Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

TNTET Special Article: இதுவும் கடந்து போகும்! - பாடசாலையின் சிறப்புக்கட்டுரை!

அன்புள்ள பாடசாலை வாசகர்களே,

       வணக்கம், டெட் தேர்வில் வெற்றி பெற்ற தேர்வர்கள், பாடசாலை வாசகர்கள் அனைவருக்கும் வணக்கம். அவர்களிடம் ஒரு வேண்டுகோள்! உங்கள் ஆர்வத்தையும், அற்பணிப்பையும் பணியில் சேர்ந்த போது இருப்பது போல பணியின் இறுதி கட்டம் வரை தொடர்ந்து செயலில் காட்டுமாறு அன்புடன் கேட்டுக்கொள்கிறோம்.


சாதிக்கப்பிறந்தவர்களுக்கு,

              நான்கு தலைமுறையாக ஆசிரியர் பணி செய்து வந்த குடும்பம், தற்போது என்னால் ஆசிரியர் பணி செய்ய முடியவில்லையே என வருந்திய சகோதரி, 105 மதிப்பெண் பெற்று பழைய வெயிட்டேஜ் முறைப்படி நிச்சயம் பணி கிடைக்கும் என காத்திருந்த நேரத்தில் புதிய வெயிட்டேஜ் மாற்றத்தால் இன்று பணியை இழந்து வருந்திய சகோதரன் என அவர்களின் சோகத்தை இங்கு பட்டியலிட வார்த்தைகள் போதாது.

"எது நடந்ததோ, அது நன்றாகவே நடந்தது.
எது நடக்கிறதோ, அது நன்றாகவே நடக்கிறது.
எது நடக்க இருக்கிறதோ, அதுவும் நன்றாகவே நடக்கும்."
- கீதை உபதேசம்!.

        தோற்பதற்கு ஆயிரம் காரணங்கள் இருக்கலாம். வெற்றி பெறுவதற்கு ஒரே ஒரு காரணம் போதும். - "வெறியுடன் கூடிய விடாமுயற்சி”

        டெட் மட்டுமே வாழ்க்கை அல்ல. அடுத்ததாக டி.என்.பி.எஸ்.சி நடத்தும் குரூப் 4, போன்ற பல தேர்வுகள் நடக்க இருக்கிறது. டெட் பாடப் பகுதிகளை படித்து முடித்த உங்களால் இது போன்ற பல தேர்வுகளும் மிக சுலபம். மிக எளிதில் வெற்றி பெற முடியும். எனவே படியுங்கள். ஆனால் ஒன்று மட்டும் நினைவில் கொள்ளுங்கள். நீங்கள் ஆசிரியராகப் பணி செய்வதற்கு தகுதி அற்றவர்கள் அல்ல. காலமும், சூழ்நிலையும் உங்களுக்கு ஏதுவாக அமையவில்லை என்பதே உண்மை. காலம் வரும். அன்று உங்களுக்கு பொன்மாலை சூட்டப்படும். எனவே அவசியம் அடுத்த டெட் தேர்வுக்கு படியுங்கள். டி.என்.பி.எஸ்.சி தேர்வுகளோ, இதர பணி நியமனமோ உங்கள் அத்தியாவசிய குடும்ப பாரத்தை போக்குவதற்கு ஒரு இடைக்கால நிவாரணியாக இருக்கலாமே தவிர, உங்கள் ஒவ்வொரு உள் மூச்சும் ஆசிரியர் பணியையே சூழ்ந்திருக்க வேண்டும். எங்கு தோற்றதாக அடையாளம் காட்டப்பட்டீர்களோ, அங்கிருந்து தான் தங்களுக்கான வெற்றி பயணத்தை தொடங்க வேண்டும்.

  •  அடுத்த டெட் தேர்வு நிச்சயம் உண்டா? - நிச்சயம் உண்டு.
  • அடுத்த டெட் தேர்வு எப்போது? - தற்போதைய டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் சார்ந்த செயல்பாடுகள் நடைபெற்று முடிந்தவுடன் ஓரிரு மாதங்களில் அடுத்த டெட் தேர்வு குறித்த அறிவிப்பை எதிர்பார்க்கலாம். புதிய தேர்வு குறித்த அறிவிப்பு வெளியான 3 மாத இடைவெளியில் டெட் - 2014 தேர்வு நடக்கும்.
  • அடுத்த டெட் தேர்வில் வெற்றி பெற்றவர்களுக்கு பணி நியமனம் பெற வாயப்புண்டா? - ஆசிரியர் தகுதித் தேர்வு என்பது நிச்சயம் உண்டு. பணி நியமனம் என்பது அரசின் அவ்வப்போதைய கொள்கை முடிவுகளின் படி நடைபெறும். எனவே அடுத்த டெட் தேர்வில் வெற்றி பெறுபவர்களுக்கும் பணி நியமனம் பெற அதிக வாய்ப்புண்டு.
  • தற்போது போல் அல்லாமல் அடுத்த டெட் தேர்வில் பணி இடங்கள் மிக, மிக குறைந்து விடுமோ? - கடந்த டெட் தேர்வில் தாள் 2 - 10,000, தாள் 1 - 8,000 என்றவாறு பணி நியமனம் நடைபெற்றது. தற்போது தாள் 2க்கான பணி நியமன அறிவிப்பில் இதுவரையே ஏறத்தாழ 11,000 இடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இது தவிர மேலும் ஆதி திராவிடர், நலத்துறை பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள் போன்றவற்றிற்கு காலி பணி இடங்கள் அறிவிக்கப்படும் போது தாள் 2ற்கான பணி நியமனம் எண்ணிக்கை கடந்த டெட் - 2012 ஐக் காட்டிலும் அதிகம். அதே சமயம் தாள் 1 ற்கான பணி இடங்கள் கடந்த வருடம் போல் அல்லாமல் நிச்சயம் குறையும். ஆனால் இது போன்று காலிப்பணியிடங்களின் எண்ணிக்கை அதிகமோ அல்லது குறைவோ அதைப்பற்றி கவலைப்படாமல் படிப்பில் மட்டுமே கவனம் செலுத்துங்கள்!
  • அடுத்த டெட் தேர்வில் மேலும் மதிப்பெண் குறைந்து விட்டால்? -தற்போது நடைபெற்ற டெட் தேர்வில் தாங்கள் வெற்றி பெற்றிருந்தால் போதும். அந்த சான்றிதழை கொண்டே அடுத்த 7 வருடங்களில் எத்தனை பணி நியமனம் நடைபெற்றாலும் அவற்றிற்கான சான்றிதழ் சரிபார்ப்பில் கலந்து கொள்ள வாய்ப்பு உண்டு.
  • அடுத்த டெட் தேர்வில் மேலும் பல்லாயிரம் தேர்வர்கள் வெற்றி பெற்று போட்டிக்கு வந்துவிட்டால்? - இந்த கேள்விக்கு உங்களிடம் ஒரு மாற்று கேள்வியை கேட்கிறோம். அதிகம் யோசிக்காமல் உடனடியாக பதில் கூறுங்கள். டெட்-2013 தேர்வில் இட ஒதுக்கீடு உடனடியாக, தானாகவே வழங்கப்பட்டதா? - இல்லை. தமிழக அரசு ”தகுதியான ஆசிரியர்கள் மட்டுமே தேவை, எனவே இட ஒதுக்கீடுக்கு இடமில்லை” என்றே பெரும்பாலும் கூறி வந்தது, ஆனால் சூழ்நிலை காரணமாக ”இட ஒதுக்கீடு வழங்கப்படும்” என அறிவித்தது நினைவுக்கு வரலாம். நடந்து முடிந்த தேர்வு நடந்ததாகவே இருக்கலாம். அடுத்த டெட் - 2014 தேர்விலும் இட ஒதுக்கீடு நிச்சயம் இருக்கும். அதே நேரம் வினாத்தாள் மிக, மிக கடினமாக இருக்க வாய்ப்பு உண்டு. எனவே முன் யோசனை உள்ளவர்கள் தற்போதிருந்தே படித்து டெட் மதிப்பெண் வீதத்தை அதிகரிக்க முயல்வார்கள்.
  • உண்மையாகவே அடுத்த டெட் வினாத்தாள் மேலும் கடினமாக அமையுமா? - ஆம். இதுவரை நடந்து முடிந்துள்ள மூன்று டெட் தேர்வுகளையும் அலசி ஆராய்ந்தால் ஒவ்வொரு தேர்வும் முந்தைய தேர்வை விட கடினமாகவே அமைந்துள்ளது என உணரலாம். அதுவும் டெட் - 2013 தேர்வில் 11 ஆம் வகுப்பு மற்றும் 12 ஆம் வகுப்பு அறிவியல் பாட கேள்விகள் இடம் பெற்றது நினைவிருக்கலாம். எனவே இப்போதிருந்தே திட்டமிட்டு படிக்க வேண்டும்.
  • வெயிட்டேஜ் உயர்த்த என்ன வழி? - முன்னர் படித்த 12 ஆம் வகுப்பு, கல்லூரி வழிக்கல்வி போன்றவற்றில் மதிப்பெண் சதவீதம் அதிகரிக்க செய்ய வாய்ப்பு குறைவு என்பதால், தற்போது நடைபெற இருக்கும் டெட் தேர்வில் மிக, மிக அதிகபட்ச மதிப்பெண் பெற திட்டமிட்டு முயற்சிக்க வேண்டும்.
  • தற்போது நடைபெற்ற டெட் தேர்விற்கே பணி நியமனம் நடைபெறவில்லை, இதில் அடுத்த டெட் தேர்விற்கு படிப்பதா? - நிச்சயம் படிக்கத்தான் வேண்டும். ஆயுள் முழுவதும் படித்துக்கொண்டே இருப்பது தான் ஆசிரியர் பணி. அத்தகைய ஆசிரியர் பணியினை அடைய மீண்டும் படிப்பது ஒன்றும் தவறில்லை. அடுத்த டெட் தேர்வில் 100 காலிப்பணியிடங்கள் மட்டுமே தான் நிரப்பப்படும் என அரசு அறிவிப்பதாக வைத்துக்கொள்வோம். நீங்கள் அடுத்த டெட் தேர்விற்கு சும்மாவாவது விண்ணப்பிப்பீர்களா? இல்லையா? விண்ணப்பிக்கத்தான் போகிறோம் என முடிவெடுத்து விட்ட பின் 100 என்ன 10,000 என்ன. நாம் திட்டமிட்டு முயற்சி செய்தால் 10ல் ஒருவராக கூட வர முடியும். திட்டமிடுங்கள்! எதிர்மறை எண்ணங்களை விதைப்பவர்களை தவிர்த்து, நேர்மறை எண்ணம் கொண்டவர்களுடன் அதிகம் பழகுங்கள்.
  • அடுத்த டெட் தேர்விற்கு எவ்வாறு திட்டமிட்டு படிப்பது? - மூன்று திட்டங்கள் உள்ளது. 1) 150 நாட்களில் டெட் தேர்வை சந்திப்பதாக இருந்தால் அனைத்து பாடப்பகுதிகளையும் எவ்வாறு பிரித்து, படிக்க வேண்டும் என கால அட்டவனை தயார் செய்து கொள்ள வேண்டும். 2) 100 நாளில் எவ்வாறு படிக்கலாம்? 3) 50 நாளில் எவ்வாறு படிக்கலாம்? - இவ்வாறு மூன்று வகையாக பாடப்பகுதிகளை பிரித்து திட்டமிட்டுக்கொள்ளுங்கள். தங்களுக்கு பிடித்தமான அட்டவனைப்படி படித்து வாருங்கள். அவ்வப்போது சுய தேர்வும், நண்பர்களுடன் சேர்ந்தும், பல்வேறு மாதிரித் தேர்வுகளை எழுதி வாருங்கள். அவை உங்களுக்கு மேலும் எவ்வாறு ஆழ்ந்து படிக்க வேண்டும் என்பதை உணர்த்தும். ஆசிரியர் தகுதித் தேர்வில் படிப்பது போன்று அதே அளவு தெளிவாக பணியில் சேர்ந்து விட்ட பிறகும் அனைத்து பாடங்களையும் படிக்கத்தான் போகிறீர்களா? இல்லையே தாங்கள் எந்த வகுப்பு பாடங்களை நடத்த இருக்கிறீர்களோ, அதை மட்டும் தானே அதிக ஈர்ப்புடன் படிக்கப்போகிறீர்கள். மற்றைய பாடங்கள் காலப்போக்கில் தானாகவே நினைவில் இருந்து மறைவது இயல்பு தானே. இறக்கும் நாள் தெரிந்து விட்ட ஒருவன் எவ்வாறு ஒவ்வொரு நொடியையும் ரசித்து வாழ்வானோ, அது போன்று தாங்கள் படிக்கும் பாடங்களையும் ஒவ்வொரு புத்தக்தையும், ஒவ்வொரு பக்கத்தையும், அதில் உள்ள ஒவ்வொரு செய்தியையும் மனப்பாடம் செய்யாமல் ரசித்து படியுங்கள். தொடர்ந்து படிப்பது மட்டும் தான் நமது பணி. உரிய நேரத்தில் உங்களுக்கான அங்கீகாரத்தை ஏற்படுத்தி தருவது இறைவனின் சித்தம். உங்கள் வேலையை நீங்கள் பாருங்கள். இறைவன் வேலையை இறைவன் பார்த்துக்கொள்ளட்டும். தாயும் இறைவனும் ஒன்று, நம்மை குறித்து நல்லதை மட்டுமே நினைப்பார்கள். நல்லது மட்டுமே நடக்கும்.

இத்துடன் நமது கட்டுரை நிறைவு பெறுகிறது.

(பின் குறிப்பு - பள்ளியில் படிக்கும் மாணவன் முதல் ஓய்வு பெற்ற ஆசிரியர்கள் வரை பலரும் தற்போது இணையத்தில் இணைந்துள்னர். கல்வித்துறை மட்டும் என்று இல்லாமல் பல்வேறு துறைகளை சார்ந்தவர்களும் தற்போது இணையத்தை தினந்தோறும் பார்வையிட்டு வருகின்றனர். மதுபானக்கடை அருகே இருவருக்குள் நடைபெறும் கருத்து மோதலை சுற்றி நின்று 100 பேர் பார்ப்பதும், அவ்வப்போது ஏதேனும் ஒரு பக்கம் சேர்ந்து கொண்டு, தாங்களும் அந்த மோதலில் இணைந்து கொள்வதை போல, கல்வி சார் வலைதளங்களை பயன்படுத்தாமல் ஆக்கப்பூர்வமாக பயன்படுத்தலாமே? பல்வேறு பயனுள்ள புதுமையான முயற்சிகளை செய்து வரும் நமது பாடசாலை வலைதளம், அடுத்த டெட் தேர்வினை எழுத இருக்கும் தேர்வர்களுக்கு உதவும் வகையில் ஓர் புதிய முயற்சியில் ஈடுபட இருக்கிறோம். தினந்தோறும் டெட் பாடப்பகுதியிலிருந்து ஒரு கேள்வி கேட்கப்படும். வாசகர்கள் அதற்கான விடை?, அவை எந்த வகுப்பு பாடப்புத்தகத்தில்?, எந்த பக்கத்தில்? அடங்கியுள்ளது என கமெண்ட் பாக்சில் பதில் அளிக்க வேண்டும். அதன் தொடர்ச்சியாக வாசகர்களும் இதே போன்று தங்களுக்கு தெரிந்த கடினமான கேள்விகளை கேட்டு, மற்ற வாசகர்கள் பதிலளிக்க உற்சாகப்படுத்தலாம். இவற்றின் மூலமாக நம் பாடசாலை வாசகர்களை பாடப்பகுதி பற்றி மட்டுமே சிந்திக்க வைத்து, வெற்றியை நோக்கி, ஒரே நேர் கோட்டில் பயணிக்க வைக்க இயலும் என கருதுகிறோம். விரைவில் இப்புதிய முயற்சியை துவக்க உள்ளோம். இது குறித்து தங்கள் கருத்து என்ன? நமது புதிய முயற்சியில் மேலும் ஏதேனும் மாற்றம் செய்ய வேண்டுமா? தங்கள் கருத்தை பதிவு செய்யவும். ஆக்கப்பூர்வமாக பயன்படுத்துவோமே வலைதளத்தை. இணைந்திடுங்கள் பாடசாலையோடு.

நன்றி!
என்றும் அன்புடன் - பாடசாலை.





95 Comments:

  1. Will the weightage system b cancelled? I hav scored 92 in chemistry and I hav been selected in the final list based on my weightage. I'm so worried that If suppose the weightage system s cancelled what ll happen to me? Enaku job kidaikama poiduma? Plz frnds & Padasalai admin plz reply

    ReplyDelete
    Replies
    1. தேர்ச்சி பட்டியலில் இடம் பெற்றவர்கள் குறித்தும், வழக்குகளின் நிலை குறித்தும் வெளிப்படையாக நமது அடுத்த கட்டுரையில் கலந்துரையாடுவோமே திரு. பிரதாப். இந்த கட்டுரை தேர்வர்களை ஊக்கப்படுத்தும் கட்டுரை.

      Delete
    2. ABOVE 90 TET ஆசிரியர்களுக்கு சில நம்பிக்கையான வரிகள் .......

      இதுவரை நடந்தது
      Answer key - Revised Answer key
      Cv list - Revised Cv list

      இதுவும் நடக்கும்
      Selection list - Revised Selection list

      * தற்காலிக BT TEACHERS பட்டியல் வெளியிட்டபின் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் சென்னை மற்றும் மதுரை உயர் நீதி மன்றங்களில் சுமார் 100 க்கும் மேற்பட்ட நண்பர்கள் GO 71 மற்றும் 5% மதிப்பெண் தளர்வுக்கான வழக்குகளில், தனி நபராகவும்,குழுவாகவும் தங்கள் பெயர்களை இணைத்துள்ளனர்.

      தமிழகம் முழுவதும் சுமார் 500 -1000 ஆசிரியர்கள் வழக்கில் இணைய உள்ளனர் என்பது வழக்கை மேலும் வலுபடுத்தும் சூழலை உருவாக்கியுள்ளது .

      வழக்கறிஞர்களுடன் கலந்து பேசியதில் 5% தளர்வால் அதாவது முதலில் ஒரு GO வெளியிட்டு தேர்ச்சி மதிப்பெண் 90 என கூறி சான்றிதழ் சரிபார்த்தபின் இறுதி பாட்டியல் வெளியிடும் சுழலில் ,2 nd GO வெளியிட்டு 5% தளர்வு வழங்கினால் அதனால் முதல் GO வில் தேர்ச்சி பெற்றவர்கள் பாதிப்படைந்தால் 1 st GO வில் உள்ளவர்களுக்கு வேலை வழங்கிவிட்டு பின்தான் தளர்வில் வந்தவர்க்கு பணி வழங்க வேண்டும் என்ற உயர் நீதிமன்ற தீர்ப்புகள் பல உள்ளன.என தெரிவித்தனர் .
      உதாரண வழக்கு ; ONE YEAR BEFORE COMPUTER TEACHERS CASE IN CHENNAI HIGH COURT AND SOME OTHER STATE JUDGEMENTS,SUPREME COURT JUDGEMENTS.

      சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர .....
      * TET வழக்குகளை ஏற்கனவே நடத்திவரும் சில முக்கிய வழக்கறிஞர்களை அணுகவும்

      * வழக்கறிஞர் திருமதி.தாட்சாயினி
      சேம்பர் எண் : 222
      *வழக்கறிஞர் திரு .சங்கரன்
      சேம்பர் எண்: 354
      * வழக்கறிஞர் திரு.ராஜசேகர்
      * வழக்கறிஞர் திரு .நமோ.நாராயணன்

      மதுரை உயர் நீதிமன்றத்தில் குழு வழக்கு தொடர .....
      நண்பர்கள் திரு .ராமசுப்ரமணி -9442450330
      திரு. கருப்பையா 9942342608.

      Delete
  2. Good&Super article. Thanks to padasalai.

    ReplyDelete
    Replies
    1. நன்றி! திரு. சார்லஸ்

      Delete
    2. This comment has been removed by the author.

      Delete
    3. sry the above said may not correct

      Delete
  3. Padasalai admin sir can u plz tell how many bc candidates scored 90 & above in chemistry? Plz reply. Im bc women, English mudiyum

    ReplyDelete
  4. திரு. பிரதாப் - வேதியியல் பாடம் தொடர்பாக தாங்கள் கேட்கும் விவரம் நம்மிடம் இல்லை. வருந்துகிறோம்.

    ReplyDelete
  5. How many posts we can expect in 2nd list? Plz rply admin sir.

    ReplyDelete
  6. Ok..thanks padasaalai.. Viraivil 2nd list Patri nalla news sollunga. ... Good night...

    ReplyDelete
  7. TET pass seithavargalai employment seniority adippadayil velai valangamattargala ?

    ReplyDelete
    Replies
    1. எதுவும் நடக்கும்.

      Delete
    2. kandippaga athuthan nadakkum. appadi seithal court case ithellam irrukathu.

      Delete
  8. This comment has been removed by the author.

    ReplyDelete
  9. Good and Motivated article.. Keep it up padasalai..

    ReplyDelete
  10. yerkkenave wtg against-a case file pannidhan TRB wtg system change panninanga. idhu correct-tana system than. but marubadiyum yean ippadi case file pannitte irukkanga? ithunala time than waste aaguthu, next TET thallippoga idhu valivagukkume thavira, ithunaala enna kidaikkappoguthu? listla name irunthum antha candidates-naala happy-ya irukka mudiyuma? ithunaala yaarume happy-ya illa......... ithudhan unmai. oh God Plz Safe .......

    ReplyDelete
    Replies
    1. Idharku kaaranam kolgai mudivu...90 eduthaachu..verification mudichaachi..yeppa job kedachidum namma life change aaidumnu kanavu kandavargaludaiya kanavai sukkunooraaki avargal irukum idathil matravargal peyarai listla paatha kobam varathaan seiyum sister....next time 50 eduthale pass..

      Delete
  11. Nice & useful article sir,
    Thank u so much..

    ReplyDelete
    Replies
    1. கடந்த இரு நாட்களும் நமது கட்டுரையை வெளியிட நினைவூட்டி ஊக்கப்படுத்திய திரு. வசந்த் கிரிஜா அவர்களுக்கு நன்றி!

      Delete
    2. Padasalai-king of kings...
      Aasiriyargal padikindra pallikoodam...saevai thodarattum..

      Delete
  12. Replies
    1. திரு.இராஜலிங்கம் சகோதரரே, ஏன் இந்த கால இடைவெளி? மீண்டும் பாடசாலையோடு இணைந்தமைக்கு நன்றி.

      Delete
  13. அனைவருக்கும் 15.08.2014 சுதந்திரதின நல்வாழ்த்துக்கள்....

    ReplyDelete
  14. Ellorukum mark kuraiyiradhu psychology sir..notes publish pannunga sir..will b useful

    ReplyDelete
  15. This comment has been removed by the author.

    ReplyDelete
  16. Yes pls publish notes for psychology pls

    ReplyDelete
  17. sir suppose next tet eluthama intha tet marka veithu verification attend pannalama.

    ReplyDelete
    Replies
    1. நிச்சயமாக. இதே சான்றிதழை வைத்தும் கலந்து கொள்ளலாம். இதில் சந்தேகமே தேவையில்லை.

      Delete
    2. how to write in tamil font? in comments.

      Delete
    3. you pls open Google translate web page and select tamil font option & type in Tamil, then copy from this web and paste this comment box. it's easy

      Delete
    4. App storela ezhuthaani download pannunga sister

      Delete
  18. Nice to see very good article published in padasalai website. Happy independence day... One suggestion, we need to request all parents to join their children to Government Schools. So that, there is way to increase the teachers counts from government side. I have studied in Government school and working in MNC software company. Still my government teachers are my role model. They are real heroes.. I respect them...

    ReplyDelete
  19. Please every one try to understand the meaning and pronounce it perfectly...

    word by word meaning...

    jana= people
    gana= group
    mana= mind
    adhinayaka = leader
    jaya he= victory be
    Bharata= India
    bhagya=Destiny
    vidhata=Disposer
    Pañjaba=Punjab
    Sindhu=Indus
    Gujarata=Gujarat
    Maratha=Maharashtra
    Dravida=the south
    Utkala=Orissa
    Banga=Bengal
    Vindhya=vindhyas
    Himacala= Himalayas
    Yamuna=yamuna
    Ganga=ganges
    Ucchala=moving
    jaladhi=ocean
    taranga=waves
    Tava=your
    subha=auspicious
    name= name
    jage=awaken,
    Tava=your
    subha=auspicious
    asisa=blessings
    mage= ask,
    Gahe=sing
    tava=your
    jaya=victory
    gatha=song
    jana= people
    gata= group
    mangala=good fortune
    dayaka=giver
    jaya he=victory be
    Bharata= India
    bhagya= Destiny
    vidhata=dispenser
    Jaya he, jaya he, jaya he, Jaya jaya jaya jaya he.= victory,victory,victory,victory for ever.....



    PLEASE SHARE IT AND LET ALL PEOPLE KNOW THE MEANING OF OUR NATIONAL ANTHEM...


    JAI HINDH....

    ReplyDelete
  20. Super........vry nice & vry useful

    ReplyDelete
  21. Mr.padasalai nengal solvathellam unmaiya?

    ReplyDelete
  22. hi admin and frns

    next TET varuma?
    or
    TET cases thodaruma?
    or
    passed candidates ku job ketaikuma?
    or
    next TET elutha mudiu ma?
    or
    marks 90 thana ?
    or
    marks reduce aaguma?
    or
    TET 2014 varuma?
    or
    TET 2015 varuma?

    TRB?????????????????????
    TET???????????????????????????????????
    buvana or ??????????????????????
    just joke ...........
    how is it.......!

    ReplyDelete
  23. Tet 2013 il ithu nal varai ennudan payanithu varum anaithu nanbargalukum suhandira dina valthukal...

    Intha thervil final list il idam perathavar valigal yaruku puriyavitalum 15 matham ondraga payanitha thervargaluku purium.

    Oru sila nanbargal athistam ilai ena veruthu pesugindranar...

    Rasi, luck itharku ingu idamilai.

    Ovoruvar thannudaiya valivil poradi petra ovvoru mathippennum ingu avaruku kai kodukirathu.

    105 mathipenil velai ilanthavaraiyin125 ai nokki adutha payanam thodangungal.

    Unakana ellai 105 alla 150.

    Indru thaguthaiyatravar endru kurapadubavar
    aduthu varum kalagalil muthal thaguthi perugindranar!

    Ithai ninaithu aduthu varum ilam thervargal ungalai munthi sella nengale vali tharatheergal...

    Thevai ila punpaduthalgalum pulambalgalum vetriyai thara povathilai...

    Thervin nunukangal ungaluku paritchayam...

    Adutha thervil epadium 82 mathipen vetri mathipen athalal thervargalai vadikatta vinathal kadina thanmai kondathaga irukum...

