Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

'தனிப்பட்ட பாடத்திட்டம், பருவமுறை தேர்வு வரவேற்கத்தக்கவை'

          கடந்த வாரத்தில், ஆந்திர மாநில அரசு, அரசு உதவி பெறும் கல்லூரிகளின் முதல்வர்கள், ?? பேர், சென்னையில் உள்ள எட்டு கல்லூரிகளில், நான்கு நாட்களாக ஆய்வு மேற்கொண்டனர்.
      சென்னையில் உள்ள கல்லூரிகளின் கட்டமைப்புகளை ஆய்வு செய்து, அவற்றின் அடிப்படையில், ஆந்திராவில் உயர்கல்வியில் மேற்கொள்ளப்பட வேண்டிய மாற்றங்கள் குறித்து அவர்கள் பரிந்துரைப்பர். ஆய்வின் நிறைவுநாளில், எழும்பூர் எத்திராஜ் மகளிர் கல்லூரியில் ஆஜரானோம். ஆந்திர மாநில, அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளின் முதல்வர்கள், 27 பேர், எத்திராஜ் கல்லூரி முதல்வரிடம், சரமாரியாக கேள்வி கணைகளை தொடுத்துக்கொண்டிருந்தனர்.

அவர்களிடம் பேசியதில் இருந்து...

உங்களை பற்றி...?

நாங்கள், ஆந்திர மாநில அரசு, அரசு உதவி பெறும் கல்லூரி முதல்வர்கள். தமிழகத்தில், குறிப்பாக சென்னையில் உள்ள புகழ்பெற்ற கல்லூரிகளைச் சுற்றிப் பார்த்து, அவற்றை, ஆய்வு செய்ய வந்திருக்கிறோம்.எங்கள் குழுவில், 27 பேர் உள்ளனர். எங்களைப் போலவே, இன்னொரு குழுவும் வந்திருக்கிறது. ஒருநாளுக்கு ஒரு கல்லூரி என, தலா நான்கு வீதம் மொத்தம், எட்டு கல்லூரிகளை பார்வையிட்டு, அவற்றின் நிறைகளை பற்றிய அறிக்கையை, ஆந்திர கல்லூரி கல்வி இயக்குனர் சுனிதாவிடம் சமர்ப்பிக்க இருக்கிறோம்.

சென்னை கல்லூரிகளை பற்றி, நீங்கள் அறிக்கை அளிக்கவேண்டிய அவசியம் என்ன?

தமிழகத்தில், அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளை மாணவர்கள் ஆர்வமுடனும்,

நம்பிக்கையுடனும் தேர்ந்தெடுக்கின்றனர். ஆனால், ஆந்திராவில் நிலைமை தலைகீழ்!

மாணவர்களை கவர, அரசு என்ன செய்ய வேண்டும் என்ற ஆய்வறிக்கை கேட்டிருக்கிறது.

நீங்கள் என்னென்ன விஷயங்களை கவனிக்கிறீர்கள்?

கற்பித்தல் - கற்றலில் புதிய முறைகள், மாணவர்கள் - ஆசிரியர்களின் உறவுமுறை, கல்வி சாராத, சமூக செயல்பாடுகள் முதலியவற்றை கவனிக்கிறோம்.

உங்களை கவர்ந்த விஷயங்கள் என்னென்ன?

எங்கள் குழு, மாநில கல்லூரி, புது கல்லூரி, ஸ்டெல்லா மேரீஸ், எத்திராஜ் கல்லூரிகளில் ஆய்வு செய்த வரையில், எல்லா கல்லூரிகளிலுமே வித்தியாசமான சிறப்பம்சங்களை கவனித்தோம்.

175 ஆண்டுகளான மாநில கல்லூரியில், 26 வகையான படிப்புகள் உள்ளன. ஆண்டுக்கு

நூற்றுக்கும் மேற்பட்ட ஆய்வு பட்டதாரிகள் உருவாகின்றனர். அருமையான ஆய்வகங்களும்,

ஆசிரியர்களின் அன்பான வழிகாட்டுதலும் உள்ளன.

நாங்கள் கவனித்த வரையில், தமிழக கல்லூரிகளில் ஏதேனும் ஒரு பருவத்திலாவது, தமிழைக் கட்டாயமாக படிக்க வேண்டும் என்கின்றனர். இதுபோன்று, மற்ற மாநிலங்களிலும் இருந்தால், தாய்மொழி மீது பற்று அதிகரிக்கும்.

தமிழக மாணவர்களிடம், ஆசிரியர் - மாணவர் உறவும், ஒழுக்கமும் சிறப்பாக இருக்கிறது.

ஒவ்வொரு கல்லூரிக்கும், தனிப்பட்ட பாடத்திட்டம் இருக்கிறது.

தேர்வில் பருவமுறையை (செமஸ்டர் சிஸ்டம்) சிறப்பானதாக கருதுகிறோம்.

நாட்டு நலப்பணி திட்டங்களில், மாணவர்கள், ஆசிரியர்கள் ஆர்வமுடன் பங்கெடுக்கின்றனர். இது நல்ல விஷயம்.

எல்லா கல்லூரிகளிலும், மாணவர் தேர்தல் ஏதேனும் ஒரு வழியில் நடக்கிறது. இது,

மாணவர்களை ஆளுமை உள்ளவர்களாக உருவாக்குவதாக உணர்கிறோம்.

எங்களை போலவே, இன்னொரு குழு, லயோலா, குருநானக், சென்னை மகளிர் கிறிஸ்தவ கல்லூரிகளை பார்வையிட்டுள்ளனர். நாங்கள், எங்களது அறிக்கைகளை, ஆந்திர கல்லூரி கல்வி இயக்ககத்திடம் சமர்ப்பிக்க உள்ளோம்.




0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive