பிப்ரவரி 15ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அட்டவணை வெளியீடு!


வருகிறபிப்ரவரி 15ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்படும் என தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

இன்று ஈரோட்டில் செய்தியாளர்களின் கேள்விகளுக்கு பதிலளித்த அமைச்சர் செங்கோட்டையன், "நாளை 2800 பள்ளிகளில் எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளை முதல்வர் தொடங்கி வைக்க உள்ளார். தொடர்ந்து படிப்படியாக அனைத்து பள்ளிகளிலும் முழுமையாக செயல்படுத்தப்படும்.எல்.கே.ஜி, யு.கே.ஜி வகுப்புகளுக்கென்று தனியாக ஆசிரியர்கள் நியமிக்கப்பட இருக்கிறார்கள்.
மார்ச் மாதம் நடைபெறவிருக்கும் பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு, ஜனவரி 22ம் தேதி முதல் தொடங்கவிருக்கும் போராட்டத்தை ஆசிரியர்கள் கைவிட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன்" என்றார்.
மேலும்,ஆசிரியர் தகுதித் தேர்வு எப்போது? என்ற செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த அமைச்சர், 'அதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.வருகிறபிப்ரவரி 15ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அட்டவணை வெளியிடப்படும்' என பதிலளித்தார்.

Share this

0 Comment to "பிப்ரவரி 15ம் தேதிக்குள் ஆசிரியர் தகுதித் தேர்வு குறித்த அட்டவணை வெளியீடு! "

Post a Comment

Dear Reader,

Enter Your Comments Here...