கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு ஜூலை மாதம் 30ம் தேதி தொடங்கும்என தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் அறிவித்துள்ளது.
கால்நடை மருத்துவப் படிப்பிற்கு விண்ணப்பித்துள்ள சிறப்புப் பிரிவு மற்றும் தொழிற்பிரிவு மாணவர்களுக்கு 30ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. பொதுப்பிரிவு மாணவர்களுக்கு ஜூலை 31ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது.
உணவு தொழில்நுட்பம் மற்றும் கோழி உற்பத்தி தொழில்நுட்பப் படிப்புகளுக்கு விண்ணபித்த மாணவர்களுக்கு ஆகஸ்ட் 1ம் தேதி கலந்தாய்வு நடைபெறுகிறது. இந்த மூன்று படிப்புகளுக்கும் மொத்தம் 320 இடங்கள் இருப்பதாகவும் கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகம் தெரிவித்துள்ளது. இந்தப் படிப்புகளுக்காக மொத்தம் 18ஆயிரத்து 78 மாணவர்கள் விண்ணப்பித்துள்ளனர். கூடுதல் விவரங்களுக்கு www.tanuvas.ac.in என்ற இணையதளத்தை மாணவர்கள் அணுகலாம்.
Public Exam 2026
Revision Test 2026
Home »
» கால்நடை மருத்துவப் படிப்புகளுக்கான கலந்தாய்வு கலந்தாய்வு தேதிகள் அறிவிப்பு.







0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...