    Muyarchiyai thodangungal!
    Ungalal matume athil athiga mathipen pera mudium...

    Vetriyum tholviyum unnilirunthe pirakirathu...
    Tholvi enbathu mayai...
    Nirantharamalla!

    Nanbane 'unnai vella yarumilai uruthiyodu poradu!'

    Valthukaludan...

    ReplyDelete
  24. Good&Super article. Thanks to padasalai.

    ReplyDelete
  25. நன்றி. அடுத்து தேர்வு பெற போகும் தேர்வர்களுக்கான அருமையான பதிவு.

    ReplyDelete
  26. Article super than sir but mark below 90 vangi job kidaikalana feel panna matom but pona TET la 85 vangi fail ayitu intha TET la 91 vangium job kidaikalaye .... athu kuda paravala intha TET la just 83 mark vangunavanga kuda job kidaikuthe itha than manasatchi yetru kolla marukirathu......

    ReplyDelete
  27. மக்கள்தொகை பெருக்கத்திற்கு மிகவும் பிரதான காரணம் எது?
    A)ஏழ்மை
    B)கல்வியறிவின்மை
    C)சமூக பொருளாதார பிரச்சனை
    D)இவற்றில் எதுவும் இல்லை

    ReplyDelete
  28. Dear padasalai plz clarify which one is the best pg or bt for women?

    ReplyDelete
  29. This comment has been removed by the author.

    ReplyDelete
  30. Dear friends.... We got permission from chennai commisioner for giving petition to trb office or CM office related to the selection list of tet and mention that for giving preference to above 90 .we will assemble monday morning 9 am at valluvar kottam in chennai without fail my dear friends because this is our life. Contact no: 1)Mr.CHINNU-9942320011 2)Mrs.SUDHA-8883095696 3) Mr. Selvaraj 09742267262

    ReplyDelete
    Replies
    1. Neenga 40000 per ponalum governmenta onnu seyyamudiyathu thambi yenna TRB nna pommya list viduna vittruvangala(revised) ponga ponga aal the best

      Delete
  31. thanks to padasalai,,,,,

    ReplyDelete
  32. Nammalala mudiyadhadhu vera yaralum mudiyadhu sir kandippa next tet sammanthamana news solli anaivaraiyum vetri pera vaikavendum padasalai admin sir

    ReplyDelete
  33. PG TRB-ku employment seniorty, experience-ku mark irukku, but antha mark selection list vanthapiragu counseling-la placement-kkaga appothan add pannuvaanga, seniority yellam central government eppavo cancel panniduchu. 90,above 90-ku mela yeduththavanga 12, B.Sc.,B.ed mark kuraiva irunthathaladhana select aagama iruppanga, k below 90 yeduththu 12,B.Sc.,B.Ed., mark adhigama yeduththavanga enna paavam panninnanga?............ and 5% relaxtion Go
    TRB koduththa scientific calculation 100% correct method. selection list athan adippadaiyil velividappatturukkirathu. it's very correct.

    ReplyDelete
    Replies
    1. yes this is correct method

      Delete
    2. ene avargaluku mothalaye theriyatha case potathukappuram than theriuma

      Delete
  34. "சுதந்திரம்"
    மனிதமனங்களில் மண்டிக்கிடக்கும்
    பிரிவினைகளை முறித்து,
    சிலநொடியேனும்
    'இந்தியன்'
    ‍- என்ற ஒற்றைக்கூரையில்
    உணர்வுகளை ஒன்று படுத்தும்
    உன்னத உறவு.....

    ஜெய்ஹிந்த்

    ReplyDelete
  35. Excellent article encourage words really it's gr8 job keep it up padasalai team u r doing wonderful mission

    ReplyDelete
  36. good job padasalai.........tet paper2 tamil la above90 bc list iruntha publice pannuga sir ........... second list la vaippu irukkanu therinchigalam........

    ReplyDelete
  37. Seniors unga life la p.g. and u.g trb vandhadhe illaya..unga vaipa neega use panala...tet mark school based syllabus than..12 mark wtg is good...present wtg is correct method...case podra elarukum kandipa velai kidaikuma...

    ReplyDelete
  38. Padasalai administrator solvathellam unmai unmai thavira veru ondrum illai nandri my dear sir and guide

    ReplyDelete
  39. திரு.இராஜலிங்கம் சகோதரரே, ஏன் இந்த கால இடைவெளி? மீண்டும் பாடசாலையோடு இணைந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  40. திரு.இராஜலிங்கம் சகோதரரே, ஏன் இந்த கால இடைவெளி? மீண்டும் பாடசாலையோடு இணைந்தமைக்கு நன்றி.

    ReplyDelete
  41. திரு.இராஜலிங்கம் சகோதரரே,மீண்டும் பதிவு செய்யப்பட்டுள்ள COURT CASES
    பற்றி தங்கள் கருத்துக்களை பதிவு செய்யவில்லையே? தயவு செய்து தங்க‌ளுக்குத் தெரிந்த விசயங்களைப் பகிர்ந்து கொள்ளவும்.

    ReplyDelete
  42. NO PRIORITY FOR >90 !!!

    "No one is affected by anybody"!!!

