''பேட்டரி கோளாறு காரணமாக தீப்பிடிப்பதால் 'கேலக்சி நோட் 7' ஸ்மார்ட் போனை
உலகம் முழுவதும் வாடிக்கையாளர்கள் பயன்படுத்த வேண்டாம் என்று சாம்சங்
எலக்ட்ரானிக்ஸ் நிறுவனம் வலியுறுத்தியுள்ளது. 'கேலக்சி நோட் 7' என்ற
ஸ்மார்ட் போனை சாம்சங் நிறுவனம் கடந்த மாதம் 19ம் தேதி அறிமுகம் செய்தது.
இதில் உள்ள லித்தியம் பேட்டரியில் குறைபாடு உள்ளது. இதன் காரணமாக ஸ்மார்ட்
போன் தீப்பற்றுவதாக புகார்கள் எழுந்தன. இதையடுத்து விமானத்தில் 'கேலக்சி
நோட் 7' பயன்படுத்த வேண்டாம், ரீசார்ஜ் செய்ய வேண்டாம் என முதன் முதலில்
அமெரிக்க அதிகாரிகள் வலியறுத்தனர். இதையடுத்து உலகம் முழுவதும் உள்ள பல
விமான நிறுவனங்கள் கேலக்சி நோட் 7 ஸ்மார்ட் போன்களை பயன்படுத்த வேண்டாம் என
தங்கள் பயணிகளிடம் கூறினர். சில விமான நிறுவனங்கள் இந்த போனுக்கு தடை விதித்தன.
இந்நிலையில்
இது குறித்த அறிவிப்பை சாம்சங் நிறுவனமே தனது வெப்சைட்டில் நேற்று
வெளியிட்டது. அதில் கேலக்சி நோட் 7 பயன்படுத்துபவர்கள், உடனடியாக அதை
ஸ்விட்ச் ஆப் செய்து, சாம்சங் மையங்களில் திருப்பி கொடுத்து, மாற்று
செல்போனை பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர். புதிய
பேட்டரியுடன் கூடிய கேலக்சி நோட் 7 போன்களை 19ம் தேதி முதல் வழங்க சாம்சங்
திட்டமிட்டுள்ளது. அதுவரை வாடிக்கையாளர்கள் சாம்சங் சேவை மைங்களில் தற்கால உபயோகத்துக்கான வாடகை போன்களை பெற்றுக் கொள்ளலாம்.
0 Comments:
Post a Comment
Dear Reader,
Enter Your Comments Here...