Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

ATM கார்டு மோசடிகளுக்கு முற்றுப் புள்ளி வைத்தது கனரா வங்கி

ஒரு பொதுத்துறை வங்கி என்ற பெயருக்கு
ஏற்றார் போல் தன்னுடைய சிறப்பான
ஆன்ட்ராய்டு செயலியை வெளியிட்டுள்ளது கனரா வங்கி.
   பல  ATM கார்டு மோசடிகள் ஒரு பக்கம் நடந்து கொண்டிருக்க மறு பக்கம் CBI துறையும் தீவிரமாக விசாரணை நடத்தி வந்தும் கயவர்களை கையும் களவுமாக பிடிக்க சற்றே தடுமாறி வருகிறது.
   களவாடிகள் புகுந்து விளையாடிக் கொண்டே இருக்கும் இந்த தருணத்தில் நாமும் அதற்கு உறுதுணையாக ரெஸ்டாரண்டில் சர்வரிடம் ATM கார்டை கொடுத்து ஸ்டைலாக பணம் செலுத்தும் வகையில் அஜாக்கிரதை , சூப்பர் மார்க்கெட் டில் அனைவர் முன்னிலையிலும் பாஸ்வேர்டு போடுகிறோம், கிளை மேலாளர் என்று அரைகுறை தமிழில் பேசி ஆதார் அப்டேட் செய்ய OTPயை கொடுத்து கணக்கில் உள்ள பணத்தை பறிகொடுக்கிறோம்.
    தவறு தான் தகவல்களை பாதுகாக்காமல் இருப்பது.
    சரி விசயத்திற்கு வருகிறேன் அதிநவீன டெக்னாலஜை வைத்து திருடும் திருடர்களுக்கு அதே டெக்னாலஜை வைத்து சவுக்கடி கொடுத்து இருக்கிறது" கனரா வங்கியின் Canara Mserve" App.
 இதில் உள்ள சிறப்பம்சம் என்னவென்றால் நம் கணக்கில் உள்ள கார்டை ஆஃப் செய்யவும் ஆன் செய்யவும் வங்கியானது நமக்கே அனுமதி அளித்துள்ளது . மேலும் கார்டை நிரந்தரமாக செயலிலக்க செய்யவும் நம்மால் முடியும்.அது மட்டுமல்லாமல் ATMல் பணம் எடுக்கும் வரம்பை நாமே நிர்ணயித்துக் கொள்ளலாம்.உதாரணம் 100 முதல் 40000 வரை.அதில்  ரூ.4500 என நிர்ணயித்தால் அதற்கு மேல் ஒரு ரூபாய் கூட அதிகமாக எடுக்க முடியாது உங்கள் கணக்கில் எவ்வளவு பணம் இருந்தாலும் சரி.
    இந்த தொழில் நுட்பத்தை பயன்படுத்தப்படும் பட்சத்தில் நாம் தேவைப்படும் தருணத்தில் மட்டும் ATM மையத்தில் நுழையும் போது ATM கார்டை ஆன் செய்து விட்டு பின்னர் வெளியே வந்த உடன் ஆஃப் செய்யவும் . இவ்வாறு செய்யும் பட்சத்தில் மோசடிகார்களுக்கு எந்த நேரத்தில் ATM கார்டு செயல்பாட்டில் உள்ளது என்பதை கணிக்க இயலாது.
    உங்கள் வங்கிகளில் கனரா வங்கி ஆஃப் போல இருக்கிறதா என்று கேட்டு டவுண்லோட் செய்து கொள்ளவும்.
கனரா வங்கி வாடிக்கையாளர்கள் *"Canara MServe app "* டவுண்லோட் செய்து கொள்ளவும்.
ஒரு பொது நலன் விரும்பி.....
நன்றி.
https://play.google.com/store/apps/details?id=com.mServeApp





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive