரிவித்துள்ளது
10th Latest Study Material
Tamil Study Material
Tamil 2nd Term Question For Class Test - Mr. Damodiran, GHS, Melatur, Thanjavore Dt. - Tamil Medium
அனைவருக்கும் கல்வித் திட்டம் (எஸ்.எஸ்.ஏ.,) செயல்பாடுகள் தொடர்பாக "ஆவணப்படங்கள்' தயாரிக்க அரசு முடிவு
தமிழகத்தில் அனைவருக்கும் கல்வித் திட்டம்
(எஸ்.எஸ்.ஏ.,) செயல்பாடுகள் தொடர்பாக "ஆவணப்படங்கள்' தயாரிக்க அரசு முடிவு
செய்துள்ளது. முதல் முயற்சியாக, மதுரை மாவட்டத்தில் இதற்கான பணி
துவங்கியுள்ளது. தமிழகத்தில் இத்திட்டம் 2002ம் ஆண்டு முதல் செயல்பாட்டில்
உள்ளது. இதில் ஒரு பிரிவான உள்ளடங்கிய கல்வித் திட்டத்தின் கீழ் அரசு
பகல்நேர மையங்கள், ஆதார மையங்கள் என ஒவ்வொரு ஒன்றியங்களிலும் உள்ளன.
பள்ளி, கல்லூரி விடுதிகளில் உணவினை ஆய்வு செய்ய உத்தரவு
பள்ளி, கல்லூரி விடுதிகளில், மாணவர்களுக்கு தரமான உணவு வழங்கப்படுவதை
ஆய்வு மூலம் உறுதிசெய்ய, கலெக்டர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
குழந்தை தொழிலாளர் பள்ளி ஆசிரியர்கள் சம்பளம் இன்றி தவிப்பு
தமிழகத்தில் 16 மாவட்டங்களில் குழந்தை தொழிலாளர் பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்கள் 6 மாதமாக சம்பளம் இல்லாமல் தவித்து வருகின்றனர்.
மாணவன் கொலை: விடுதியை கண்காணிக்க உத்தரவு
விடுதியில் மாணவனை, மாணவனே கொலை செய்ததையடுத்து, மாநிலம் முழுவதும்
விடுதிகளில் வார்டன்களை உஷார்படுத்தவும், கண்காணிக்கவும்
உத்தரவிடப்பட்டுள்ளது.
"அறிவுசார் பூங்கா" திட்டம் அமலுக்கு வருவது கேள்விக்குறி
சென்னை, டி.பி.ஐ., வளாகத்தில், கல்வித்துறை அலுவலகங்கள் அனைத்தையும்
ஒருங்கிணைத்து, புதிதாக கட்ட இருந்த "அறிவுசார் பூங்கா" திட்டம் அமலுக்கு
வருமா என்பது கேள்விக்குறியாகி உள்ளது.
பள்ளிக்கு படையெடுக்கும் வெளிமாநில தொழிலாளர்களின் குழந்தைகள்
பரந்து விரிந்த செம்மண் பூமி. சுற்றுவட்டாரம்
முழுவதும் செங்கல் சூளைகள். வேட்டி கட்டிய தமிழ் முதலாளிகள். மேற்கு
வங்காளம், ஜார்கண்ட், உத்தரப்பிரதேசம், கர்நாடகா மாநிலங்களிலிருந்து
குடும்பத்தோடு குமரிக்கு வந்து தங்கியிருந்து வேலை பார்த்து வயிற்றை
நிரப்பும் கூலித் தொழிலாளர்கள். கன்னியாகுமரி மாவட்டம் தோவாளை, ஆரல்வாய்
மொழி சுற்றுவட்டாரப் பகுதியின் காட்சியமைப்புதான் இது.
12th Latest Study Materials
Physics - English Medium - Unit Wise Full Guide.
Unit Wise Physics Full Guide - Mr. B.Elangovan, PGAsst, PachaiyappasHSS, Kanchipuram. - English Medium
தமிழகத்தில் புதிதாக 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள்
தமிழ்நாட்டில் மத்திய அரசு தனியார்
கூட்டுமுயற்சியில் 356 சி.பி.எஸ்.இ. பள்ளிகள் தொடங்கப்படுகின்றன.
இதையடுத்து, அரசு பள்ளிகள் பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.மாணவ,
மாணவிகளுக்கு உயர்தரமான கல்வி கிடைத்திடும் வகையில் மத்திய மாதிரி பள்ளி
(ராஷ்ட்ரிய ஆதர்ஷ் வித்யாலயா) என்ற திட்டத்தை நாடு முழுவதும் செயல்படுத்த
மத்திய அரசு முடிவு செய்திருக்கிறது.
ஜனவரி 2014 -க்கான அகவிலைப்படி உயர்வு 10 முதல் 12 சதவீதம்
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கான ஜனவரி 2014 -க்கான அகவிலைப்படி உயர்வு 10 முதல் 12 சதவீதமாக உயர்த்தலாம் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.
12th Standard Latest Study Material
Physics
- +2 Physics 3 Mark Notes - Mr.P.Ilayaraja,PG.Asst,Panchantikualam,Nagapatinam-Tamil Medium
- +2 Physics 5 Mark Notes - Mr.P.Ilayaraja,PG.Asst,Panchantikualam,Nagapatinam-Tamil Medium
- +2 Physics 10 Mark Notes - Mr.P.Ilayaraja,PG.Asst,Panchantikualam,Nagapatinam-Tamil Medium
01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்கும் மேலாக உயருகிறது!
செப்டம்பர் - 2013 விலைவாசி குறியீட்டு எண் அக்டோபர் 31 ஆம் தேதி வெளியிடப்பட்டது. இதன்படி அகவிலைப்படி 95.59% ஆக உள்ளது. ஆகவே 01.01.2014 முதல்
அகவிலைப்படி உயர்வு 10 சதவீதத்துக்கும் மேலே உயர வாய்ப்பு
உள்ளது. அதாவது 01.01.2014 முதல் அகவிலைப்படி உயர்வு 100 சதவீததுக்கும் மேலாக உயரும் வாய்ப்பு அதிகம். மேலும் விவரங்களுக்கு
தீக்காயங்களுக்கான முதலுதவி முறைகள்..!
பட்டாசு வெடிக்கும் போது தீக்காயம் ஏற்பட்டால், காயம் ஏற்பட்ட இடத்தில் எரிச்சல் அடங்கும் வரை சுத்தமான தண்ணீரை ஊற்ற
வேண்டும். ஐஸ் வாட்டரை பயன்படுத்தக் கூடாது.
தபால் துறை சார்பில், உடனடி "ஸ்டாம்ப்" வடிவமைக்கும் போட்டி, பள்ளி மாணவர்களுக்கு இடையில் நடத்தப்படுகிறது.
தபால் துறை சார்பில், அவ்வப்போது புதிய கருத்துகளுடன் ஸ்டாம்ப்கள் வடிவமைக்கப்படுவது
உண்டு. சில நேரங்களில், மாணவர்களிடையே இதற்கான போட்டிகள்
நடத்தப்பட்டு, அதில் சிறந்த வடிவமைப்பு தேர்வு செய்யப்படும்.
மறுகூட்டல் / விடைத்தாள் நகல் ஆன்லைனில் விண்ணபிக்கலாம்
இடைநிலை / மேல்நிலை துணைத்தேர்வு எழுதியவர்கள் எஸ்.எஸ்.எல்.சி மதிப்பெண் மறுகூட்டல் (Retotalling), பிளஸ்2 மதிப்பெண் மறுகூட்டல் / விடைத்தாள் நகல் ஆன்லைனில் 04.11.13 முதல் 08.11.13 வரை இணையதளம் வாயிலாக விண்ணபிக்கலாம்
பள்ளிகளுக்கு இன்று விடுமுறையா?
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு இன்று மத்திய
அரசு விடுமுறை அறிவித்துள்ளது. இதையடுத்து, தமிழகத்தில் பள்ளிகளுக்கு இன்று
விடுமுறையா என்பதில் மாணவர்கள் குழப்பம் அடைந்துள்ளனர். தீபாவளி பண்டிகை
சனிக்கிழமை கொண்டாடப்படுகிறது. இதையடுத்து தமிழகத்தில் பள்ளிகளுக்கு
விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல தனியார் நிறுவனங்களும் 2ம் தேதி
விடுமுறை அறிவித்துள்ளன.
927 கலை ஆசிரியர் பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தல்
"ஆறு ஆண்டுகளாக, பள்ளிகளில் நிரந்தர, கலை ஆசிரியர்கள் பணி நியமனம்
நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதால், 927 பணியிடங்கள் காலியாக உள்ளன; இவற்றை
நிரப்ப வேண்டும்" என தமிழ்நாடு கலை ஆசிரியர் நலச்சங்கம்
வலியுறுத்தியுள்ளது.
அலகுத்தேர்வு நேரத்தை மாற்ற மாணவர்கள் கோரிக்கை
"பொதுத்தேர்வு மாணவருக்கு, மாலை நேர ஸ்பெஷல் கிளாஸ் நேரத்தில்,
அலகுத்தேர்வு நடத்துவதை மாற்றியமைத்து, முதல் வகுப்பு தொடங்கும் காலை
நேரத்தில் தேர்வு நடத்த வேண்டும்" என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
அரசு பள்ளிகளில் பாழாகும் கம்ப்யூட்டர்கள்.... பீரோக்களில் பூட்டிவைப்பு
அரசு பள்ளிகளில், மாணவர்கள் பயன்பாட்டிற்காக பல லட்சம் ரூபாய் மதிப்பில்
வழங்கிய கம்ப்யூட்டர்கள் லேப்-டாப்கள், ஆசிரியர்களின் ஆர்வமின்மையால்
பயன்பாடின்றி முடங்கி உள்ளது.
ஆசிரியர் தகுதித் தேர்வு முடிவுகள் நவம்பர் 18க்கு பிறகு வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது?
"ஆசிரியர் தகுதி தேர்வின் அடிப்படையில், தேர்வு
மற்றும் நியமனங்கள், வழக்கின் முடிவைப் பொறுத்து அமையும்" என, சென்னை
உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. இதையடுத்து தேர்வு முடிவுகள் வெளியீடு,
நீதிமன்றத்தில் வழக்கு நிலுவையில் உள்ளதால் அடுத்தகட்ட விசாரணைக்கு பிறகு
முடிவுகள் வெளியாகும் என்று எதிர்ப்பார்க்கப்படுகிறது.
இரட்டைப் பட்டம் சார்பான வழக்கு வருகிற 13ம் தேதிக்கு ஒத்திவைப்பு
சென்னை உயர்நீதிமன்றத்தின் முதலாவது அமர்வில்
வரிசை எண்.36ல் பட்டியலிடப்பட்ட இரட்டைப்பட்ட வழக்கு இன்று
காலை 11.30மணிக்கு தலைமை நீதியரசர் மற்றும் நீதியரசர் சத்தியநாராயணன்
ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.
குரூப் 2 தேர்வு தேதியில் மாற்றமில்லை
சென்னை: டி.என்.பி.எஸ்.சி.., யின் குரூப் 2 தேர்வு டிசம்பர்
ஒன்றாம் தேதி நடக்கும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்த தேதியை மாற்ற வேண்டும் என
கோரிக்கை வைக்கப்பட்டது. இந்நிலையில், ஏற்கனவே அறிவித்தபடி, டிசம்பர்
ஒன்றாம் தேதி குரூப் 2 தேர்வு நடக்கும் என்று தமிழ்நாடு அரசு பணி தேர்வாணயம்
அறிவித்துள்ளது.
தேசிய கொடியை கையாள வேண்டிய வழிமுறைக்களை விளக்கி தமிழக அரசு உத்தரவு
இந்திய தேசிய கொடியை அவமதித்தால் 3 ஆண்டு சிறை மற்றும் அபராதம் - சென்னை உயர்நீதிமன்றத்தின் தீர்ப்பின் அடிப்படையில் தேசிய கொடியை கையாள வேண்டிய வழிமுறைக்களை விளக்கி தமிழக அரசு உத்தரவு
இரட்டைப்பட்டம் வழக்கு இன்று (30.10.2013) வரிசை எண் 43 ல் விசாரணைக்கு வருகிறது
இன்று (30.10.2013) இரட்டைப்பட்டம் சென்னை உயர் நீதிமன்றத்தில் விசராணைக்கு வருகிறது.மேலும் வரிசை எண் 43-ல் விசாரணைக்கு வருகிறது. இன்றாவது வழக்கு முடியும் என்ற நம்பிக்கையோடு ஆசிரியர்கள் பலரும் காத்திருக்கின்றனர்.
RMSA-தலைமையாசிரியர் எதிர்கொள்ளும் சவால்களை சமாளிப்பது எப்படி என பயிற்சி
அனைவருக்கும் இடைநிலைக் கல்வி
திட்டத்தின் மண்டல அளவிலான தலைமையாசிரியர்களுக்கான திறன் மேம்பாட்டுப் பயிற்சி
தருமபுரியில் 29.10.2013 அன்று நடைபெற்றது.
தமிழகத்தில் பாதிக்கப்பட்டு வரும் அரசு உதவிபெறும் பள்ளிகள்!
தமிழகத்தில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளிகளில்
காலிப் பணியிடங்கள் நிரப்பப்படாததாலும், சிறப்புக்
கட்டணம் வழங்கப்படாததாலும் அப்பள்ளிகளின் வளர்ச்சிகள் பாதிக்கப்பட்டு வருகின்றன.
Pay Certificate Form
Thanks to Mr. Damodiran, GHRSS, Melatur, Thanjavore Dt.