    Note: I am taking 3 persons as examples and noting down their marks. I prepare their rank list according to both TET mark and Weight age mark. Finally, I conclude who are the "JOB GETTER"

    Name : Ambiga
    Tet : 95 (37.99)
    B.ed. : 50 % (7.50)
    Deg. : 50 % (7.50)
    +12. : 50 % (5.00)
    ================
    Weight age = 57.99
    ================
    Name : Banupriya
    Tet : 90 (36.00)
    B.ed. : 80 % (12.00)
    Deg. : 80 % (12.00)
    +12. : 80 % (8.00)
    ================
    Weight age = 68.00
    ================
    Name : Chitra
    Tet : 85 (33.99)
    B.ed. : 90 % (13.50)
    Deg. : 90 % (13.50)
    +12. : 90 % (9.00)
    ================
    Weight age = 69.99
    ================

    Analysis :

    1). TET mark alone does not determine one's rank.
    2). One's rank is determined by all 4 factors (tet, b.ed, degree and +2).
    3). "No one is affected by anybody".
    4). So, relaxation can not be cancelled.
    5).So, priority can not be given for >90.


    RESULT REPORT !!!

    Rank list according to TET Mark !!!

    First Rank : Ambiga. (95)
    Second Rank : Banupriya. (90)
    Third Rank. : Chitra. (85)

    Rank List according to Weight age !!!

    First Rank : Chitra. (69.99)
    Second Rank : Banupriya. (68.00)
    Third Rank. : Ambiga. (57.99)

    ReplyDelete
    Replies
    1. +2-85%
      Tet-91
      B.ed-87%
      But degree corresla pannadhaala 50%...
      Wghtg-63.86..

      இவருக்கு Degree ல 80% வாங்க திறன் இல்லையா??

      Delete
    2. 80% வாங்கியிருந்தால் வெயிட்டேஜ் 70 ஐ தான்டியிருக்கும் நண்பா,.

      Delete
  43. Intha weightage system correct na .. then ethuku TET nu exam vaikanum? Atha cancel pannitu intha weightage layae posting podalame...iravu pagal paramal kastapattu padichu 90 than pass nu nenachu exam eluthi 90 ku mela mark vanguna........ivanuga ennamo 12, degree B.Ed mark than important.... TET mark ellam. Oru ..... kum use illanu solranga..... intha niyayam kettu porada pona kindal vera..... ena kodumada saami......

    ReplyDelete
  44. Indha weightage sari illana exam call panum podhu poratam panirukalame ..yen pannala ...velai illanu sonnadhum porattam panranga...12 mark concern panradhu pona tetlaye theriyumla....seniors ungaluku evlo trbs vandhrukum appuram en adhula pass panala...seniorsku velai illanu sollave illa...ungaluku talent irundha ulla polam..

    ReplyDelete
  45. Tet oru competitive exam than ..indha exam oru recall madhiri than ..just for filteration from first level...adhula varavanga eligible candidate nu solranga avlo than ...tet school based syllabus than..then y 12 th mark cancel pannanum..

    ReplyDelete
  46. TET exam announce pannumpothu intha method ilanu kudava ungaluku theriala mr. Sandeep... we are not asking mark for seniority , cancelation of weightage is our request..... ithu ellam panam koduthu B.Ed la mark vangunavangaluk theriathu...... we ask for TET Mark cutoff only mr....

    ReplyDelete
  47. engaluku Talent ilanu unaku eppadi pa therium..unga marks sollunga pakalam... degree and +2 only not B.Ed because B.ED La money than pesum....

    ReplyDelete
  48. Mr. Sandeep and vijay vijay don't think you people r talking too smart. First govtoda canathanamana announcement + kanda nerathula kolgaiya matriyathu ungalukku nallatha pochi. Safe zonela iruthukittu engala comment pandringala venam all t best do your job sincerly dont interupt in our rights

    ReplyDelete
  49. Mr. Vijay vijay eppadi ippadi oru calculaTion ungalala mattum than mudiyum

    ReplyDelete
  50. Wts ur problems seniors...
    Senoirityla podanumnu ippo pesuringa... senoiryla pota ippovum... adutha examlayum nenga 82 eduthu alaga ulla povinga
    .120plus eduthu youster veliya poganuma....tet mark wise potalum..relaxation la irukka seniors youngsters enga porathu.. waightage methodla ellarukume job kedaichirykku...yousters... relaxation peoples... seniors... physics majorla date of birth..1967..1970 peoples kuda irukanga...kudutha namakku velai tharanum.
    .illana yarukkum kadaika kudathu adhana unga ennnam....

    ReplyDelete
  51. All subjectlayum..d.o.p1966 irukavangalum select ayirukanga.. vacancya poruthu.. oru silarku kedaikala.... sariyana nerathula poradama..ippa vanthu kekringa.. select agathavangale case podum bothu.. list la name vanthu apram change aana avanga summava irupanga ... ippo irukka 15000 vacancyum aduthu pass pandravangalum pangukku varanunu nenaikringala...judge first iruntha waitage ah mathi amaichappovathu ketrukalam.. ada vittu namma peru listla vatala kadaisiya mothi papome ... namma namey varala apram yarukku velai kedaicha ennanu ippo mutti modhuringa.....running racela antha second yaar first varavanuku tha prize... 20 varusama odittu irunthangrathukaga prize mathi kuduka matanga...nenga b.ed padika karanama iruntha andha corse venum ..adhula vanguna mark venama... en fail ayitu ...nan padichen..adhanala seat kudunganu kekalame... apram neenga amount kuduthu b.ed pass panninathukaga engala apadi sollathinga..enna thitravanga thittikonga.. unma idhuthan..bye

    ReplyDelete
    Replies
    1. Ivargal podum koochalil naanum kulambiviten.. en key boardum kulambivittathu.. date of birth.. and degree and plus 2 examsa than

      Delete
  52. அரசியல்வாதி களுக்கு தகுதித்தேர்வு?

    ReplyDelete
  53. Seniors ...nanga appo padichom.... appo irunthathu vera ippo irunthathu verangranga... padam nadatha porathu ippo irukavangalukku... tet questionum ippo sylabus ... en appo sylabusla tha padichom..appo sylabusla than ne kelvi kekenunu solla vendithana...ippo case potta anaivarum mulukkamulukka than nalathirgaga mattume pottirukanga.. namma per varala case poduvom... vantha vararumnu.. potrukanga.
    ..kalikalam..unakku name varama iruthurutha theriumnu padhilukku ennna kepinga... seniorso ... relaxation candidates oruthar kuda listla illana..ok poradalam...ellarukkum vaipu kedaichirukka oru muraiyai alikka koottam kotama kelamburanga... anyway ethu nadakanumo adhu nandragavennadakum

    ReplyDelete
  54. Seniortyla than podanunu firste poradi vangiruntha ... nan tet examey eluthirukka maten...enaku eppa seniorty date pakkama varutho appo eluthirupen...appo tet exam irukkumnu unakkku theriumanu kepinga...senoirty pota problem varathunu neenga sollumbothu nanga sollamatoma... ana nalla irukkunga seniors soldrathu seniortyna ellarukum kedaikumam...seniorty kudutha just82 ungalukku 150 mark edutha mathiry... ana yougstersku innum 10 yearsavathu waste agum seniorty varathuku.. apram tet irukuma? Illa seniorty ku exam than irukka increase panna.....

    ReplyDelete
    Replies
    1. Kobapadaathinga friend ...ungaluku job kidaithuvittadhu..but avargalai kuraisollum urimaiyum yaarukum illai..thagudhi ulla aasiriyargal select panna thagudhi thervu...adhil thalarvu seidhadhu thavaru...thavaru number 1il aarambamaanadhu...naan 24 vayadhil teacher aanavan..40 vayadhil kidaikaamal irupavargalai thayavu seidhu comment pannadha nanba

      Delete
    2. Friend, unga students ku neengadhaan role model ..vaarthaigalai kattukul vaithirungal..kobam enbadhu arave koodadhu nanba..all the best

      Delete
  55. Enna pandrathu ... kuduthachu... oru silarukaga palarin valkaiya parikka ninaipathu enna niyayam... oru varudathirku piragu list vanrgurukku.. mendum change na.. kandipa list vidamudiyuma. ... padhika patta silaralaye matha mudiumna list change ana... nilaimai summa irupangala....net exams padikravanga...ippo fail anavanga ... lastla name irunthalum ivargalin koochalinal adutha tetku padikum alavu manathu kulambi ... padaika arambithu.. entha method marumonu mendum kulambi padikavum mudiyama ... velai kedaikumnu nimathiya irukavum mudiyamal irukkum ennoda nilaimai...thalai eluthu padi nadakkum ... next examku padichikono solla varinga... k .. ithuuvum nanmaike...

    ReplyDelete
  56. Dear Education Department Officials, You well know your selection method is totally wrong. Because,
    1. All the competitive exam only analyse current knowledge only like UPSE, TNPSE, RAILWAY, BANK TEST......... Why InTET use weitage?
    2. In 1990 state First mark was 967, in 2014 state first mark is 1196,
    3. Curriculum changed 3 Times from 1990 to 2014.
    4. Hsc - Maths group is different from Arts group. Arts group student scored High marks easily.
    5. UG- Every University have different subjects & valuation methods. Compare Madras University & Annamalai unversity.
    6. B.Ed - This mark also depend Upon the university. Some deemed university students scored abnormal.

    Above all things all DEO's, CEO's, Director's, Secretary are well knew. But they are not correct decision. Please,
    * At list One CEO/DEO convey to your Directors,
    * Plz , At list one Director convey to Education secretary.
    * Honorable Secretary mam, we are well know, your experienced & skilled one among the Tamilnadu IAS Officers, kindly explain to Honorable CM & Education Minister.

    Friend Fwd above things mail to All education Officers.

    THANKS.

    ReplyDelete
  57. Dear Education Department Officials, You well know your selection method is totally wrong. Because,
    1. All the competitive exam only analyse current knowledge only like UPSE, TNPSE, RAILWAY, BANK TEST......... Why InTET use weitage?
    2. In 1990 state First mark was 967, in 2014 state first mark is 1196,
    3. Curriculum changed 3 Times from 1990 to 2014.
    4. Hsc - Maths group is different from Arts group. Arts group student scored High marks easily.
    5. UG- Every University have different subjects & valuation methods. Compare Madras University & Annamalai unversity.
    6. B.Ed - This mark also depend Upon the university. Some deemed university students scored abnormal.

    Above all things all DEO's, CEO's, Director's, Secretary are well knew. But they are not correct decision. Please,
    * At list One CEO/DEO convey to your Directors,
    * Plz , At list one Director convey to Education secretary.
    * Honorable Secretary mam, we are well know, your experienced & skilled one among the Tamilnadu IAS Officers, kindly explain to Honorable CM & Education Minister.

    Friend Fwd above things mail to All education Officers.

    THANKS.

    ReplyDelete
  58. Mr. Sandeep and vijay vijay don't think you people r talking too smart. First govtoda canathanamana announcement + kanda nerathula kolgaiya matriyathu ungalukku nallatha pochi. Safe zonela iruthukittu engala comment pandringala venam all t best do your job sincerly dont interupt in our rights

    ReplyDelete

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive