Padasalai AI Girl

Padasalai Youtube Subscribe Us

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

மண்டல அளவிலான திருக்குறள் பேச்சுப் போட்டியில் மூலத்துறை நடுநிலைப் பள்ளி மாணவிகள் முதலிடம்

ஸ்ரீராம் இலக்கியக் கழகம் கடந்த 1988ஆம் ஆண்டு முதல் திருக்குறள் விழாவை மிகச்சிறப்பாய் நடத்தி வருகிறது. இவ்விழாவின் ஒரு பகுதியாக மாணவர்களிடையே திருக்குறள் பேச்சுப்போட்டியினை நடத்தி வருகிறது. இக்கழகம் 11-08-2018 அன்று  கோவை சபர்பன் மேல்நிலைப் பள்ளியில், மண்டல அளவில் நடத்திய பேச்சுப்போட்டியில்,மூலத்துறை பள்ளியின்  எட்டாம் வகுப்பு மாணவி த.ஜீவஜோதிகா முதலிடத்தையும் இதே வகுப்பைச் சேர்ந்த சி.ஹேமா மூன்றாமிடத்தையும் பிடித்துள்ளனர். மற்றும் இப்பள்ளி சார்பில் கலந்து கொண்ட மேலும் 3 மாணவ மாணவிகள் ஆறுதல் பரிசுகளைப் பெற்றனர். மேலும் முதலிடம் பெற்ற மாணவி ஜீவஜோதிகா மாநில அளவில் சென்னையில் நடக்கும் போட்டிக்கும் தேர்வாகி உள்ளான்.
     பரிசு பெற்ற மாணவிகளை வட்டாரக் கல்வி அலுவலர்கள் தேசிங்கு மற்றும் ராஜேந்திரன், பள்ளித்தலைமை ஆசிரியை பத்திரம்மாள் மற்றும் சக ஆசிரியர்கள் திருமுருகன், மலர்விழி, ரவிக்குமார், அமுதா, அங்கையற்கண்ணி மற்றும் பரமேஸ்வரன் ஆகியோர் பாராட்டினர்.
  (புகைப்படக்குறிப்பு : முதல் பரிசுக்கான கேடயத்தை சபர்பன் பள்ளி தலைமையாசிரியையிடமிருந்து பெறும் மாணவிகள் ஜீவஜோதிகா மற்றும் ஹேமா, பரிசு பெற்ற மாணவ மாணவிகளுடன் பள்ளித் தலைமையாசிரியை மற்றும் சக ஆசிரியர்கள்)

நன்றியுடன்,
ஜெ.திருமுருகன்,mob 9788334907
கணித பட்டதாரி ஆசிரியர்,
ஊ.ஒ.ந.நி.பள்ளி,
மூலத்துறை.
 
 
 





0 Comments:

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"

Whatsapp Channel Follow Us " Padasalai | பாடசாலை"
Padasalai Official whatsapp channel follow

Recent Posts

Whatsapp

60 கோடி பார்வைகள் - பாடசாலை.நெட் - நன்றி தமிழகம்!

60 கோடி பார்வைகள் -   பாடசாலை.நெட்  - நன்றி தமிழகம்!

Blog Archive